இதழ் 19

தொடரும் பனிக்காலம்

Image result for love feeling sketch

நித்தம் பொழியும்
வெண்பனியாய்
நினைவுகள்

ஈரம்தோய்ந்து குளிரில்
நடுங்கும் மலராய்
மனம்

குளிர்காய
உன் விம்பத்தீயேனும்
கிடைக்காதோ என ஏங்கும்
பேதை நான்

தணல் வெம்மை தரும்
மாயப் பனிக்கட்டி நீ

காலநதிக்கரையில்
புதிதாய் பூத்திருக்கும்
காளானாய் நாம்

ஓர் ஆரத்தில் கோர்க்கப்படும்
இரு இரத்தினங்களாகும்
நாளுக்கான காத்திருப்பு…

சாரளாய்த் தொடரும்
பேரின்பப் பெருங்காதல்

அத்தனையும் குளிராய்
எனைச் சூழ…

ஓலைக் குடிசையில்
உனை நினைத்து
கவிபாடி கரைகிறேன்

எட்டிநின்று கண்சிமிட்டி
மறைகின்றாய் நீ
தருவாக…

Related posts

அட்டைப்படம் சொல்லும் கதை

Thumi2021

ஆசிரியர் பதிவு

Thumi2021

மறுபக்கம்

Thumi2021

Leave a Comment