இதழ் 21

ஈழச் சூழலியல் – 08

சுற்றுலாத்துறை

ஈழச்சூழலியலோடு நேரடியாக தொடர்புபடுகின்ற விடயப்பரப்பாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.எமது நாடு சுற்றுலாத்துறை வழி வருவாயினை மொத்த தேசிய உற்பத்தியின் பெரும்பங்காக கொண்டமைந்துள்ளது.அதாவது 2020 ம் ஆண்டு ஏறத்தாழ 12.5% மொத்த,தேசிய உற்ப்ததிக்கு சுற்றுலாத்துறை பங்காற்றியிருக்கிறது..2001ம் ஆண்டளவில் 6.7% ஆக இருந்த மொத்த தேசிய உற்பத்தியின் மீதான சுற்றுலாத்துறையின் பங்களிப்பானது இன்றையளவில் வருடாந்த சராசரி அதிகரிப்பாக 3.6%இனால் வளர்ச்சியுற்று வந்திருக்கின்றது.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்துறையானது ஈழத்தினுடைய சூழலியலில் பெரிதளவாக தங்கியுள்ள ஒரு காரணியாகும்.எமது ஈழம் இந்து சமுத்திரத்தினுடைய முத்து என அழைக்கப்படுவதனாலும்,நாட்டினுடைய அமைவிட முக்கியத்துவமும் சுற்றுலாத்துறையினுடைய ஊக்குவிப்பு காரணிகளில் ஒன்றாக காணப்படுகின்றது.மேலும் எமது நாட்டினுடைய தரைத்தோற்றம்,காலநிலை சிறப்பம்சங்கள் ,மக்களினுடைய வாழ்வியல் வழக்காறுகள் போன்றனவும் சுற்றுலாத்துறைப்பயணிகளின் வருகைக்கு வழிகோலி நிற்கின்ற காரணிகளாகின்றன. நாட்டின் பொருளாதார கொள்கை,அரசியல் ஸ்திரத்தன்மை போன்ற கட்டமைப்பு காரணிகளும் சுற்றுலாத்துறை வருவாயினை தீர்மானிக்கின்ற காரணிகளாக காணப்படுகின்றன.இலங்கைக்கு நாற்பக்கமும் கடலால் சூழப்பட்ட ஓர் அழகிய தீவாக அமைந்திருப்பதோடு சிறப்பான தரைத்தோற்ற அமைப்பையும் கொண்டது.மத்தியப்பகுதியில் மலைப்பகுதிகளானது ஏற்ற இறக்கமான தரைத்தோற்றமைப்பையும் ஏனைய பகுதிகளில் ஒப்பீட்டளவில் சமதரையான நிலப்பரப்பையும் கொண்டமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.ஏறத்தாழ கடல்  நீர்மட்டத்திலிருந்து 2524மீற்றர் உயரமான பீதுறுதாலகால அளவான உயரிய இயற்கை எழில் கட்டமைப்புக்கொண்டத எம்நாடு.எம்தேசமானது வடக்கு தெற்காக அல்லது நெட்டாங்காக ஏறத்தாழ 435Km நீளத்தினையும்,கிழக்கு மேற்காக அல்லது அகலாங்காக 240Km நீளத்தினையும் கொண்டமைந்துள்ளது.அதேபோல்”காலநிலையிலும் மழைவீழச்சி கோலங்களுக்கு ஏற்றாற்போல ஈரவலயம்,உலர்வலயம்,இடைவலயம் எனப்பிரிக்கப்பட்டு காணப்படுகிறது.

இவ்வழகிய சிறிய தீவினுள் 36C அளவிலான உயர் வெப்பநிலையையும் 14C அளவிலான குளிரான வெப்பநிலையினையும் சமகாலகட்டத்தில் அனுபவிக்கக்கூடிய இயல்தகவு காணப்படுதல் சிறப்பம்சமாகும்.பல பெயர் சொல்லக்கூடிய அழகிய மலைகள்,ஆறுகள்,காடுகள்,வரலாற்றுதலங்கள்,சரணாலயங்கள்,நூதனசாலைகள்,நூலகங்கள், நினைவிடங்கள், கடற்பகுதிகள் போன்ற பல்வேறுபட்டகாரணிகள் சுற்றுலாப்பயணிகளை கவரும் தளங்களாக காணப்படுகின்றன.அழகிய மலைகளும் அவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் ஆறுகளும் இயற்கையோடு எழில் கொஞ்சி தருகின்ற காட்சிகளை தரிசிக்கவெனவே பல உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.அந்த வகையில் இலங்கையின் மிக நீளமான ஆறாக காணப்படும் மாகாவலி கங்கையை ஓர் உதாரணமாக குறிப்பிடலாம்.இந்த ஆறானது ஏறத்தாழ 331Km நீளமுடையதாகும்.அதே போல் அழகிய மற்றும்”உயரமான நீர்வீழ்ச்சியாக பம்பரகந்த நீர்வீழ்ச்சியினை குறிப்பிட முடியும்.அத்தோடு தீவளாவிய கடற்கரை பட்டிகையினுடைய நீளமானது ஏறத்தாழ 1300Km ஆகும்.அத்தோடு ஈழத்தினுடைய பாரிய பொருளாதாரத்துறைகளான விவசாயம், கைத்தொழல்துறை ஆகியனவும் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் பெரும் பங்காற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக பல்வேறு இயற்கை அம்சங்களோடு அமைந்த ஈழச்சூழலியலானது சுற்றுலாத்துறைக்கு சிறப்பான பங்களிப்பினை வழங்குகின்ற போதிலும் நாமும் எமது,தேசத்துக்குரித்தான சுற்றுலாத்துறையினை நிலைபேறான தன்மையுடன் பேணிப்பாதுகாத்து பயணப்பட வைத்தல் அவசியமாகும்.சுற்றுலாத்துறையினுடைய நிலைபேறானதன்மை என்பது குறித்த துறையினுடைய தொடர்ச்சியான இயங்குதன்மை மற்றும் வளநுகர்வின் போதான கையாளுகை என்றவாறாக ஆராயப்பட வேண்டியதொன்றாகும்.நாம் நமது சூழல் சார்ந்த கரிசரனையோடு எமது சூழலை பாதுகாத்தும் .அழகூட்டியும் வைத்திருப்பதே சுற்றுலாத்துறையினுடைய மேம்பாட்டுக்குரிய அடிப்படை கைங்காரியமாக அமையும்.சுற்றுலாத்துறைக்கென சூழலை தயார்படுத்துதல் என்பதே பெரியளவான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்த வல்ல முயற்சியாண்மை துறையாகும்.சுற்றுலாத்துறை,சூழல்,மனிதவளம் மூன்று அம்சங்களையும் ஒன்றிணைத்து சிந்திப்போமாக இருந்தால் நிச்சயமாக நாட்டின் அனைத்து பிரஜைகளின்,கூட்டுமுயற்சியே சுற்றுலாத்துறை என்றாகும்.ஈழத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும்,செயற்படுத்துவதற்கும் என தனியான அமைச்சு மற்றும் அதிகாரசபை ஆளணிகள் செயற்பட்டு வருவதோடு பல தன்னார்வ நிறுவனங்களும் பணியாற்றுகின்றன.பிரதேசவாரியாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மிக எளிமையாக கூற வேண்டுமாயின் ஓர் பல்கலைக்கழகத்தின் வாயிலாக தன் உயர்நிலைக்கல்வியினை நிறைவு செய்து வெளியே வரும் பட்டதாரி இளை(ஞன் தொடக்கம் ,ஈழத்தின் ஏதோ ஒரு மூலையில் பின்தங்கிய பகுதியில் உள்ளுர்”உள்ளீட்டு பொருள் விற்பனை செய்யும் கடைகோடி மனிதன் வரை சுற்றுலாத்துறையில் தங்கியிருப்பதோடு தாக்கமும் செலுத்துகின்றனர்.

சுற்றுலாத்துறை சார்ந்து பல்வேறு முயற்சியாண்மை முயற்சிகளை,கைத்தொழில்களை,பொழுதுபோக்கு கட்டமைப்புகளை நாம் பிரயாணிகளை கவரும் விதமாக கட்டியெழுப்ப முடியும்.அப்படியான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது சூழலின் நிலைபேறானதன்மைக்கு பாதகமற்றதாக மேற்கொள்ளுதல் அவசியமாகும்.சுற்றுலாத்துறை பாரிய  இலாபமீட்டும் தொழில்முயற்சியின் பரிமாணமாகும்.அந்நிய செலாவணியை நாட்டுக்கு மீட்டுத்தரும் அரிய சந்தரப்பமாகும்.ஆகையால் நாட்டின்  அனைத்து குடிமக்களும் அதன் முக்கியத்துவப்பொறுப்புணர்ந்து செயற்படுதல் காலக்கட்டாயம் என்றாகிறது.நாட்டின் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகள் சுற்றுலாத்துறையினை பெரியளவில் பாதிப்படைய செய்தன. 2004ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை சீற்றம் எம்மவர்கள் வெளிநாட்டவர்களென ஏறத்தாழ 38000 பேரின் உயிரை காவுகொண்டது.இத்தோற்றப்பாடு சர்வதேச ரிதியில் பாரய அச்சப்போக்கினை குறிப்பிட்ட காலப்பகுதியில் நிலவச்செய்தது.அத்துடன் இதனால் கடற்கரை பகுதிகளை அண்டிய எத்தனையா கிராமங்கள் அழிவுற்றதுடன்,சுற்றீலாத்தளங்களும் சேர்ந்தே அழிவுற்றதும்,மாசுபட்டதுமான சூழ்நிலைக்கு”ஆளாகின.தொடர்ந்து உள்நாட்டில் நிலவிய போர்ச்சூழ்நிலைகளால் பயணத்தடைகள் பெரிதும் சுற்றுலாத்துறையை பாதித்தது.அண்மையில்தேவாலயங்களிலும்,சுற்றுலா விடுதிகளிலும்  ஏற்படுத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் ஏறத்தாழ 250க்கு அதிகமான உயிர்களை காவு கொண்டது.இத்தாக்குதலால் இறந்தவர்களில் கணிசமானோர் வெளிநாட்டவர்கள் ஆவர்.இதனால் சர்வதேச ரிதியில் சிவப்பு எச்சரிக்கை உருவானதோடு,பல நாடுகள் பயணத்தடை வித்தன,சர்வதேச கண்டனங்கள் எழுந்தன,இறுதியாக கொரணா தொற்றினாலும் பாரயளவாக சுற்றுலாத்துறை சரிவு”கண்டமை நாமறிந்த யதார்த்த உண்மையாகும்.இவ்வாறாக பல்வேறுபட்ட சம்பவங்கள் சுற்றுலாத்துறையை பாதிப்பைடைய செய்திருந்தாலும் நாடாளவிய ரீதியிலும்,சர்வதேச மட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட மீள் கட்டமைவு வேலைத்திட்டங்கள் ஊடாக அரசியல்,சமூக,பொருளாதார.காலாச்சார மற்றும் பண்பாட்டு ரீதியான மீள் எழுச்சி போக்குடன் இன்றும் ஆசியாவிலும்,உலகளவிலும் சிறப்பான தரவரிசைக்குட்படுத்தப்பட்ட சுற்றுலாத்தளமாக நமது நாடு விளங்குகின்றது.

ஈழத்தினுடைய சுற்றுலாத்துறையின் மிகப்பாரிய கண்கவர் பரப்பாகவும்,கவனத்தை ஈர்க்கும் பரப்பாகவும் யானைகளின் சவாரிகள் மற்றும் காட்சிப்படுத்தல்கள் காணப்படுகின்றன.ஈழத்தில் காணப்படுகின்ற யானை இனங்கள்”ஆசியாவில் பெரிய யானை இனங்களாக காணப்படுவதுடன்,அவை தமது இயற்கையான வாழிடங்களில் தற்போக்காக வாழுதலை கண்ணூடு காணுதல் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கச்செய்கின்றது..அதேபோல் ஈழத்தினுடைய தென்பகுதி கடற்கரைச்சூழலில் தற்போது அபாய சூழ்நிலையென அடையாளப்படுத்தப்பட்ட கடல் ஆமை இனங்களும் சுற்றுலாத்துறையின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.இவற்றினுடைய இருப்பையும் நிலவுகையையும் உறுதிப்படுத்த வேண்டியது அப்பிரதேச மக்களினுடையதும் உரிய ஸ்தாபனங்களினதும் கடமையாகும்.காரணம் அவற்றினுடைய முட்டைகள் களவாடப்பட்டு கறுப்புசந்தையில் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்க சம்பவங்களாக பதிவாகியுள்ளன.இவ்வாறாக கடற்கரை சூழல்,அங்குள்ள உணிரினங்கள் ,கனியவளபபாறைகள்,சதுப்புநிலத்தாவரங்கள்,ஈரநிலக்காடுகள் என பல்வேறுபட்ட சூழல்தொகுதிகளை இணைத்து சுற்றுலாத்தளங்களை நாடாவிய ரீதியில்அமைக்கக்கூடிய ஏதுகை காணப்படுகின்றது.

ஆராய்வோம்……….

Related posts

சத்தமில்லா ச(காப்)தம்

Thumi2021

தாஜ்மஹாலின் பேர்த்தி

Thumi2021

பார்வைகள் பலவிதம்

Thumi2021

Leave a Comment