இதழ் 21

பார்வைகள் பலவிதம்

உலகமே தடுப்பூசி எடுத்துக்கொள்கிறது.
தடுப்பூசி எடுக்காதவர்களை
தற்கொலைக் குண்டுதாரி என்கிறார்கள்.
தடுப்பூசி கண்டுபிடித்தவர்களை
யுக புருசர்கள் என்கிறார்கள்.
உணவு, உடை, உறையுளுடன்
ஊசியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஊசி ஏற்றாதவர்களை கிருமிகாவிகளாக்குமாறு சட்டம் இயற்றுங்கள்.
தடுப்பூசியை வைத்து வியாபாரம் நடக்கிறது.
தடுப்பூசியை வைத்து அரசியல் நடக்கிறது.
இங்கே,
தடுப்பூசியை வைத்து கலை நடக்கிறது.

இனியவன்

உலகம் புகழ்ந்த ஓவியமே
உனக்கும் தடுப்பூசியா?

ஆனாலும் இந்தத்தடுப்பூசியால் உனக்கு எந்தப்பயனும் இருக்கப்போவதில்லை

ஏன்?
ஏனெனில் நீ ஓர் ஓவியம்.
உன்னுடலில் எப்படி இந்த இரசாயனத்தைச் சேர்க்க முடியும்?

இருந்தாலும் வருத்தப்படாதே.
உன் உயிரணுக்களுள் உலகின் எந்தக் கிருமியாலும் உள்நுழைய முடியாது
உன் புன்னகையும் காலகாலத்திற்கு நிரந்தரமாய் உன்னுடன் இருக்கும்.


இராவி நவிலன்

மொழி பெயர்க்க முடியாப் புன்னகையால்
டாவின்ஸிக்கு உயிர் தந்த மோனலிசா.
ஏற்றிக் கொள்ளும் தடுப்பு மருந்துகள்
ஏற்றுமதி செய்வதும் எமக்குப் பெருமையே.

சந்திரனார்.

Related posts

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

Thumi2021

தனிப்பெரும் துணையே!

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 18

Thumi2021

Leave a Comment