இதழ்-27

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 01

ஆய்வுச்சுருக்கம்

பி.ஆர்.ராஜமய்யர் அவர்களால் எழுதப்பட்ட கமலாம்பாள் சரித்திரம், இலக்கிய வடிவமும், நடையழகும், தீவிரமும், பாத்திரங்களின் அதீதமற்ற காட்சியோடு; கூடிய முழுமையான நாவல் ஆகும். தத்துவ வீச்சோடும், கச்சிதமான உருவ அமைப்போடும் அமைந்து, நாவல் என்ற இலக்கிய வடிவத்திலும், திறனாய்வு அடிப்படையிலும் தமிழின் முதல் நாவல் என்ற தகுதியைப் பெறுகிறது.

கதையமைப்பில் மிகுந்த தனித்தன்மை கொண்டது. இன்றுவரையும் கருவினால் இதற்கு இணையாகப் பேசக்கூடிய மற்றொரு நாவல் எழுதப்படவில்லை. எளிய நடையில் முற்றிலும் சமகால வாழ்வின் சிக்கல்களாலும், மெலிதான நகைச்சுவை மற்றும் கதைப்பின்னலாலும் அமைத்துள்ளார்.

அக்காலத்து நிலமானிய சமூக நடைமுறைகளையும், நிலமானிய சமூகத்தில் கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து போகின்ற நிலையையும் இந்நாவலில் பார்க்க முடியும். அதுமட்டுமன்றி அக்காலப் பெண்களின் மனப்போக்கு, அக்காலச் சமூகநிலை, குடும்பங்களின் பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், பிள்ளை வளர்ப்பு முதலான பல்வேறு விடயங்களை உணர்த்துவதற்கு யதார்த்த நெறி ராஜமய்யரால் கையாளப்பட்டுள்ளது.

எனவே இத்தகைய சிறப்புக்களோடு கூடிய ‘கமலாம்பாள் சரித்திரம்”, தமிழ் நாவல் வரலாற்றில் எத்தகைய முக்கியத்துவத்தினைப் பெறுகிறது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். எனவே தொடக்ககாலத்திலேயே உருவ, உள்ளடக்கத்தில் சிறப்புற்றுத்தோன்றிய நாவல் என்னும் பெருமையைக் ‘கமலாம்பாள் சரித்திரம்” பெறுகின்றது எனலாம்.

திறவுச் சொற்கள்:
தமிழ்நாவல் வரலாறு, பி.ஆர்.ராஜமய்யர், கமலாம்பாள் சரித்திரம், முக்கியத்துவம்.

ஆய்வுநோக்கம்

நாவல் என்ற இலக்கிய வடிவத்திலும், திறனாய்வு அடிப்படையிலும் தமிழின் முதல் நாவல் என்ற திறனாய்வாளர்களின் கருத்தினை மெய்ப்பிக்கும் இந்நாவல், தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் பெறும் வகிபங்கு எத்தகையது? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்காகும். ஆய்வு முறையியல் இவ்வாய்வானது பண்புசார் முறை, விபரணப் பகுப்பாய்வு முறை ஆகிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கு, முதலாம் நிலைத் தரவாகக் ‘கமலாம்பாள் சரித்திரம்;” பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இரண்டாம் நிலைத்தரவுகளாக இந்நாவல் சார்ந்த கட்டுரை நூல்கள், சஞ்சிகைகள் போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அறிமுகம்

உரைநடையில் எழுதப்படுகின்ற நீண்ட கதை கூறும் இலக்கியமாக நாவல் அமைகின்றது. வாழ்க்கையும், வாழ்க்கை பற்றிய நிகழ்வுகளும் உரைநடையில் எழுதப்படுமேயானால் அது நாவலாகும். ‘புதுமை” என்ற பொருளைத் தரவல்லது நாவல் இச்சொல் ‘ழெஎநடய’ என்ற இத்தாலிய மொழிச்சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டது. இது மேற்குலகில் நிலமானிய சமுதாய அமைப்பின் சிதைவிற்குப் பின்னர் தோன்றிய முதலாளித்துவ சமுதாய அமைப்பின் தேவைகளுக்காகஉருவாக்;கப்பட்ட இலக்கிய வடிவமாகும். பின்னர் ஐரோப்பியரின் கீழைத்தேய வருகையைத் தொடர்ந்து உரைநடையின் வளர்ச்சியாகத் தமிழிலும் நாவல் இலக்கியம் தோற்றம் பெற்றது. தமிழ் நாவல் வரலாற்றில் ‘பிரதாபமுதலியார் சரித்திரம்” வேதநாயகம் பிள்ளையால் முதலில் எழதப்பட்டது.

ஆனாலும் நாவல் என்ற இலக்கிய வடிவத்திலும், திறனாய்வு அடிப்படையிலும் முதல் நாவல் என்ற தகுதியைப் பெற வேண்டியது ராஜமய்யரின் ‘பிரதாபமுதலியார் சரித்திரம்” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இத்தகைய ‘கமலாம்பாள் சரித்திரம்” எனும் நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பெறும் முக்கியத்துவத்தினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

முன்மாதிரியாக அமைந்த நாவல்

‘கமலாம்பாள் சரித்திரம்” இலக்கிய வடிவமும், நடையழகும், தீவிரமும் பாத்திரங்களின் அதீதமற்ற வண்ணங்களும் கூடிய முழுமையான நாவல். தமிழில் நாவல் இலக்கியத்தின் முன்மாதிரியாக அமைந்த இந்தநாவல் இத்தனை அழகோடும், தத்துவ வீச்சோடும் கச்சிதமான உருவ அமைப்போடும் அமைந்தமை சிறப்புக்குரியது. நாவல் என்ற இலக்கிய வடிவத்திலும், திறனாய்வு அடிப்படையிலும் தமிழின் முதல் நாவல் என்ற தகுதியைப் பெற வேண்டியது இந்நாவல் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நாவலின் நோக்கம்

ராஜமய்யர் பொய் என உலகத்தை நம்புவதால் தனது கதையையும் பொய்யாகவே காண்கிறார். இவரின் தத்துவம் அகவயமானதாகும். சமூகச்சிக்கல்களுக்குச் சிந்தனை அளவிலேயே தீர்வு காண முயல்கிறார். கடவுளைக் காணும் அகவாழ்வே இவருக்கு முக்கியமாகப்படுகின்றது. ‘இவ்வுலகில் உளன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா, பல க;ட ந;டங்களை அனுபவித்துக் கடைசியாக நிர்மலமான ஒரு இன்பநிலை அடைந்ததை விபரிப்பதே இந்த நவீனத்தின் முக்கிய நோக்காகும்.” என்று ராஜமய்யர் தன் சொந்த மொழிகளில் குறிப்பிடுகின்றார்.

ஆய்வு தொடரும்…

Related posts

சித்திராங்கதா – 27

Thumi2021

நவீன வேதாள புதிர்கள் 06 –

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 24

Thumi2021

Leave a Comment