இதழ் 86

சூரிய சக்தி  

உலகில் சூரிய சக்தி (Solar Energy)  மூலம் பெரும் பலன் அடைதல்  என்பது பெரிய அளவில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது என்று சொன்னால் யாரும் அதிசயமாகப் பார்க்கப் போவதில்லை. எனினும் சூரிய சக்தி என்றால் என்ன என்பதற்குரிய சரியான விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் என்பதும் விறைத்துப் போகாத உண்மை.    

உலகை பலவிதமான சக்திகள் இயங்க வைக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்தது. எண்ணெய் நிலக்கரி அணு போன்றன உடனடியாக ஞாபகத்துக்கு வந்தாலும் எவருமே இயற்கை எமக்களித்த பஞ்ச பூத சக்திகளையும் மறந்து விடுவதற்கில்லை.  

அவற்றுள் வானிலிருந்து பெறப்படும் சூரிய சக்தி பிரதானமானது. சூரிய கதிர்களிலிருந்து வெளிவரும் வெப்பத்தையும் வெளிச்சத்தையும் எமக்கு தேவையான விதத்தில் பயன் படுத்தும் ஆற்றல் சூரிய சக்தி ஆகும். சூரிய வெப்பத்தை சேமித்து அதிலிருந்து கணிசமான அளவு சக்தியை எமது தேவைக்கேற்ப உருவாக்குகின்றார்கள்.  

சூரிய சக்தி மூலம் மின்சாரம் சேமிக்கப்படுகின்றது. பூமி வெப்பமயமாவது குறைக்கப்படுகின்றது. அநாதியில் கண்ணடி ஊடாக சூரிய சக்தி சேமிக்கப்பட்டது. 1955 ம் ஆண்டுக்குப் பின்னரே வீடுகளுக்கு தேவையான சூரியசக்தி பாவனைக்கு வந்தது. தற்பொழுது முழு வீச்சுடன் சூரிய சக்தியின் பாவனை பிரபலமாகி வருவதற்கு  முன்னேற்றமடைந்துள்ள தொழில் நுட்பவியலும் பெரும் பங்காற்றுகின்றது.  

சூரிய சக்தியானது இடைவிட்டு நிகழக்கூடிய சக்தி வளமாகும். எல்லா நேரத்திலும் கிடைக்காது. எனினும் எப்பொழுது அதனை பெற முடியும் என்பதை யாவரும் இலகுவில்  அறிவர். ஆனால் தொழில் நுட்ப வல்லுனர்கள் வெப்ப சேகரிப்புசாதனமான சூரிய மின் குவிப்பான் அல்லது மாறுதிசையாக்கி  (Inverters) போன்ற உபகரணங்கள் மூலம் சூரிய சக்தியின் வெப்பத்தை சேமித்து இரவு முழுவதுமோ அல்லது தேவைக்கேற்பவோ பயன் படுத்திக்கொள்வர்.

மாறுதிசையாக்கி என்பது நேர்திசை மின்னோட்டத்தை மாறுதிசை மின்னோட்டமாக மாற்றும் ஒரு மின் சாதனமாகும். இது பொதுவாக மின்கலங்களில் சேமிக்கப்படும் நேர்த்திசை மின்னோட்டத்தை வீடுகளில் பயன்படுத்தப்படும் மாறுதிசை மின்னோட்டமாக மாற்றுவதற்கு பயன்படுகிறது.  

உலகிலேயே  சூரிய சக்தியை உருமாற்றி உருவாக்கும் மிகப் பெரிய ஆலை கலிபோனியாவில் உள்ள மோகாவ் பாலைவனத்தில் உள்ளது.இங்கு சூரிய கதிர்களால் கொதிக்க வைக்கப்படும் எண்ணெயிலிருந்து  அருகே உள்ள பல படடினங்கள் மின் சக்தியை பெற்றுக் கொள்கின்றன.

சூரிய மின் சக்தி என்பது சூரிய ஒளியை பயன்படுத்தி ஒளியை மின்னோட்டமாக மாற்றுவது. இதற்கான கருவி சூரிய மின்கலம்  (Photovoltaics)  என்றோ அல்லது சுருக்கமாக   (PV) என்றோ அழைக்கப்படுகின்றுது.  

சூரிய மின் கலம் மூலம் நேரடியாகவோ அல்லது முழுச்செறிவூட்டும்  சூரிய ஆற்றல் முறையில் மறைமுகமாகவோ இது  செயற்படுகின்றது. சூரிய மின் கலம் மூலம்  கிடைக்கும் சூரிய மின் சக்தி வழக்கமாக படிம எரிபொருளை கொண்டு வெளியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் தேவையை குறைக்கும்.

Related posts

விமானத்தில் பறந்துகொண்டே திருமணம் செய்த பணக்கார ஜோடி

Editor

மன அழுத்தத்திலிருந்து மீண்டெழும் வழிமுறைகள்

Editor

இளைய ஆற்றலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த செஞ்சொற்செல்வர் அறநிதியச் சபை

Editor

Leave a Comment