இதழ் 87

தொல்லியல் துறைசார் கற்கையின் முக்கியத்துவங்கள்

தற்கால உலகில் வளர்ச்சி அடைந்து வருகின்ற துறைகளில் ஒன்றாக தொல்லியல் துறையும் காணப்படுகின்றது. அந்த வகையில் தொல்லியல் என்றால் என்ன என்பது பற்றி பார்க்கின்ற போது தொல்லியல் துறை என்பது கடந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் கலாச்சாரம் சமூகங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்து அறிந்துகொள்ள உதவும் ஒரு முக்கியமான துறையாகும். இது அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கும் கட்டிடங்கள்இ கருவிகள் கலைப்பொருட்கள் கல்லறைகள் போன்றவற்றை ஆய்வு செய்வதன் மூலம் மனித வரலாற்றை மறுசீரமைக்க உதவுகிறது.

இத் தொல்லியலானது பொருளாதார தொல்லியல் (Economic Archology) இன மரபு தொல்லியல் (ethno archeology) நீரடி அகழாய்வு (Underwater archaeology) ஆகாய நிழற் பட தொல்லியல் ((Aerial Archaeology) அழிவு மீட்பு தொல்லியல் (solvage archaeology) என வகைப்படுத்தப்படுகின்றது. தொல்லியல்கற்கையின் முக்கியத்துவங்கள் சில இங்கே வரலாற்றை அறிதல் எழுதப்பட்ட ஆதாரங்கள் இல்லாத காலங்களில் வாழ்ந்த மனிதர்களின் வரலாற்றை தொல்லியல் ஆய்வுகள் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும். அவர்களின் நாகரிகம்இ தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக அமைப்புகள் பற்றிய தகவல்களை இது தருகிறது.

கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் தொல்லியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்படும் கலைப்பொருட்கள், நினைவுச்சின்னங்கள், மற்றும் இதர கலாச்சார சின்னங்கள் நமது பாரம்பரியத்தை மதித்து, பாதுகாப்பதற்கான அவசியத்தை உணர்த்துகின்றன. இவை வருங்கால சந்ததியினருக்கு நமது முன்னோர்களின் பெருமைகளையும், வாழ்க்கை முறைகளையும் அறிந்துகொள்ள உதவுகின்றன. நவீன சமூகங்களுக்குப் பாடம் பண்டைய சமூகங்கள் எவ்வாறு சவால்களை எதிர்கொண்டனர், புதிய தொழில்நுட்பங்களை எப்படி உருவாக்கினர், ஒரு நாகரிகம் எப்படி வளர்ந்தது அல்லது வீழ்ச்சியடைந்தது என்பதை தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இது நமது இன்றைய சமூகப் பிரச்சினைகளுக்கும், எதிர்காலத் திட்டமிடலுக்கும் உதவியாக இருக்கும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொல்லியல் துறை, கார்பன் டேட்டிங் (Carbon dating), புவியியல் ஆய்வு (Geographical survey)), கணினி மாதிரியாக்கம் (Computer modeling) போன்ற பல நவீன அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இது அறிவியல் துறைகளின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கிறது.

உள்ளூர் சமூகங்களுக்குப் பொருளாதார நன்மைகள் தொல்லியல் தளங்கள் பாதுகாக்கப்பட்டால், அவை சுற்றுலா மையங்களாக மாறக்கூடும். இது உள்ளுர் மக்களுக்கு வேலைவாய்ப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கும்.மொத்தத்தில், தொல்லியல் கற்கை என்பது வெறும் பழமையான பொருட்களைப் பற்றிய ஆய்வு மட்டுமல்ல, அது நமது அடையாளத்தையும், நமது முன்னோர்களின் பெருமைகளையும், நாம் எங்கிருந்து வந்தோம் என்பதையும் புரிந்துகொள்ள உதவும் ஒரு பாலமாகும்.வரலாற்று உருவாக்க பயன்படும் பலவிதமான மூலகங்களுள் தொல்லியல் துறை ஆனது முதன்மை வகிக்கின்றது.

குறிப்பாக வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் வாழ்க்கை முறை பற்றிய விவரங்களை அறிவதில் தொல்லியலே முக்கிய இடத்தினை பெறுகின்றது அதாவது எழுத்துச் சான்றுகளே இல்லாத கற்கால மக்களின் வரலாற்றினை கணிக்க அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் வாழ்ந்த இடங்களை கண்டுபிடித்து அவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டு கிடைக்கப்பெறும் சான்றுகளின் ஊடாக மனிதன் எவ்வாறு நாகரிகத்தை நோக்கி முன்னேறி நான் என்பதனை எடுத்துக்காட்டுவது தொல்லியலாகும்.பண்டைய மனிதனின் 5 லட்சம் ஆண்டுகால நீண்ட நெடிய வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் மனிதன் எவ்வாறு இயற்கைச் சவால்களை சந்தித்தான் வெற்றிகொண்டான் என்பதனை தெளிவுபடுத்துவதே தொல்லியலாக காணப்படுகின்றது. மனிதனின் வாழ்க்கை வரலாறு அவன் தன் புறச் சூழல்களுடன் நடத்திய போராட்டங்களுடன் கூடிய கதையே என்பது இதன் மூலம் புலன் ஆகின்றது. ஏற்ற சூழலுக்கு ஏற்ப பண்டைய கால மனிதன் தன்னை மாற்றிக் கொண்டு தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து முன்னேற்றம் கண்டான் என்பதை அறிய துணை புரிவது தொல்லியல் ஆய்வு. இது பழைய கற்காலம்இ புதிய கற்காலம் இடை செம்புக்காலம் இரும்புக்காலம் இ பெருங்கற்காலம் முதலான காலகட்டங்களில் பல்வேறு சாதனைகளை படம் பிடித்து காட்டுவதாகவும் தொல்லியல் காணப்படுகின்றது.

பண்டைய கால மனிதனுடைய பேராற்றலை வெளிப்படுத்துவதில் உலகெங்கிலும் அகழ்வாய்வுகளே (Excavation) முக்கியம் வகிக்கின்றன உதாரணமாக ஆந்திரா நாளந்தா கரப்பா காவிரிப்பூம்பட்டினம் அழகன்குளம் கொற்கை கருவூர் போன்ற பல வரலாற்று புகழ்மிக்க இடங்களில் இடம் பெற்ற அகழ்வாய்வுகள் முக்கியம் வைக்கின்றது. இவை வரலாற்றின் காலத்தையே பின்னோக்கி தள்ளி விட்டன. உதாரணமாக மொகஞ்சதாரோ – கரப்பா அகழ்வாய்வுகள் இந்திய வரலாற்றின் தொடக்க காலத்தை பன்னூறு ஆண்டுகள் பின்னோக்கி சென்றதை நாம் அறிவோம் சிந்து சமவெளி நாகரிகத்தின் இறுதிக்காலம் வரலாற்று காலத்தின் தொடக்கம் வரையினாலான இந்திய மனிதனின் நாகரிக கூறுகளை வெளிப்படுத்துவதாகவும் தொல்லியல் காணப்படுகின்றது.

ஆரம்ப காலத்தில் வாழ்ந்த மனிதன் எவ்வாறு மேய்ச்சல் தொழிலை விட்டு வேளாண்மைக்கு மாறினான்? எவ்வாறு நேர்த்தியான மட்பாண்டங்களை பெருமளவில் உற்பத்தி செய்தான்? செம்பு இரும்பு போன்ற உலோகங்களை பயன்படுத்தி எவ்வாறு வீட்டு உபயோகப் பொருட்கள் போர் கருவிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய கற்றுக் கொண்டான்? எவ்வாறு வீடுகளை அமைக்க கற்றுக்கொண்டான்? காட்டு விலங்குகளை வேட்டையாடிய மனிதன்
எவ்வாறு அவற்றை வீட்டு மிருகமாக வளர்க்க கற்றுக்கொண்டான்? இறந்தவர்களை திறந்த வெளியில் தூக்கி எறிந்த அவன் எவ்வாறு இறந்தவரை அடக்கம் செய்ய கற்றுக்கொண்டான்? தானியங்களை எவ்வாறு சேமித்து வைத்துக் கொள்ள கற்றுக் கொண்டான்? போன்ற பல அம்சங்களை தொல்லியல் அகழ்வுகளின் ஊடாக கிடைக்கப்பெறும் தொல்பொருள் சான்றோர்களின் ஊடாக விடை பெற்று தரும் துறையாக தொல்லியலும் அதன் அடையாளமாக விளங்கும் தொல்லியலாளர்களும் காணப்படுகின்றனர்.முன்பு தொல்லியல் ஆய்வுகள் என்பது தொல் பொருட்களின் பட்டியலாக மட்டுமே இருந்துள்ளது.

ஆனால் தற்பொழுது தொல்லியல் ஆய்வாளர்கள், அத்தொல் பொருட்களைப் பற்றி, விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, அவற்றை ஒத்த பொருட்கள், உலகின் பல்வேறு இடங்களில் கிடைப்பவற்றை ஒப்பாய்வு செய்து அதன் மூலம் அவற்றைப் பயன்படுத்திய மக்களின் வாழ்க்கை முறையை கணிக்க முற்பட்டனர். இந்த ஆய்வின் மூலம் அவற்றைபயன்படுத்திய மக்களின் காலம் யாது? அவை எவ்வாறு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களாலும் பயன்படுத்தப்பட்டன? போன்ற பல வினாக்களுக்கு விடையாக தொல்லியல் உள்ளது.தொல்லியல் ஆய்வுகள் முன்பு, தொல்பொருள்களைப் பட்டியலிடும் பணியாக மட்டுமே கருதப்பட்டது.

ஆனால் தற்பொழுது தொல்லியலில் ஆய்வு மேற்கொள்ளும்போது ஆய்வாளர்கள் அவற்றை ஒத்த பொருள்கள் வேறு எப்பகுதிகளில் கிடைத்துள்ளன என்றும் அவற்றின் மூலம் அவற்றைப் பயன்படுத்திய மக்களின் வாழ்க்கை முறையைக் கணிக்கவும், காலத்தை நிர்ணயிக்கவும் செய்கின்றனர்.இதில் பல வகையான ஆய்வு முறைகள் ஒப்பீட்டு முறையில் கடைப்பிடிக்கப்படுகின்றன. வரலாறு என்பது உணர்வுகளின் அடிப்படையில் எழுதப்படாமல் உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும். உறுதியான தொல்லியல் ஆதாரங்கள் தான் வரலாற்றுக்கு வலுச்சேர்க்கும்.

இலக்கியம் கூறும் பல ஊர்கள், செய்திகளுக்கு தொல்லியல் ஆதாரங்கள் வலுச் சேர்ப்பவையாக உள்ளன. ஒரு குறிப்பிட்ட முதன்மைச் சான்றினை மட்டும் வைத்து ஆய்வு மேற்கொள்ளும்போது அது முழுமை பெறாமல் அல்லது ஆய்வின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர இயலாமல் போய்விடுகிறது. எடுத்துக்காட்டாக, சங்க இலக்கியங்களில் சமணர் பற்றியோ, தமிழரின் கடல் கடந்த வாணிகம் பற்றியோ, தமிழின் வரிவடிவ எழுத்துக்கள் பற்றியோ, மன்னர்களின் நாணயங்கள் பற்றியோ குறிப்புகள் அதிகமாகக் காணப்படவில்லை. தமிழகத்தின் மிகப்பழமையான கல்வெட்டுக்கள் காணப்படும் மதுரை மீனாட்சிபுரம் (மாங்குளம்) பகுதியில் சமணர் பள்ளி பல நூறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளது என அகழாய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இச்செய்தி எந்த இலக்கியத்திலும் காணப்படவில்லை. தொல்லியலில் கண்டறியப்பட்ட பல செய்திகள் இலக்கியங்களில் காணப்படவில்லை என்பதும் இலக்கியங்களில் பெரிதும் பேசப்படும் செய்திகளுக்கு தொல்லியல் ஆதாரங்கள் இன்னும் காணப்படாமல் உள்ளன என்பதும் முரண்பட்டவையாக உள்ளன.

எனவே இந்த தொல்லியல் துறையின் வளர்ச்சி என்பது பற்றி பார்க்கின்றபோது அபிவிருத்தி அடைந்த நாடுகளான ஜெர்மன் கனடா போன்ற நாடுகளில் வளர்ச்சியின் உச்சகட்டத்தையும் அபிவிருத்தி அடைந்து வருகின்ற இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் நாடுகளில் ஓரளவிற்கு வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதனையும் காணக் கூடியதாக இருக்கின்றது. ஏனவே தொல்லியல் கற்கை என்பது கடந்த காலத்தை ஆராய்வது மட்டுமல்ல, அது நமது அடையாளத்தையும், பண்பாட்டையும், நமது எதிர்காலத்தையும் வடிவமைக்க உதவும் ஒரு முக்கியத் துறையாகும்.

Related posts

காரணம் இல்லாமல் காரியம் இல்லை கண்டீர்களோ…?

Editor

மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகிறது தெல்லியூர் துர்க்காதேவியின் மகோற்சவம்

Editor

கழிவு வெளியேற்றத்தை நோய் என்று குழப்பாதீர்கள்

Editor

Leave a Comment