சமகால மானிட சமூகத்தில் தலைதூக்கி நிற்கின்ற முக்கிய பிரச்சினையாக, குறிப்பாக இளம் சமுதாயத்தின் வாழ்க்கையை பெரிதும் கேள்விக்குறி ஆக்கி வருகின்ற தீவிர பிரச்சினையாக விளங்குவது போதைவஸ்து (Drugs) ஆகும். இது உடல், உள, சமூக, ஆன்மீக சமனிலையை தாக்கி, ஆளுமையை சீரழிக்கும் நஞ்சாகக் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக போதைப்பாவனை என்பது மனதையும், உடலையும் பாதிக்கும் இரசாயனங்களை பயன்படுத்தி நிற்பதைக் குறிக்கும். உளவியலின் அடிப்படையில் அதிகபட்ச போதைப்பாவனை “நடத்தைப் பிறழ்வுகள்” ஏற்படுத்துவதாக ஆய்வுகள் குறிப்பிடப்படுகின்றன. போதை அடிமை என்பது போதைப் பழக்கத்தைக் கொண்ட ஒரு நபர் தெரிந்தோ Æ தெரியாமாலோ தற்போது வரை போதையில் தங்கியிருக்கும் நிலையை குறிக்கின்றது. இவ் நிலைமை “Drug Addction / Drug Dependency” என அழைக்கப்படும் ஒரு நோய் நிலைமை ஆகும். இது தனிநபர் சம்பந்தப்பட்டதாக அமைந்து பின்பு பிறழ்வுகள் மற்றும் பிரச்சினைகள் சமுதாயத்தில் பல்வேறுபட்ட பாதக விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இது நரம்பியல் மண்டலத்தை பாதித்து உணர்ச்சிகள், சிந்தனை, நடத்தை மற்றும் உணர்வுகளை மாற்றக்கூடிய தன்மை கொண்டவை.
போதைக்கு அடிமையாகிய ஒருவர் சமுதாய வாழ்விலிருந்து விலகி அந்நியமாவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உள்ளது. போதைப்பாவனையால் பொதுவிதிகளை முறிக்கும் நடத்தைகள் ஏற்படுவதாக துநளளழச கூறுகின்றார். அத்துடன் இது ஓர் Deviant Behaviour (பிறழ்வு நடத்தை)” என்றும் சுட்டிக் காட்டுகின்றார். உலகளாவிய ரீதியில் பல்வேறு வகையான போதைவஸ்துக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மது (அங்கஹஸ்), கானாபிஸ், கெரோயின், மோர்பின், கொடின், பாபிரு ஹோறல், அம்ராமனஸ், மெஸ்கிரயின், மெற்டேன் கொகேயின், L.S.D, D.M.T,, சிலோபின், புகையிலை, கஞ்சா, ஐஸ் முதலான பல்வேறு வகையான போதை வஸ்துக்கள் பல்வேறு தாக்கங்களை உலகளாவிய ரீதியில் உண்டுபண்ணுகின்றன.
நமது நாட்டிலும் (இலங்கையிலும்) அண்மைக்காலங்களில் அதிகரித்த பாவனை காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ‘இலங்கையில் நாளாந்தம் 40 -50 பேர் மதுப்பழக்கத்தால் மரணமடைகின்றனர் என மது மற்றும் போதைப்பொருள் மையம் தெரிவிக்கின்றது. அத்துடன் சாராயம், பியர் ஆகிய மதுபான நுகர்விற்காக சுமார்; 690 மில்லியன் ரூபாவை நாளொன்றிற்கு செலவிடுவதாகவும் கூறப்படுகின்றது. ‘தேசிய அபாயகர போதை திருப்பு சபை (National Dangerous Drugs control board – NDDCB)” 1984 இல் நிறுவப்பட்டது. இதின் அறிக்கைப்படி 40 000 மேற்பட்டோர் போதைப்பொருள் பாவனையின் மூலம் நிரந்திர அடிமையாக்கப்பட்டுள்ளனர் எனக் கூறுகின்றது. இவ் நிறுவனமானது போதைத் தடுப்பு, மீட்பு மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளைச் செய்வதுடன் விழிப்புணர்வுகள், ஆலோசனைகளையும் நிகழ்த்தி வருகின்றது.

போதை அடிமையாதலிற்கு பல காரணங்கள் காரணமாகின்றன. அந்தவகையில்
தவறான அறிக்கை மற்றும் நம்பிக்கை (போதை – வீரம், சந்தோசம், வலி நீக்கும், உ~hரை ஏற்படுத்தும் என்ற தவறான அறிக்கை மற்றும் நம்பிக்கை)
முறையான தண்டனைகள்
தாழ்வு மனப்பான்மை
ஒதுங்கியிருத்தல்
அதிகார உணர்வு
நாகரீக மாற்றம்
Enjoyment Purpose
சினிமா
தவறான நண்பர்கள் சேர்க்கை
காணப்படுகின்றன. அதிகாரத்தன்மை, போதையை அதிகமாக உள்ளெடுத்தல், சகிப்புத்தன்மை இன்மை, ஒதுங்கியிருப்பு, பொறுப்புக்களிலிருந்து விடுபடல், போதையில் அதிக நாட்டம், உடல் காயங்கள், போதை உள்தொடுப்பதில் ஆர்வம், விருப்பு போன்றவற்றை அதிகளவாகக் கொண்டிருப்பர்.
இதன் விளைவுகள் தனி நபரை மட்டுமல்லாது குடும்பம், சமூகம் என பாதிப்பை ஏற்படுத்தி உலகளாவிய ரீதியில் பல விளைவுகளையும் உண்டுபண்ணுகின்றன. அந்த வகையில்
உடல் – மூளை பாதிப்பு
நரம்பு மண்டல பாதிப்பு
தற்கொலை முயற்சி
ஈரல் பாதிப்பு
இதய பாதிப்பு
இரப்பை அழற்சி
உளம் – மறதி அதிகரிப்பு
வெறுப்பு, பயம்
திருமண வாழ்வு பாதிப்பு
பிரம்மை ஏற்படல்
பாலியல் திருப்தியின்மை Æ ஆர்வமின்மை
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமை
அதிகரித்த மனவெழுச்சிகள்
மனச்சோர்வு
சமூகம் – சமூகச் சீர்கேடுகள்
து~;பிரயோகங்கள்
சண்டைகள்
விபத்துக்கள்
குற்றச் செயல்கள் அதிகரிப்பு
விவாகரத்துக்கள்
பொதுச்சொத்துக்கள் நாசமாக்குதல்
குடும்பப் பிரச்சினை
முதலான பல்வேறுபட்ட விளைவுகள் ஏற்படுகின்றன.
இவ்வாறான நிலைமையில் நாம் போதை அடிமையாதலைகளையும் சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் பற்றி சற்று விரிவாக நாம் அவதானிப்போம்.
• பிரச்சினைகளை கையாளக் கற்றுக் கொடுத்தல் – பலர் தங்களுடைய பிரச்சினைகளை உரிய முறையில் கையாளத் தெரியாதனாலேயே இப்பழக்கத்திற்கு ஈடுபடுகின்றனர். ஆதலால் நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை கையாளவும், தீர்க்கவும் உரிய நல்வழிமுறைகள் மற்றும் நுட்பங்களை கற்றுகொடுத்தல்.

• அறிகை நடத்தை சிகிச்சை (Cognitive Behaviour Therapy) – தவறான எண்ணங்கள், அறிகையை மாற்றி நடத்தையிலும், அறிகையிலும் சீரான மாற்றத்தை ஏற்படுத்துவதை இச் சிகிச்சை முதன்மையாகக் கொண்டது. இச் சிகிச்சையால் புதிய சிந்தனைகள் ஏற்பட்டு நடத்தை சீரடைவதுடன் போதை அடிமையிலிருந்து மீளவும் உதவுகிறது.
• உரையாடல் திறன் வளர்ப்பு – தனது பிரச்சினைகள் மற்றும் கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் பிறருக்கு வெளிப்படுத்தவும், பிறரின் கருத்துக்களை உள்வாங்கவும் பயிற்சியளிக்கப்படுகிறது. இதன் மூலம் உதவும் பண்பும் மேம்பாடு அடைவதுடன் நம்பிக்கை, ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, மகிழ்ச்சி போன்றனவும் ஏற்படுகின்றது. ஆதரவும் கிடைக்கப்பெறுவதுடன் சலிப்பு, தனிமை, மனஅழுத்தம், மனச்சோர்வு என்பன குறைவடைகிறது.
• வைத்திய ஆலோசனைய மற்றும் மருத்துவ முறைகள் – அடிமைப்படுத்தும் மருந்துகள் மற்றும் போதையின் பிரச்சினை பற்றி வைத்தியரிடம் மற்றும் உள மருத்துவரிடம் ஆலோசனை பெறமுடியும். மருத்துவ முறைகள் மூலம் போதைப்பாவனை தணித்தல், மனநிலை மாற்றம், போதை அடிமையிலிருந்து மீளுதல், சரியான உணவு – நித்திரைப் பழக்கத்தை ஏற்படுத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
• தளர்வுப் பயிற்சிகள் – உடல் மற்றும் உளத்தை தளர்வுபடுத்தி ஆசுவாசப்படுத்தும் பயிற்சிகளை உரிய நேரத்துடனும் அதற்கேற்ற இடத்திலும் இருந்து அதனைச் செய்தல். சுவாசப்பயிற்சி, தியானம், யோகாசனம், மந்திரஉட்சாடனம், உடற்பயிற்சிகள் என்பன மனத்தை மேம்படுத்தி நெருக்கீடுகள் ஏற்படாமல் தடுக்கின்றது.
• பொழுதுபோக்குகளில் ஈடுபடல் – ஓய்வு நேரத்தில் தமக்கு பிடித்தமான விளையாட்டுக்களிலோ, செயற்பாடுகளிலோ ஈடுபட ஊக்குவித்தல்
• நாளேடு எழுதுதல் – தான் செய்யும் தினசரி செயற்பாடுகள் மற்றும் அனுபவங்கள் என்பவற்றை நாளேட்டில் (Diary) தவறாது எழுதிவருவது இப் பழக்கத்திலிருந்து மீண்டெழுவதற்கு உதவுகிறது. இதனைத் தொடர்ந்து செய்வதின் ஊடாக புதிய எண்ணங்கள் ஏற்படுத்தப்படுவதுடன் நடத்தைகளும் வலுவூட்டப்படும் அத்துடன் மனமானது கட்டுப்பாட்டுடன் இயங்கவும் தொடங்குகிறது.
• வெறுப்பூட்டல் முறை – அருவருப்பு அளித்தல் மற்றும் அதிர்ச்சி விடயங்களுடன் போதைப்பொருள் இன்பத்தையும் இணைத்து அனுபவிக்க வைப்பதன் மூலம் வெறுப்பை ஏற்படுத்துவது இம்முறை ஆகும். போதைப் பொருளை உட்கொள்ள முயலும் போது மின் அதிர்ச்சி கொடுத்தல் அல்லது வெறுப்பூட்டும் காட்சியை கற்பனை செய்ய வைப்பதன் மூலம் இது இடம்பெறும்.
• குடும்ப ஆற்றுப்படுத்தல் – போதைக்கு அடிமையான நபர் குடும்பத்தில் உள்ளார் ஆயின் அவரை மீட்டெடுக்க வேண்டிய கடமை முழுக்குடும்பத்திற்கும் உண்டு. குறித்த நபரை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து எவ்வாறு மீண்டெழ பங்களிப்புச் செய்யலாம் என கற்றுக் கொடுக்க வேண்டும். இத்துடன் பிள்ளைவளர்ப்பு முறை, பிரச்சினை தீர்த்தல் நுட்பங்கள் போன்றனவும் கற்றுக் கொடுக்கப்படும்.
• கலை வழி குணமாக்கல் – சித்திரம், ஓவியம் வரைதல், சிற்பங்கள் செய்தல், கட்டுரை, கவிதை, சிறுகதைகள் எழுதித் தூண்டுவதின் ஊடே துன்பம் தீரும் அனுபவம் குறைவடைந்து குணமாக வழிவகுக்கும்.
• குழுவழி குணமாக்கல் – குறித்த பிரச்சினை உள்ளவர்கள் குழுவாக இணைந்து பிரச்சினை தீர்ப்பது பற்றி, உறவுகளை மேம்படுத்துவது, உதவுவது, ஆரோக்கியமாக பயணிப்பது போன்றவற்றிற்கான தெளிவுகிடைப்பது மட்டுமல்லாமல் நம்பிக்கை, ஒற்றுமை, குழு இணைவு, ஆளிடைத் தொடர்பு, உதவி செய்யும் மனப்பாங்கும் ஏற்பட்டு போன்ற அடிமையிலிருந்து மீண்டெழவும் உதவுகின்றது.
• ஊக்குவித்தல் – இப் பழக்கத்தை கைவிட எண்ணும் துணைநாடி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் அவரை ஊக்கப்படுத்துவதுடன் சிறுவெகுமதி வழங்கல், பாராட்டுதல், புகழ்தல்; என்பன தன்நம்பிக்கையை அதிகரித்து குறித்த போதைப்பழக்கத்தை களைய உதவுகின்றது.
• நச்சுநீக்கல் – மருந்துகள், ஊசி மூலம் போதையினால் ஏற்பட்ட நச்சுக்கள் அகற்றப்படும். இது ‘அமிலம் அகற்றல் (Detoxification)” எனவும் அழைக்கப்படும். இதனுடன் இணைந்து விற்றமின் மாத்திரைகளும் வழங்கப்படும். ஏன் எனில் அவர் ;போதிய சத்தான உணவுகள் உண்ணாததால் இது வழங்கப்படும். அத்துடன் தூக்கமின்மை சீர் செய்வதற்கான மருந்துகளும், ஈரல்,குடல் பாதிப்புக்களுக்கான சிகிச்சையும் அளிக்கப்படும்.
• சமூக ஆதரவு – சமூக மட்டத்தில் குறித்த நபரை இயங்க எத்தணித்தல். அத்துடன் சமூக செயற்பாடுகள், திருவிழாக்கள் மற்றும் கருத்தரங்குகள், தொழிற்பயிற்சிப் பட்டறைகளில் ஈடுபடவைத்தல். அத்துடன் விழிப்புணர்வு செயற்படுத்தலும், தொண்டர் சேவைகளிலும் இணைந்து பணியாற்று செய்வதுடன் சமூக நலத் திட்டங்களிலும் ஈடுபடச் செய்தல்.
• ஆசைமறுப்பு பயிற்சி அளித்தல் – போதை ஆசை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஊட்டப்படுகிறது. சகபாடிகள் மற்றும் சூழல் என்ற அடிப்படையில் இடம்பெறுகிறது. முதலில் ஒருவருக்கு சிறிதளவு போதைப்பொருள் கொடுத்தே அறிமுகம் செய்யப்படுகிறது. அதன் பின் அவருக்கு அதிகம் உட்கொள்ள வேண்டும் என்ற ஆசை தொடங்குகிறது. இதனால் அந்த ஆசையை மறுப்பதற்கான பயிற்சிகளை உரிய முறையில் அளிக்க வேண்டும்.
• தூண்டிகளை விலக்கல் – போதைப்பொருள் பாவனை தூண்டுவோர் மற்றும் போதை இலகுவாகக் கிடைக்கும் சூழலிலிருந்து விலகி இருத்தல். அத்துடன் போதையிலிருந்து மீள போதையை நினைவூட்டும் அனைத்தையும் தவிர்த்து உறுதியான தீர்மானத்துடன் அதிலிருந்து மீள வேண்டும்.
• சுய முகாமைத்துவம் – போதை தொடர்பான சுய விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாடு இருத்தல் வேண்டும். போதை அடிமையால் ஏற்படும் பிரச்சினைகள், விளைவுகள் பற்றிய தெளிவும் இருத்தல் அவசியம். சுயமாக தீர்மானம் எடுக்கவும், தன்நம்பிக்கையுடன் செயற்படவும் பழகுதல். அத்துடன் உளக்கல்வியை பெற்றுக் கொள்வதுடன் சரியாக மீண்டெழும் ஆவலையும், உறுதியான தீர்மானத்தை கடைப்பிடிப்பதன் ஊடாக போதை அடிமையிலிருந்து மீண்டெழமுடியும்.
