இதழ் 88

கிழக்குலகின் அதிகார உதயம்

வரலாற்றில் 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் மேற்குலக நாடுகள், குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ்,ஸ்பானியா பின்னர் அமெரிக்கா ஆகியவை உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முன்னணியில் இருந்தன. ஆனால் 21ஆம் நூற்றாண்டுக்குள் வந்தபோது, இந்த நிலைமையில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலகின் அதிகாரச் சமநிலையானது படிப்படியாக மேற்குலகத்திலிருந்து கிழக்குலகத்திற்குச் செல்லும் நிலையை காணக்கூடியதாக உள்ளது.

இதில் சீனா முக்கிய இடத்தினை பெறுகின்றது. கிழக்குலகின் அதிகாரத்தின் மையமாக இது திகழ்கிறது. சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மட்டும் அல்லாமல், உலகளாவிய வர்த்தக மற்றும் முதலீட்டுத் தளமாகவும் உருவெடுத்துள்ளது. Belt and Road Initiative (BRI) மூலம் ஆசியா,ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் வணிகச் சாலையை உருவாக்கி வருகிறது. தொழில்நுட்ப துறையில் செயற்கை நுண்ணறிவு, 5G மின்சார வாகன உற்பத்தி போன்ற துறைகளில் சீனா மேற்குலகத்துடன் போட்டியிடுகிறது. மேலும், தென்கிழக்காசியாவில் அதன் இராணுவப் பங்களிப்பும் உலக அதிகார சமநிலையை மாற்றுகின்றது.

சீனாவை பின்பற்றி இந்தியாவும் கிழக்குலகின் அதிகார பலத்தை தன் கையிருப்பில் வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன்படி இந்தியா, சீனா எதிரி நாடுகளாக இருந்தாலும் வர்த்தக ரீதியாக ராஜதந்திர ரீதியாகவும் ரகசிய நண்பர்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மட்டுமின்றி, அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மையமாகவும் திகழ்கிறது. தகவல் தொழில்நுட்ப சேவைகள், மருந்து உற்பத்தி, விண்வெளி ஆய்வு அதாவது சந்திரயான், ஆதித்ய-எல்1 திட்டம் போன்ற துறைகளில் இந்தியா உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இந்தியாவின் இளம் தொழிலாளர் வலிமை, வர்த்தக சந்தை, மற்றும் சர்வதேச கூட்டாண்மைகள் (அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆபிரிக்கா) ஆகியவை அதனை உலக அரசியலில் முக்கிய அங்கமாக்குகின்றன.

இந்த இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக திகழ்வது ரஷ்யா எனும் முந்தைய வல்லரசாகும். 1991 ஆம் ஆண்டு ரஷ்யா சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறி தனது பலத்தை குறைத்துக் கொண்டாலும் இன்றும்; துடிப்புடன் செயற்பட்டு வரும் ஒரு நாடாகவே இருக்கின்றது. அதன் ஒரே குறிக்கோள் மேற்குலகின் அதிகாரச் சமநிலையை உடைப்பதே ஆகும்.
ரஷ்யா உலகின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர் நாடாகும். இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் மூலமாக ஐரோப்பிய நாடுகளின் மீது மிகுந்த தாக்கத்தை செலுத்துகிறது. இராணுவ வலிமை, அணு ஆயுதங்கள், மற்றும் உக்ரைன் போர் போன்ற அரசியல் நடவடிக்கைகள் மூலம் ரஷ்யா உலக சமநிலையில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது.


மேற்குறிப்பிட்ட நாடுகளை தவிர பல நாடுகள் ஒன்று சேர்ந்து கூட்டமைப்பாகவும் செயல்படுகின்றது. இதன் மூலம் மேற்குலகின் அதிகாரச் சமநிலையை பெற்று அது கிழக்குலகின் பக்கம் ஈர்க்கப்பட்டு வருவதனை காண முடியும். அத்தகைய கூட்டமைப்புகளாக பிரிக்ஸ் மற்றும் ஆசியான் போற்ற கூட்டமைப்புகளை குறிப்பிடலாம்.
BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆ;பிரிக்கா) உலகின் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை பிரதிபலிக்கும் அமைப்பாக உள்ளது. இவர்கள் மேற்குலக ஆதிக்கத்திற்கு மாற்றாக ஒரு புதிய தளத்தை உருவாக்குகின்றனர். ASEAN தென்கிழக்காசியாவின் பொருளாதார மற்றும் அரசியல் சக்திகளை ஒருங்கிணைத்து, சீனா மற்றும் இந்தியாவுடன் வலுவான உறவை வளர்க்கிறது. Shanghai Cooperation Organisation (SCO) பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான கிழக்கு நாடுகளின் வலிமையை வெளிப்படுத்துகிறது.

இந்த மாற்றங்களின் விளைவாக, உலகம் இனி ஒருதுருவ அமைப்பில் இல்லாமல், பல்துருவ அமைப்பாக மாறியுள்ளது. மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் குறைந்து, கிழக்குலக நாடுகள் உலக வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் தீர்மானிக்கக்கூடிய பங்காற்றுகின்றன. இதன் மூலம் சர்வதேச அரசியலில் புதிய சமநிலை உருவாகிக் கொண்டு வருகின்றது.

Related posts

ChatGPT  பல்கலைக்கழக மாணவர்களுக்கு புத்திசாலி நண்பனா?அல்லது கல்வி குறுக்கு வழியா?

Editor

இதழ் 88

Editor

பள்ளி வயதில் வேலையா?

Editor

Leave a Comment