இதழ் 88

மலையக பெண்களின் சமூக இடைவெளியிருந்து முன்னோக்கிய பாதைஓர் விமர்சன கண்ணோட்டம்

மலையகப் பெண்கள் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களில் ஓர் குறிப்பிடத்தக்க சமூகக் குழுவாக இருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை அனுபவங்கள், மத நம்பிக்கைகள், கலாச்சார மரபுகள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த ஆய்வில், மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக இடைவெளி, மத சார்ந்த சடங்குகள், பண்பாட்டு விழாக்கள், நடைமுறைச் சவால்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பலதரப்பட்ட பார்வையில் ஆராயப்படுகிறது. இவ்வாய்வு மலையகத் தமிழ்ப் பெண்களின் சமூக இடைவெளி, மத கலாசாரப் பங்கு மற்றும் சமூக அசைவுகள் (social interaction) பற்றிய விவரங்களை ஆராய்கிறது. இலங்கையின் பிற தமிழ் சமூகங்களை ஒப்பிடுகையில், மலையகப் பெண்கள் சமூகத்தில் பங்கேற்பது, வெளிப்புற உறவுகளை உருவாக்குவது, மற்றும் கல்வி சுகாதார துறைகளில் தங்கள் பங்கினை விருத்தி செய்வது ஆகியவற்றில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

இலங்கையில் மலையக மக்களின் சமூகநிலை குறித்த வரலாற்று, அரசியல் கவனங்கள் அதிகம் பெற்றிருந்தாலும், பெண்கள் மற்றும் அவர்களது மத கலாச்சார இடமாற்றங்கள் குறித்த ஆய்வுகள் மிகக் குறைவாக உள்ளன. இங்கு சமூக இடைவெளி என்பது வறுமை, கல்வி, சுகாதாரம், தீர்மான சக்தி, மற்றும் தொழில்நுட்பமயமாக்கம் போன்ற அம்சங்களில் பிரதிபலிக்கின்றது. இதற்கு முக்கியக் காரணமாக மதப் பழக்கவழக்கங்கள், குடும்ப கட்டுப்பாடு, பொருளாதார வரம்புகள், மற்றும் ஆணாதிக்க அமைப்பு விளங்குகின்றன. பூப்புனித நீராட்டு விழா, திருமண முறைகள், தொழிலாளி வாழ்க்கை, சமூக புறக்கணிப்பு போன்றவைகள் மூலம் மத கலாச்சாரமும், சமூக மாற்றங்களும் சந்திக்கின்றன. மலையக சமூக இடைவெளி விளக்கம் (Social Stratification) கல்வி மற்றும் பொருளாதார நிலைபாடு , மரபணுக்காக விதிக்கப்பட்ட ஜாதி அடிப்படையிலான புறக்கணிப்பு , குடும்பத் தலைவர் அமைப்பில் பெண்களின் பங்கு , சமூக தீர்மானங்களில் பங்கெடுத்தல் என அமைந்துன்னது. மாறாக கணவனை இழந்த குடும்பங்களில் குடும்பதலைவியாக பெண்களின் நிலைஇ நடைமுறை பிரச்சினைகள்இ வேலைக்கு செல்லும் இடங்களில் பாதுகாப்பின்மை , அரசாங்க நலத்திட்டங்களில் பங்கு குறைபாடு, கல்வி மற்றும் சுகாதார வசதிகள் பற்றாக்குறை, பாலின வேறுபாடுகள் காரணமாக உருவாகும் ஒடுக்குமுறைகள்; என்பனவற்றால் மலையகப் பெண்களின் சமூக இடைவெளியில்;, அவர்களின் கல்விசார் முன்னேற்றத்திலும் சுகாதார விழிப்புணர்விலும் நேரடியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. கல்வி வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், பல பெண்கள் ஆரம்ப நிலை கல்வியில் நிறுத்திக் கொள்கின்றனர். இதன் விளைவாக வேலைவாய்ப்பு குறைபாடு, பொருளாதார சார்பு, மற்றும் சமூக முடிவெடுப்புகளில் பங்கேற்பு இல்லாமை போன்ற பிரச்சினைகள் தொடர்ச்சியாக உருவாகின்றன. அதேபோன்று, சுகாதார நலனுக்கான விழிப்புணர்வு குறைவால், ஊட்டச்சத்து குறைபாடு, தாய்மை மற்றும் குழந்தைகள் நல குறைபாடு, மனநலம் சார்ந்த பிரச்சினைகள் ஆகியவை பரவலாகக் காணப்படுகின்றன.


இவ்வாய்வின் முக்கியக் கண்டுபிடிப்பு என்னவெனில், மலையகப் பெண்களின் சமூக முன்னேற்றத்தை விருத்தி செய்ய கல்வி மற்றும் சுகாதார துறைகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. கல்வி துறையில் Scholarship> ICT அடிப்படையிலான திறன் பயிற்சி, மற்றும் சமூகக் கற்றல் மையங்கள் (Community learning hubs)) நிறுவப்பட வேண்டும். சுகாதார துறையில் Reproductive health clinics> Mobile health camps மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். மேலும், பெண்களின் மத கலாசார அடையாளத்தை மதிக்கும் வகையில் Community centers உருவாக்கப்பட்டால், அவர்கள் பாதுகாப்பான சூழலில் சமூக பங்கேற்பை அதிகரிக்கலாம். ஆய்வின் முடிவுகளை நடைமுறைச் சூழலோடு பொருத்தி மாற்றும்போது, தோட்டப் பகுதிகளில் “பெண்கள் கல்வி மற்றும் சுகாதார மையங்கள்” நிறுவப்படுவது முக்கியமான படியாகும். இம்மையங்கள் மூலமாக பெண்களுக்கு அடிப்படை கல்வியறிவு, ஆரோக்கிய பரிசோதனைகள், தொழில் முனைவுத் திறன் பயிற்சிகள் வழங்கப்படலாம். இதன் மூலம் சமூக இடைவெளி குறையும், பெண்கள் சமூக முன்னேற்றத்தில் பங்காற்றும் வாய்ப்பும் அதிகரிக்கும்.மலையகப் பெண்களின் சமூக இடைவெளி மற்றும் மத கலாசார இருப்பு, அவர்களின் கல்வி மற்றும் சுகாதார முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. ஆனால், சமூக கலாசாரச் சூழலை மதித்து, கல்வி மற்றும் சுகாதார துறைகளில் நடைமுறைச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். இது மட்டுமின்றி, சமூக அசைவு அதிகரித்து, மலையகப் பெண்கள் நாட்டின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் பங்கு பெறும் நிலை உருவாகும்.


மலையகத் தமிழ்ச் சமூகமானது இலங்கையில் சுமார் 10 லட்சம் மக்கள் கொண்டுள்ளது (Department of Census & Statistics> 2021). இவ்வசதிகளில் பெரும்பாலோர் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். 65% பெண்கள் தொழிலாளர் நிலைமையில் உள்ளனர் (ILO Report> 2018) மலையகக் கிராமங்களில் குடிநீர், சாலை, மின் விநியோகம், மற்றும் வீட்டு வசதி போன்று அடிப்படை வளங்கள் இன்னும் போதிய முறையில் கிடைக்கவில்லை. இந்நிலை பெண்களின் அன்றாட வாழ்க்கையை சிரமப்படுத்துகிறது. குடிநீருக்காக நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியிருப்பது, அவர்களின் கல்வி மற்றும் சமூகச் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கான நேரத்தை குறைக்கிறது. போக்குவரத்து வசதி இல்லாமையால், பெண்கள் மற்றும் சிறுமிகள் மேலதிகக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளைப் பெற முடியாமல் உள்ளனர்.


கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் குறைபாடு, மற்றும் குடும்பத்தில் மதுபோதையால் ஏற்படும் வன்முறை போன்றவை பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கின்றன.UNDP அறிக்கையின்படி, மலையகக் கிராமங்களில் 42% குடும்பங்கள் மட்டுமே நிலையான குடிநீர் வசதி பெற்றுள்ளனர்.மின் விநியோகம் சுமார் 67% வீடுகளுக்கு சென்றடைகிறது;. ஆனால் அடிக்கடி மின் துண்டிப்பு காரணமாக மாணவர்கள் இரவு நேரக் கல்வியில் சிரமம் அனுபவிக்கின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் பெண்கள் தினசரி 1–2 கி.மீ தூரம் நடந்து குடிநீர் எடுக்கின்றனர். இதனால் கல்வி, வேலை, குழந்தை பராமரிப்பு போன்ற செயல்களில் நேரம் குறைகிறது. மலையகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகள், ஊட்டச்சத்து குறைபாடு, மாதவிடாய் சுகாதாரம் பற்றிய அறிவின்மை, தாய்மை மற்றும் குழந்தைகள் நலம் சார்ந்த சிக்கல்கள் போன்றவையாகும். கிராம மட்டத்தில் மருத்துவ முகாம்கள், சுகாதார ஆலோசனை சேவைகள், மற்றும் பெண்களுக்கு சிறப்பாக உளநலம் தொடர்பான சேவைகள் கிடைப்பது மிக அவசியம். மனநலம் சார்ந்த பிரச்சினைகள் குறிப்பாகப் பரவலாக இருந்தாலும், அதற்கான விழிப்புணர்வு மிகக் குறைவாக உள்ளது. தோட்டப் பெண்கள் தினசரி சராசரியாக 8–10 மணி நேரம் பணி செய்கின்றனர்.


Save the Children (2019) அறிக்கையின்படி, மலையகக் குழந்தைகளில் 28% பள்ளிக்கு சீரான முறையில் செல்லவில்லை. எடுத்துக்காட்டாக கந்தப்பொளையக் கிராமத்தில் குழந்தைகள் பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் நேரத்தில் தாத்தாஃபாட்டி பராமரிப்பில் வைக்கப்படுகின்றனர்; ஆனால் கல்விசார் ஆதரவு மிகக் குறைவு. Day-care centers ,ல்லாமையால், 0–5 வயது குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்படுகின்றனர் (WHO Nutrition Survey – மலையகத்தில் குழந்தைகளில் 33% stunting).


பெண் பிள்ளைகள் கல்விச் சூழலில் பங்கெடுத்தாலும், கிராமிய மட்டத்தில் நடைபெறும் வேலைத்திட்டங்களில் அவர்களின் பங்களிப்பு மிகக் குறைவு. சமூகக் கட்டுப்பாடுகள், பாலின அசமத்துவம், மற்றும் குடும்பச் சுமைகள் காரணமாக, அவர்கள் சமூக முன்னேற்றத் திட்டங்களில் பங்காற்றும் வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன. எனினும், மாணவச் சங்கங்கள், விளையாட்டு குழுக்கள், மற்றும் சமூக சேவைத் திட்டங்கள் மூலமாக பெண்கள் பங்கேற்பை ஊக்குவித்தால், அவர்களின் சமூக அசைவு அதிகரித்து, எதிர்கால தலைமைத்துவத்திற்கான திறன்கள் வளர வாய்ப்புண்டு.

குடும்ப சூழல் – மது மற்றும் போதைப்பொருள் பாதிப்பு
மலையகக் குடும்பங்களில் குடும்பத் தலைவர்கள் மதுபோதையில் ஈடுபடுவது, குடும்பத்தின் பொருளாதார நிலையை மட்டுமல்லாமல், பிள்ளைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பையும் நேரடியாக பாதிக்கிறது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், வீட்டு வன்முறை, பாதுகாப்பின்மை, மற்றும் மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக பெண் பிள்ளைகள் குடும்பத்தினரால் திணிக்கப்படும் பாதுகாப்பின்மையின் காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் போகிறது.ADIC Sri Lanka (2023) ஆய்வின்படி, மலையகத் தொழிலாளர்களில் 45% ஆண்கள் அடிக்கடி மது அருந்துவதாகக் கூறியுள்ளனர். 30% குடும்பங்கள் குடும்பச் சண்டைகள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு “மது போதை”யை காரணமாகக் குறிப்பிடுகின்றனர்.எடுத்துக்காட்டாக நுவரெலியாவின் சில பாடசாலைகளில், ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி குறைபாட்டிற்கு “குடும்ப வன்முறை மற்றும் மது போதை” பிரதான காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் பெண் பிள்ளைகள் கல்வியில் பின்தங்குவது மட்டுமல்ல, school dropout விகிதம் 12–15% வரை அதிகரிக்கிறது.

பாடசாலை மட்ட தீர்வுகள்
கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துதல் முலம் மாணவிகளுக்கான சிறப்பு scholarship திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.பள்ளி விட்டு விலகும் மாணவிகளுக்கான Second-chance education programs (இரவு வகுப்புகள், சமூகக் கற்றல் மையங்கள்) அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.இந்தியாவின் National Literacy Mission போல, மலையகத்தில் “மாணவிகள் எழுச்சி திட்டம்” (Girls Uplift Program) தொடங்கலாம். பாலின சமத்துவக் கல்வியை அறிமுகப்படுத்தி பாடசாலைகளில் Gender Equality Clubs உருவாக்கி, மாணவர்களின் தலைமைத் திறன்களைப் பெற ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு gender-sensitive training வழங்கப்பட வேண்டும்.


சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நடைமுறைகள் பள்ளி அடிப்படையில் mid-day meal program அமல்படுத்தப்பட வேண்டும். UNICEF 2021 ஆய்வின்படி, பள்ளியில் உணவு வழங்கப்பட்ட மாணவிகள், வகுப்பு பங்கேற்பில் 20% அதிகமாக ஈடுபட்டனர். மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.பாதுகாப்பு சார்ந்து பள்ளிகளில் child protection committees அமைத்து, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். பாலியல் தொந்தரவு குறித்த புகார் பெட்டிகள் மற்றும் இரகசிய ஆலோசனை மையங்கள் இருக்க வேண்டும்.

குடும்ப மட்ட தீர்வுகள்


குடும்ப விழிப்புணர்வுக்கு பெற்றோர்கள் கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள pயசநவெயட யறயசநநௌள றழசமளாழிள நடத்தப்பட வேண்டும். ஹட்டன் பகுதியில் Save the Children நடத்திய “ Parent–Teacher Interaction Program” மூலம், 70% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மேல்நிலைக் கல்விக்குச் செலுத்தத் தயாரானார்கள். பெற்றோர்கள்–ஆசிரியர்கள் இணைந்து Child Progress Monitoring Systemஉருவாக்க வேண்டும். மாதாந்த பெற்றோர் கூட்டங்களில் மாணவிகளின் முன்னேற்றம், சவால்கள் விவாதிக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த அணுகுமுறையாக பாடசாலையும் குடும்பமும் இணைந்து பங்காற்ற வேண்டும். குழந்தைப் பராமரிப்பு வசதிகள் மற்றும் குடும்ப விழிப்புணர்வுகள் பெண்களுக்கு வேலைக்குச் செல்லும் நேரத்தில் day-care centers அமைக்கப்பட வேண்டும். தாய்மார்களுக்கு nutrition and child care training வழங்கப்பட வேண்டும். குடும்ப ஆலோசனை மையங்கள் மூலம் குடும்பத்தில் ஏற்படும் வன்முறை மற்றும் சண்டைகளுக்கு கயஅடைல உழரளெநடடiபெ ரnவைள அமைக்கப்பட வேண்டும்.எடுத்துக்காட்டர்கு இந்தியாவின் Self Employed Women’s Association (SEWA)போல, மலையகப் பெண்களுக்கு குடும்பச் சட்ட ஆலோசனைகள் வழங்கப்படலாம். குடும்பம் சார் சமூக அமைப்புகள்குடும்பங்கள் மற்றும் NGO-க்கள் இணைந்து Nutrition Gardens அமைத்து, ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கலாம். குடும்ப ஆலோசனை மையங்களை சமூக அமைப்புகள் நிர்வகிக்கலாம். மது மற்றும் போதைப்பொருள் எதிர்ப்புக்களை குடும்பத்தினுள் குடும்பத் தலைவர்களை குறிவைத்து de-addiction programs நடத்தப்பட வேண்டும். Community Alcohol-Free Campaigns மூலம் குடும்ப வன்முறையை குறைக்க முடியும்.


சமூக அமைப்புகளின் பங்களிப்பு


அடிப்படை வசதிகளை உள்ளூர் சமூக அமைப்புகள் (NGO/Youth Clubs)) இணைந்து குடிநீர், மின், சாலை வசதிகளை மேம்படுத்த அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். நுவரெலியாவில் Women Development Federation>, 200 குடும்பங்களுக்கு மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைத்து குடிநீர் பிரச்சினையைத் தணித்துள்ளது. பெண்களின் சமூக அசைவுயை உறுதிப்படுத்த Women’s Community Centers உருவாக்கி, பெண்கள் சமூகக் கலந்துரையாடலில் பங்கேற்க வாய்ப்பு பெற வேண்டும். தொழில் முனைவுத் திறன்களை வளர்க்க skills development workshops நடத்தப்பட வேண்டும். நலன் சார் சுகாதார சேவைகள் சமூக அமைப்புகளால் mobile health clinics நடாத்தி peer-support groups உருவாக்கப்பட வேண்டும். கல்வி மற்றும் சமூக பங்கேற்பு மாற்றத்தில் வழுச்சேர்க்கும்;.அதன்படி NGO-fs; girls mentorship programs நடத்தி, மாணவிகளுக்கு உயர்கல்வி, வேலை வாய்ப்பு வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.ADIC நடத்தும் Youth Ambassador Program போல, மலையகப் பகுதிகளில் “Girls Leadership Ambassadors” உருவாக்கலாம். மது மற்றும் போதை எதிர்ப்பு சமூக அமைப்புகள் Awareness street drama ,Poster campaigns> Community talks போன்ற வழிகளில் மதுவிலக்கு விழிப்புணர்வை பரப்ப வேண்டும்.2023-இல் ஹபுத்தளை பகுதியில் நடந்த “Alcohol Free Village Campaign” மூலம், 15% ஆண்கள் மதுப் பழக்கத்தை நிறுத்தியதாக அறிக்கை கூறுகிறது.


பாடசாலை சமூக அமைப்புகள் பள்ளி மாணவிகளுக்கான Career guidance workshops சமூக அமைப்புகள் மூலம் நடத்தப்படலாம். School Community Partnership Programs மூலம் சிறுமிகள் சமூக சேவையில் பங்கேற்கலாம்.மலையகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல அடுக்குகளில் (multi-dimensional) உள்ளன. அடிப்படை வசதிகள் பற்றாக்குறை, குழந்தைப் பராமரிப்பு சிக்கல்கள், சுகாதார சேவை குறைபாடு, மற்றும் குடும்பத்தில் மது போதையால் உருவாகும் வன்முறை ஆகியவை அனைத்தும் இணைந்து அவர்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தைத் தடுக்கின்றன.

சமூகம் வளம் பெற வீட்டிலிருந்து மாற்றம் தேவை. விவேகானந்தர் கூறியது போல
“ நீ திருந்து உலகு தானே திருத்தும் ” . சுய அடையாளத்தை உணர்ந்து உண்மையுடன் மாற்றம் காண்போம்.

Related posts

தாய்மொழி காக்கப்படாவிட்டால் தலைமுறைகள் நம் வேரை மறந்து விடும்

Editor

கிழக்குலகின் அதிகார உதயம்

Editor

பள்ளி வயதில் வேலையா?

Editor

Leave a Comment