இதழ் 88

43 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெறும் IESL இன் புத்தாக்க போட்டிகள்

IESL (The institution of Engineers, SriLanka) வருடந்தோறும் தேசிய மட்டத்தில் நடத்துகின்ற இளைஞர்களுக்கான மாபெரும் புத்தாக்க போட்டி – 2025 தொடர்ச்சியாக 43 ஆவது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெறுகிறது. அதன் முதற்கட்டமாக வட பிராந்திய மட்ட போட்டிகள் கடந்த சனிக்கிழமை 20.09.2025 அன்று காலை 9.00 மணிமுதல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சியில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் புத்தாக்க கண்டுபிடிப்புக்களை காட்சிப்படுத்தினார்கள்.

பொறியியலாளர்களையும், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களையும் உள்ளடக்கிய நடுவர் குழுவினரால் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் துல்லியமாக ஆராயப்பட்டு மதிப்பெண்கள் இடப்பட்டன. வெற்றியாளர்கள் அடுத்த நிலைக்கு தெரிவு செய்யப்படுவதுடன், பங்குபற்றிய யாவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, பிரயாணச் செலவும் கையளிக்கப்பட்டது.


மாணவர்களின் புத்தாக்க சிந்தனைகளை சமுகத்திற்கு பயன்தரும் வகையில் பயன்படுத்திக் கொள்கின்ற இது போன்ற செயற்பாடுகள் தொடர்ச்சியாக அதிகமாக நடைபெற வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Related posts

வாழ்க்கை என்னும் ஓடம்

Editor

ChatGPT  பல்கலைக்கழக மாணவர்களுக்கு புத்திசாலி நண்பனா?அல்லது கல்வி குறுக்கு வழியா?

Editor

இதழ் 88

Editor

Leave a Comment