கத்தாரில் வசிக்கும் இலங்கை கணிய அளவையாளர்களுக்காக நடத்தப்பட்ட மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘Retention Royals Cricket League – 2025’ கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நிறைவடைந்தது. இந்தத் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டி, கடந்த வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 17, 2025 அன்று தோஹாவில் உள்ள QCA மைதானத்தில் நடைபெற்றது.
இந்த பிரம்மாண்டமான லீக் போட்டியை Retention Royals அணி ஏற்பாடு செய்தது. தொழில்முறை சவால்களுக்கு மத்தியில், கணி ய – அளவையியல் துறையைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்குபெறும் இந்தத் தொடரில் மொத்தம் ஐந்து அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கின.
Retention Royals, Extra Over, WE – 11, Joint Venture, Bid Bond ஆகிய அணிகள் பங்கேற்றன.

லீக் ஆட்டங்களின் முடிவில், WE – 11 அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்த Bid Bond மற்றும் Joint Venture அணிகளுக்கு இடையேயான தகுதிப் போட்டியில் (Qualifier), Joint Venture அணி அபாரமாக விளையாடி, Bid Bond அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த WE – 11 அணியை எதிர்த்து Joint Venture அணி மோதியது. இதில், அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய Joint Venture அணி, WE – 11 அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2025-ம் ஆண்டின் Retention Royals Cricket League கோப்பையைத் தட்டிச் சென்றது.
தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன:
தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் இறுதிப்போட்டி ஆட்டநாயகன் மற்றும் தொடர் ஆட்டநாயகன் (Best Batsman of the Series ,man of the match of Final & Man of the series): நசுருதீன் ஹஸ்ஸான் முஹம்மட்

தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் (Best Bowler of the Series): சல்மான் அஹமட் நுஷாத்
இந்த வெற்றித் தொடருக்கு WELL ON HERITAGE RESTAURANT பிரதான ஸ்பான்சராகவும், WHITEON BUILDERS இணை ஸ்பான்சராகவும், UNIQUE CREATIONS பிரிண்டிங் பார்ட்னராகவும், துமி மீடியா மீடியா பார்ட்னராகவும் ஆதரவு அளித்திருந்தன.
கத்தார் கணிய அளவையாளர் மத்தியில் இந்த கிரிக்கெட் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

