இதழ் 90

இராவணன் – அறிவும் ஆட்சியும் இணைந்த மனிதச் சிந்தையின் மறுமொழி

இராவணன் என்ற பெயர் கேட்டவுடனே உலக இலக்கிய வரலாற்றில் ஒரு அதிசய ஆளுமை நினைவிற்கு வருகிறது. இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் பரவிய புராணங்களிலும் வரலாற்றுச் சான்றுகளிலும் இராவணன் ஒரே நேரத்தில் ஒரு பேரரசர், இசைஞானி, வீரர், தத்துவஞானி, சமூக சீர்திருத்தவாதி, உளவியல்சார் வல்லுநர் என பல வடிவங்களில் வெளிப்படுகிறார். ஆனாலும், சீதையை தூக்கிச் சென்றவன், இராமனால் கொல்லப்பட்டவன், பத்து தலைகள் கொண்டவன் என வரலாற்றை மூன்று வரிகளுக்குள் முடிக்கும் சிலர் உள்ளனர்,. ‘கலை பத்தில் தலை சிறந்தவன் இராவணன்’ என்பதை அறியாமலும், அவனின் உண்மையான வரலாற்றை தெரியாமலும் வரலாற்றை தவறுதலாகவும், திரிபாகவும் பயன்படுத்துகின்றனர்.
இன்று இலங்கையின் தெற்கிலும் வடக்கிலும் உள்ள பழங்கால சிதிலங்கள், கலைச் சின்னங்கள், மலைப்பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுகள் அனைத்தும் அவன் ஆட்சியின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. இராவணனின் வாழ்க்கை என்பது ஒரு மாபெரும் உளவியல் ஆராய்ச்சி பொருளாகவும், கலாச்சாரப் பெருமையாகவும் திகழ்கிறது.

வரலாற்றுப் பின்னணி மற்றும் ஆட்சிக் காலச்சுவடு

இராவணன் (இன்றைய இலங்கை) ஆட்சி செய்தது பற்றிய குறிப்புகள் இராமாயணத்தில் காணப்பட்டாலும், பல இலங்கை மரபுக் களஞ்சியங்களிலும் இராவணனை “லங்காதேசத்தின் முதல் முழுமையான நாகரிக ஆட்சியாளர்” என்று குறிப்பிடுகின்றன. அவன் ஆட்சிக்காலம் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு என சில ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். அந்தக் காலத்திலேயே அவர் ஒரு நவீன ஆட்சிமுறை, கல்வி, கலை, தொழில்நுட்பம், சமூகநீதி, பெண்களின் நிலை, உயர்வு போன்ற பல துறைகளில் புதுமைகளை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அந்தக் காலத்திலேயே லங்கா எனப்படும் ராஜதானி பொற்கோட்டையாக இருந்தது. அதில் விமானங்கள் தரையிறங்கும் தளங்களும், பொன் கூரைகளால் ஆன அரண்மனைகளும், நீர்த்தேக்கங்களும், கல்வியமைப்புகளும் இருந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. தொல்லியல் ஆராய்ச்சிகளிலும் “Sigiriya”> “Ritigala”> “Dondra” போன்ற இடங்கள் இராவண காலத்தின் நினைவுச் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.

இராவணனின் ஆட்சிப் பெருமைகள்


இராவணனின் ஆட்சி “அறம், அறிவு, அருள்” என்ற மூன்றின் அடிப்படையில் இயங்கியது என்று இலங்கை பழம்பெருமை மரபுகள் கூறுகின்றன. அவர் மக்கள் நலனில் மிகுந்த ஆர்வமுடையவர். சமூக அமைப்பில் வர்க்கப் பாகுபாடு குறைவாக இருந்தது; வித்தியாசமான குலம், மதம், இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சமமான உரிமை கிடைத்தது. கல்வி அனைவருக்கும் திறந்திருந்தது. இது அந்தக் காலத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றம்.
அவர் சுகாதாரத்துறையில் மூலிகை வைத்தியத்தை ஊக்குவித்தார். “அயுர்வேதத்தின் தந்தை” என்ற பெயரும் சில ஆய்வாளர்களால் அவருக்கே வழங்கப்படுகிறது. Ravana Samhita எனப்படும் நூல் இதற்குச் சான்று. அவன் ஆட்சியில் நிலம், நீர், காடு ஆகியவை மக்கள் சொத்தாகக் கருதப்பட்டன. “நிலம் விற்பனை செய்யக் கூடாது, அது தலைமுறையினருக்குச் சொந்தமான புனிதப் பொருள்” என்ற கருத்தை அவர் முன்னிறுத்தினார். இது இன்றைய சுற்றுச்சூழல் சிந்தனைக்கு இணையானது.
அவரது நிர்வாகம் மிகச் சீர்மையாக இருந்தது. நீதிமன்றங்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம வாய்ப்பு இருந்தது. குற்றவாளிகளை தண்டிக்கும் முன் உளவியல் ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இது இராவணன் ஒரு Psychological Ruler என்பதற்குச் சிறந்த சான்று.

கலை, அறிவியல், மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு

இராவணன் இசை, இலக்கியம், யாகம், வானியல், மருத்துவம் போன்ற அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கியவர். “கலை பத்தில் தலை சிறந்தவன்” என்ற பெயரும் உண்டு. அவர் ஒரு சாமர்த்தியமான வீணை வாத்தியக்காரர். அதனால் “ராவணாஸ்த்ரி” எனப்படும் இசைக்கருவி உருவானது. அது இன்று “சாரோத்” அல்லது “வீணை” என்பதன் முதன்மையான வடிவமாகக் கருதப்படுகிறது.
அவர் வானியல், விமானவியல் மற்றும் உளவியல் துறைகளில் ஆராய்ச்சி செய்தார் என்று Ravana Samhita குறிப்பிடுகிறது. “Pரளரியமய ஏiஅயயெ” எனப்படும் வானூர்தி தொழில்நுட்பத்தின் முதல்நிலை வடிவமைப்பு அவரது அறிவின் விளைவு என நம்பப்படுகிறது. இன்று இலங்கையில் “Ravana 1 Satellite” எனும் செயற்கைக்கோள் திட்டம் இதன் நினைவாக பெயரிடப்பட்டது. இது அவரது அறிவியல் மரபு இன்னும் உயிருடன் இருப்பதற்கான சான்றாகும்.
அவரது கலைப்பற்றும் அதே அளவில் சிறந்தது. இலங்கையின் பழங்காலக் கோவில்களில் காணப்படும் சிற்பங்கள், இராவணனின் அழகியல் பார்வையை வெளிப்படுத்துகின்றன. சிற்பங்களில் மனித உடலின் உணர்வுகள், முகபாவங்கள், மற்றும் மனநிலையை வெளிப்படுத்தும் உளவியல் துல்லியம் காணப்படுகிறது. இது இராவணன் கலை மற்றும் உளவியலின் உறவை நன்கு புரிந்திருந்தார் என்பதைக் காட்டுகிறது.

வீரமும் போர்திறனும்

இராவணன் ஒரு அசாதாரண போர்வீரர். அவனது யுத்த நுணுக்கம், ஆயுதவியல் திறமை, தந்திரநயம் அனைத்தும் அந்நாளைய அரசர்களை முந்தியது. அவன் பத்து தலைகள் கொண்டவன் என புராணம் குறிப்பிடப்படுவது ஒரு உளவியல் குறியீடாகும். பல்திறனும்-பலசிந்தனையும் கொண்ட ஒரு ஆளுமை எனப் பொருள்படும்.
அவர் சகோதரர்களில் பெரும்பாலானோர் போர் மற்றும் நிர்வாகத் துறைகளில் முக்கிய பங்காற்றினர். இராவணன் தன் சகோதரன் கும்பகர்ணனின் அறிவையும், வலிமையையும் மதித்தார்; இதுவே அவரது leadership psychology-யின் அடையாளம். தலைமை என்பது தனி ஆளுமை அல்ல, குழுவின் ஒருங்கிணைப்பு என அவர் உணர்ந்தார்.
போரில் எதிரிகளை வெறுக்காமல், அவர்களின் மனநிலையை அறிந்து எதிர்கொள்வது அவனது முக்கிய உளவியல் திறமையாகும். இராமனுடன் நடந்த போரிலும் அவர் மரியாதையை இழக்காமல் இறந்தார். இதுவே “வீரமரணம்” என்ற பண்பாட்டுச் சிந்தனையின் அடிப்படையாகி, இலங்கையின் வீர மரபில் முக்கிய இடம் பெற்றது. அவன் வாழ்நாளில் முகம் இருந்த பிரகாசத்தை விட இறந்து வீழ்ந்த போது அதனை விட மூன்று மடங்கு முகம் பிரகாசமாக இருந்தது இது அவனின் வீரத்தின் மிகச்சிறந்த தன்மையை காட்டுகின்றது.

உளவியல் மற்றும் ஆளுமை ஆய்வு

இராவணன் ஒரு உளவியல்சார் ஆளுமை. அவரது ஆட்சித் திறனும், கல்விக்கான பார்வையும், மனித மனத்தின் இயல்பை அறிந்து ஆட்சி செய்வதுமான பாணியும் இதற்குச் சான்று. Ego Strength,Leadership Psychology, Empathy, Moral Intelligence ஆகிய பல நவீன உளவியல் கூறுகளை அவரது வாழ்க்கையில் காணலாம்.
அவரது குரு உளவியல் மற்றும் தத்துவத்தில் வல்லவர். அவரிடமிருந்து இராவணன் “மனித உணர்வுகளின் பரிமாணங்கள்” குறித்த ஆழ்ந்த அறிவைப் பெற்றதாக Shastraic ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. “மனிதன் உணர்வுகளை அடக்கி அறிவை வளர்க்க வேண்டும்” என்பது அவரது தத்துவமாக இருந்தது.
அவரது கோபம், ஆணவம் போன்ற குணங்கள் சில நேரங்களில் அவரை வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தாலும், அவற்றும் உளவியல் பார்வையில் “Overconfidence Syndrome”மற்றும் “Narcissistic Leadership” எனப்படும் நவீன உளவியலின் பகுப்பாய்வுகளுக்குச் சான்றாகின்றன. இதனால் இராவணனின் வாழ்க்கை positive and negative leadership psychology இரண்டிற்கும் ஒரு ஆய்வுப் பொருளாக விளங்குகிறது.

சமூக மற்றும் கலாச்சார தாக்கம்

இராவணன் சமூக ஒற்றுமை, கல்வி, பெண்கள் நிலை, விலங்குகள் பாதுகாப்பு, இயற்கை மதிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தியவர். அவர் Veda,Ayurveda,Natya Shastra போன்ற பல துறைகளிலும் பெண்களுக்கு கல்வி வாய்ப்பளித்தார். பெண்கள் அவரது காலத்தில் அரசியல் அறிவில் வல்லவர்களாக இருந்தனர். இது அந்தகால சமூக முன்னேற்றத்தின் அடையாளமாகும்.
இன்றைய இலங்கை கலாச்சாரத்தில் இராவணனின் சின்னங்கள் பல இடங்களில் திகழ்கின்றன . Ella Ravana Falls, Ravana Cave,Ravana Ella Temple போன்றவை அந்த மரபின் அடையாளங்கள். அவை சுற்றுலா வளர்ச்சிக்கும், கலாச்சார விழிப்புணர்வுக்கும் உதவுகின்றன. இது “சூழலுடன் இணைந்த வரலாற்று மனவியல்”(eco-historical psychology) எனப்படும் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும்.
இராவணனை “தீயவன்” என சித்தரித்த சில புராணங்கள் இருந்தாலும், இலங்கை மக்களின் பார்வையில் அவர் ஒரு வீரமும் அறிவும் இணைந்த தேசத் தலைவர். இது சமூகவியல் பார்வையில் “cultural re-framing”எனப்படும் சிந்தனை மாற்றத்தின் உதாரணமாகும். அதாவது ஒரு மனிதனின் வரலாற்றை மக்கள் தங்கள் கலாச்சார அடிப்படையில் மறுபரிமாணம் செய்யும் செயல்முறை.

இராவணனின் மதச்சார்ந்த மற்றும் தத்துவப் பார்வை

இராவணன் ஒரு சிவபக்தர். “சிவ தாண்டவ ஸ்தோத்ரம்” எனப்படும் புகழ்பெற்ற பாடல் அவரால் இயற்றப்பட்டது. அந்தப் பாடல் தத்துவ, உளவியல் மற்றும் ஆன்மீக சிந்தனைகளின் கலவையாக உள்ளது. அதில் “ஆழ்ந்த தியான நிலை, உடல், மனம் இணைப்பு, தத்துவம் மூலம் சுய உணர்வு” ஆகிய மனவியல் அடிப்படைகள் காணப்படுகின்றன.
அவரது பக்தி ஒரு உளவியல் தியான முறையாகும். mind-body integration. அவர் ஆன்மீகத்தின் மூலம் தன்னிலையை மேம்படுத்தினார். இது யோக தத்துவத்தின் முன்னோடி சிந்தனை எனலாம். அவர் தன் உள்ளுணர்வை அடக்கும் முயற்சியில் தோற்றாலும், அந்தப் போராட்டம் மனிதனின் மனநிலையின் பிரதிபலிப்பாகும். இதுவே இராவணனை “மனிதத்தன்மையின் உச்சநிலையும், வீழ்ச்சியையும் ஒரே உடலில் வெளிப்படுத்தியவர்” என அழைக்கச் செய்கிறது.

இலங்கை மற்றும் உலக மனதில் இராவணனின் நிலை

இன்று இலங்கையில் இராவணனை ஒரு கலாச்சாரப் பெருமையாகக் கொண்டாடுகின்றனர். ஆண்டுதோறும் “சுயஎயயெ குநளவiஎயட” நடத்தப்படுகிறது. இது கலாச்சாரம், சுற்றுலா, சமூக ஒருமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் விழாவாகும். அதில் அவரது ஆட்சியின் உளவியல் மதிப்புகள், கல்வி மற்றும் சமாதானத்தின் சிந்தனைகள் வெளிப்படுகின்றன.
இராவணனின் பெயரில் பல கல்வி நிறுவனங்கள், ஆய்வு மையங்கள் இயங்குகின்றன. “Ravana Research Foundation”, “Ravana Aeronautics” போன்ற அமைப்புகள் அவரது அறிவியல் பாரம்பரியத்தை தொடர்கின்றன. இது கடந்த கால நாகரிகத்தின் உளவியல் ஆழத்தையும் அறிவியல் சிந்தனையையும் மீட்டெடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

நவீன உறவியல் பார்வையில், இராவணன் “Complex Personality Structure”உடையவர். அவர் Introversion மற்றும் Dominance இரண்டையும் கொண்டவர். அவரிடம் Leadership traits மற்றும் Creative Intelligence மிகுந்தன. ஆனால் அவரின் Emotional Regulation குறைவானது அவரது வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய உளவியல் பாடம் அறிவு, ஆற்றல், தெய்வ பக்தி இருந்தாலும், உணர்ச்சி கட்டுப்பாடில்லையெனில் வீழ்ச்சி தவிர்க்க முடியாது. இது இன்றைய அரசியல் தலைவர்களுக்கும், சமூக மாற்றத்திற்கும் பொருந்தும் ஆழ்ந்த உளவியல் உண்மை.

இராவணன் வெறும் புராணக் கதாபாத்திரமல்ல் வரலாற்று நாயகன் அவர் ஒரு கலாச்சார அடையாளம், உளவியல்சார் சின்னம், சமூக முன்னேற்றத்தின் தத்துவம். அவர் செய்த சிலபிழைகள் மனிதனின் இயல்பை பிரதிபலிக்கின்றன் அவர் சாதித்த மகத்தான செயல்கள் மனிதனின் திறனை பிரதிபலிக்கின்றன.


இலங்கையின் மண்ணில் அவர் விட்டுச் சென்ற மரபு, ஆட்சியின் நேர்மை, அறிவின் பெருமை, கலைக்கான மதிப்பு, பெண்களின் மரியாதை, இயற்கையின் பாசம், மனநிலையின் ஆழம் என அனைத்தும் இன்றைய உலகத்திற்கே வழிகாட்டியாகின்றன.

இராவணன் எனும் பெயர் நம் மனதில் “அழிவு” அல்ல, “அறிவு” எனப் பதிய வேண்டும். அவர் செய்த பல்வேறுபட்ட செயல்களிலிருந்து நாம் உளவியல் கற்றுக் கொள்ள வேண்டும்; அவர் உருவாக்கிய சிந்தனைகளிலிருந்து நாம் சமூக நன்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். காலம் உள்ள வரைக்கும் இராமன் பேசப்பட்டு கொண்டிருப்பானானால் அவனை எதிர்த்த இராவணனும் பேசப்பட்டுக் கொண்டுதான் இருப்பான். இராவணன் எப்போதும் இரங்கத்தக்கதன் இல்லை, கோவில் கட்டி வணங்கத்தக்கவன்.

அதனால் தான் இன்று உளவியல், வரலாறு, சமூகஅறிவு, கலாச்சாரம் அனைத்திலும் இராவணன் என்ற பெயர் ஒரு நிலைமையின் பிரதிநிதி அல்ல, தமிழரினதும், தமிழ்நாகரிகத்தினதும் பிரதிநிதி!.

Related posts

இதழ் 90

Editor

நாவலரின் இறுதி நிமிடங்கள்

Editor

அதிகரித்து வரும் துஷ்பிரயோகமும் சிறுவர் பாதுகாப்பும் ஓர் பார்வை ….

Editor

Leave a Comment