மருத்துவர் வினோதா அச்சுதன்
யாழ். மாவட்டத்தில் போதைப் பொருளின் தாக்கம் அதிகமாகப் பரவியுள்ளது. இது சிறுவர்களையும் பாதித்துள்ளது என மருத்துவர் வினோதா அச்சுதன் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் பிள்ளைகள் சமூகத்திற்கு வேண்டப்படாத பிள்ளை கள் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். ஆரம் பத்திலேயே போதைப்பொ ருளுக்கு அடிமையான பிள் ளைகளை அழைத்து வந்து உரிய முறையில் சிகிச்சை யை பெற்றுக் கொடுத்தால் அவர்களை ஆரம்பத்தில் இருந்த பிள்ளைகளாக மாற்ற முடியும்
பல வருடங்களாக சாவகச்சேரியில் போதைப் பொருளுக்கு அடிமையா னவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். என் னிடம் சிகிச்சை பெற்ற பலர் போதைப் பொருள் பழக்கத் தில் இருந்து முற்றாக விடு பட்டு இருக்கிறார்கள்.
சிகிச்சை பலனளிக்காது அல்லது போதைப்பொருள் பாவிப்பவர்களை உதவாத
பிள்ளைகள் என்று தவறாக நினைக்காமல் அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை பெற்றுக் கொடுத்தால் அவர் களை மாற்ற முடியும்.
தற்போதைய காலத்தில் பாடசாலை மாணவர்களும் இந்த போதைப் பொருளால் பாதிப்படைந்துள்ளார்கள்.
ஒவ்வொரு மாணவர்க ளையும் வகுப்பறையில் நன்றாக கவனித்து வரும் ஆசிரியரால் ஒரு மாணவன் போதைப் பொருளால் கடு மையாக பாதிப்படைந்திருந் தால் அந்த மாணவனுடைய செயற்பாட்டை வைத்து மிக இலகுவாக கண்டுபிடிக்க லாம் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் மிக அவதானமாக இருக்க வேண்டும் பிள்ளைகள் திடீ ரென்று பெரியவர்களுடன் சேருகின்றார்கள் என்று செ ான்னால் அது தொடர்பில் ஆராய வேண்டும் அவ்வாறு
பெரியவர் களுடன் சேரும் அதிகள வான சி றியவர் போதைக்கு மிக விரை வாக அடிமையாகுவதை அவதானிக்க முடிகிறது. போதைக்கு அடிமையான வர்களை குணப்படுத்தும் சி கிச்சை சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணத்தில் அளிக்கப் படுகிறது.
ஆகவே போதைப் பொருளால் கடுமையாக பாதிப்படைந்த உங்களு டைய பிள்ளைகள், உற வினர்களை வேண்டாதவர் களாக நினைக்காமல் அவர் களை அழைத்து வந்து உரிய முறையில் சிகிச்சை அளித்து போதைப் பொருள் தாக்கத்தி லிருந்து அவர்களை விடு பட செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்தார்
