இதழ் 93

அகம் எவ்வாறோ!! புறமும் அவ்வாறே.

வாழ்க்கையானது உள்ளிருந்து வெளியே வாழப்படுகிறது.புறத்தில் நீங்கள் செய்யும் அனைத்தும் உங்கள் அகத்தில் இருக்கும் உங்களது அக உணர்வு, கருத்து, மதிப்பீடுகளால் தீர்மானிக்கபடுகின்றன.அவை தெளிவானவையாக இருந்தாலும் சரி எவ்வளவு குழப்பமானவையாக இருந்தாலும் சரி.உங்களுக்கு எவ்வளவு அளவு அகப்புற தெளிவு இருக்கிறதோ வெளியுலகில் உங்கள் செயற்பாடுகள் அவ்வளவு அதிக துல்லியமானவையாகவும் பலனளிப்பவையாகவும் இருக்கும்.உங்களது மதிப்பீடுகள்தான் உங்களை பற்றியும் உங்களை சுற்றியுள்ள உலகத்தை பற்றியுமான உங்களது நம்பிக்கைகளை தீர்மானிக்கின்றன.அன்பு,மனிதாபிமானம்,கருணை,நேசம் போன்ற நேர்மறையான மதிப்பீடுகளை நீங்கள் கொண்டு காணப்பப்டால் வெளியுலகில் ஒரு நேர்மறையான மனிதராக திகழ்வீர்கள்.மக்களுடைய புற வாழ்வின் சூழ்நிலைகளை பார்ப்பதன் மூலம் பெரும்பாலான நேரங்களில் அவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை உங்களால் கூறிவிட முடியும்.மனதளவில் ஒரு நேர்மறையான தன்னம்பிக்கையும் இலக்குகளும் கொண்ட,எதிர்காலத்தை நோக்கி நடை போடுகின்ற ஒருவர், பெரும்பாலான நேரம் வெளிப்புற வாழ்வில் மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் செல்வ செழிப்புடன் இருப்பார்.
“வாழ்வில் சொந்த மகிழ்ச்சியை அடைவது தான் மனித வாழ்வின் உச்சகட்ட குறிக்கோள் அல்லது இலக்கு என்று அரிஸ்டோடில் கூறியுள்ளார்.அதாவது புற உலகில் நீங்கள் செய்பவை உங்களது உள்ளார்ந்த மதிப்பீடுகளுடன் ஒத்திசைவாக இருக்கும் போது நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.உங்கள் இலக்குகள் உங்கள் மதிபீடுகளுடன் ஒத்திசைவாக இருக்க வேண்டும்.உங்கள் மதிப்பீடுகள் உங்களது இலக்குடன் ஒத்திசைவாக இருக்க வேண்டும்.அதுவே உயர்ந்த சாதனைக்கும் உயர் செயற்திறனுக்கும் ஆரம்பமாக இருக்கிறது.உங்கள் வாழ்வில் உங்களுக்கு உண்மையிலே எது முக்கியம் என்பதை நீங்கள் தான் தெளிவாக சிந்திக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு சாதனையும் இன்னொரு வெற்றிடமாக மாறும். பலர் தங்கள் உள்ளே இருக்கும் வெற்றிடத்தை வேலை, உறவு, பணம், மதிப்பு ஆகியவற்றால் நிரப்ப முயல்கிறார்கள். ஆனால் உள்ளே தெளிவு இல்லாத இடத்தில் எதை வைத்தாலும் அது நிரம்பாது. ஏனெனில், வெற்றிடம் என்பது வெளிப்புறக் குறைபாடு அல்ல் அது உள் முரண்பாடு. நீங்கள் வாழும் வாழ்க்கை, நீங்கள் மதிப்பதாக சொல்லும் விஷயங்களுக்கு எதிராக நகரும் போது உருவாகும் கசப்பான அனுபவம் தான் அது.

நீங்கள் உங்களுக்குள் நிலைப்படுத்தியுள்ள மதிப்பீடுகளுக்கு முரணான ஒரு வழியில் புற உலகில் நீங்கள் வாழ முயற்சித்தால்,அது உங்களுக்கு மன அழுத்தத்தையும் மகிழ்ச்சியின்மையையும் அவநம்பிக்கையையும் கோபத்தையும் வெறுப்பையும் விரக்தியையும் விளைவிக்கும். எனவே நீங்கள் செய்யும் அனைத்திலும் உங்கள் மதிப்பீடுகளை பற்றி முழுமையான தெளிவை உருவாக்கிகொள்வது தான் ஒரு அழகான நிம்மதியான வாழ்க்கையை வாழ சிறந்த வழி.
வெற்றிக்கான ஏணியின் மீது தட்டுதடுமாறி நீங்கள் ஏறும்பபோது,அது சரியான சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.- என ஸ்டீவன் கவி கூறுகிறார். அதாவது நீங்கள் வேகமாக ஏறிக்கொண்டிருக்கலாம். கை கிழிந்து, மூச்சு திணறி, இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த ஏணி தவறான சுவரில் சாய்ந்திருந்தால்? உச்சத்தை அடைந்த பிறகுதான் உண்மை புரியும். அப்போது திரும்பி வர சக்தி இருக்காது.தம்முடைய உண்மையான விருப்பம் இதுதான் என்று நினைத்துக்கொண்டு தங்கள் இலக்குகளை அடைவதற்காக கடினமாக உழைக்கும் பலர்,இறுதியில் தம் சாதனைகளில் எந்த மகிழ்ச்சியும் மன நிறைவும் தமக்கு கிடைக்காமல் போவதை காண்கிறார்கள்.
இதனால் தான், வாழ்க்கையில் மிகத் துணிச்சலான செயல் என்னவென்றால் தன்னைத் தானே நேர்மையாகக் கேள்வி கேட்பது.
•நான் ஓடிக்கொண்டிருக்கும் இந்த இலக்கு, உண்மையில் எனது அகஉணர்வில் இருந்து பிறந்ததா?
•இல்லையெனில், பிறர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முயற்சியா?
•இந்த வாழ்க்கையை 10 வருடங்கள் வாழ்ந்தால், நான் என்னை மதிப்பேனா?
இவ்வாறு உங்களை நீங்களே கேட்டு அதற்கு பதில் அளிக்கும் போது சரியான பாதையில் பயணிப்பவராக உணர்வீர்கள்.

ஏமைவழச குசயமெட கூறியது போல, மனிதன் மகிழ்ச்சியைத் துரத்துவதால் அல்ல—அர்த்தத்தை உணர்வதனால் வாழ்கிறான். அந்த அர்த்தம், உங்கள் மதிப்பீடுகளோடு ஒத்திசைவாக வாழும் தருணங்களில் மட்டுமே உருவாகிறது. அதனால்தான், கடினமான வாழ்க்கையிலும் சிலர் அமைதியாக இருக்கிறார்கள்; எல்லாம் இருந்தும் சிலர் உடைந்து போகிறார்கள்.
உண்மையில் மாற்றம் தொடங்குவது எங்கேயென்றால்—
நீங்கள் உங்கள் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்யும் அந்த அமைதியான தருணத்தில்.
“நான் இவ்வளவு தூரம் வந்துவிட்டேன், ஆனால் இது நான் விரும்பிய வாழ்க்கையா?” என்று நேர்மையாக கேட்கும் போது.அந்தக் கேள்வியிலிருந்து தப்பிக்காதீர்கள்.ஏனெனில் அதற்கான பதில் தான் உங்கள் அடுத்த வாழ்க்கையாக மாறும்.வெளியுலகம் உங்களை மதிக்க வேண்டும் என்ற ஆசையை விடுங்கள்.உங்கள் அகமே உங்களை மதிக்கிறதா என்று பாருங்கள்.

ஒரு நிம்மதியான வாழ்க்கை என்பது பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை அல்ல. அது உங்கள் மதிப்பீடுகளுடன் நேர்மையாகப் போராடும் வாழ்க்கை.நீங்கள் எதை இழக்கத் தயாராக இருக்கிறீர்களோ, அதுவே உங்கள் உண்மையான மதிப்பீடு.நீங்கள் எதற்காக “இல்லை” என்று சொல்லத் துணிகிறீர்களோ, அதுவே உங்கள் அடையாளம். ஏனெனில்,அகம் சிதைந்திருந்தால், புற உலகில் கிடைக்கும் எந்த வெற்றியும் சத்தமில்லாத தோல்விதான்.ஆனால் அகம் தெளிவாக இருந்தால், சிறிய வாழ்க்கையுமே உயர்ந்த வாழ்வாக மாறிவிடும்.
அக தெளிவு என்பது எப்போதும் அமைதியாக இருப்பது அல்ல.சில நேரங்களில் அது உங்களை தனிமைப்படுத்தும்.சில நேரங்களில் அது உங்களை தவறாக புரிந்துகொள்ளச்செய்யும்.ஆனால் ஒருநாளும் அது உங்களை பொய்யாக வாழ விடாது.
ளுøசநn முநைசமநபயயசன சொன்னது போல, “தன்னை இழந்துவிட்டு உலகை வெல்வது தான் மனிதனின் மிகப் பெரிய துயரம்.” இந்தத் துயரமே இன்று பலரின் வாழ்க்கை. வெளியில் அழகான பொருத்தமான முகமூடியும் உள்ளே தெளிவற்ற அடையாளமும் போல இருக்கும்
உங்கள் வாழ்க்கையை சீரமைப்பது பெரிய முடிவுகளால் அல்ல.
ஆனால் நேர்மையான சிறிய தேர்வுகளால் ஆகும்.
•இன்று நீங்கள் சொல்லும் ஒரு “இல்லை”
•இன்று நீங்கள் நிறுத்தும் ஒரு பொய் முயற்சி
•இன்று நீங்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு உண்மை
இவையெல்லாம் சேர்ந்து தான் அகத்தை மீண்டும் மையத்துக்கு கொண்டு வருகின்றன.ஒரு நாள், நீங்கள் பின்திரும்பிப் பார்க்கும்போது,“நான் சரியான முடிவுகளை எடுத்தேனா?” என்று கேட்கமாட்டீர்கள்.“நான் உண்மையாக வாழ்ந்தேனா?” என்று தான் கேட்பீர்கள்.அந்தக் கேள்விக்கு “ஆம்” என்று பதில் சொல்ல முடிந்தால்,அப்பொழுது நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை பெரியதா சிறியதா என்பது ஒரு விஷயமாக இருக்காது. மாறாக அது முழுமையானதாக இருக்கும்.

அகம் தெளிந்தால்,
புற உலகம் சரியாக அமையத் தொடங்கும்.

Related posts

வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கிறதா அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணி

Editor

மதம் பிடிக்காத வரை மனிதனைப் போலத்தான் யானைகளும்

Editor

தமிழரின் பண்பாட்டையும் அடையாளத்தையும் தாங்கும் தமிழ்மொழி

Editor

Leave a Comment