“அவர் ரொம்ப self-centered எல்லாமே அவரைப் பற்றிதான்!”
“அவங்க எப்போவும் pசயளைந வேண்டுமாம்!”
இப்படிப் பேசும் போது நாம் அதை ஒரு சாதாரண குணநலமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால் சில நேரங்களில் அது சாதாரண குணநலமல்ல அது ஒரு ஆழமான உளவியல் கோளாறாக இருக்கலாம். அதுவே Narcissistic Personality Disorder..
Narcissism. என்றால் என்ன? “Narcissism.” என்ற சொல் கிரேக்க புராணக் கதாபாத்திரமான Narcissism. என்பவரிடமிருந்து வந்தது. தன் பிரதிபலிப்பை பார்த்து தன்னையே காதலித்தவர் என்ற கதையிலிருந்து இந்த பெயர் உருவானது. ஆனால் நிஜ வாழ்க்கையில் Narcissistic Personality Disorder (NPD) என்பது வெறும் தன்னம்பிக்கை அல்ல.
NPD உடைய நபர்களில் காணப்படும் சில அம்சங்கள்:
தன்னையே மிக உயர்வாக நினைத்தல்
எப்போதும் பாராட்டும் கவனமும் எதிர்பார்த்தல்
பிறரின் உணர்வுகளை புரிந்துகொள்ள இயலாமை
விமர்சனத்தை சகிக்க முடியாமை
உறவுகளில் ஆதிக்கம் செலுத்தும் நடத்தை
இவர்கள் வெளிப்படையாக மிகவும் நம்பிக்கையுடன் தோன்றினாலும், உள்ளார்ந்த நிலையில் மிக நுணுக்கமான தாழ்வு உணர்வை மறைத்துக் கொண்டிருக்கலாம்.
“அவரோட குணம் அப்படித்தான்” என்று சொல்லிவிடலாமா?
சாதாரண தன்னம்பிக்கை மற்றும் NPD இடையே வித்தியாசம் உள்ளது. தன்னம்பிக்கை கொண்ட நபர் மற்றவர்களையும் மதிப்பார். ஆனால் NPD உடையவர் உறவுகளை தன் தேவைக்கே பயன்படுத்தும் அபாயம் உண்டு. இது குடும்ப வாழ்க்கை, காதல் உறவு, வேலை சூழல் ஆகிய அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பலர் இப்படிப்பட்ட நடத்தை “அவரோட Character அப்படித்தான்” என்று சமரசப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் தொடர்ந்து மனஅழுத்தம், தாழ்வு உணர்வு, துன்பம் ஏற்படுகிறதெனில் அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
காரணங்கள்
NPD உருவாகுவதற்கு பல காரணிகள் உள்ளன:
சிறு வயதில் அதிகமாக புகழப்பட்ட அனுபவங்கள் அல்லது கடுமையான விமர்சன அனுபவங்கள்
பெற்றோர் – குழந்தை உறவு சிக்கல்கள்
மரபியல் மற்றும் மூளை வளர்ச்சி தொடர்பான காரணிகள்
இதனை உளவியல் மற்றும் மனநலத் துறையில் வகைப்படுத்தி விளக்குவது American Psychiatric Association வெளியிட்ட Diagnostic and Statistical Manual of Mental Disorders ஆகும்.
சிகிச்சை இருக்கிறதா? ஆம். Personality Disorders க்கு உடனடி “மருந்து” இல்லை என்றாலும், நீண்டகால உளவியல் சிகிச்சை மூலம் நடத்தை மாற்றம் சாத்தியமாகும். குறிப்பாக Cognitive Behavioral Therapy போன்ற முறைகள் உதவக்கூடும். முக்கியமாக, நபரே தன் பிரச்சினையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சமூகத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?
Narcissism என்பதை “அதிக தன்னம்பிக்கை” என்று தவறாக புரிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டாமல், புரிதலுடன் அணுக வேண்டும்.
மனநல ஆலோசனை பெறுவது பலவீனம் அல்ல என்பதை ஏற்க வேண்டும்.
முடிவாக, எல்லோரும் தங்களை நேசிப்பது இயல்பு. ஆனால் தன்னை நேசிக்கும் போது மற்றவர்களை இகழ்ந்து, அவர்களின் உணர்வுகளை புறக்கணிக்கத் தொடங்கினால், அது ஒரு எச்சரிக்கை மணி. “அவரோட குணம் அப்படித்தான்” என்று சொல்லிவிடாமல், அதன் பின்னுள்ள உளவியல் உண்மையை புரிந்துகொள்வதே ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம்.
இவ்வாறு மேலும் பல சுவாரஸ்யமான உளவியல் விடயங்கள் தொடர்பாக இப்பகுதியில் அறிந்து கொள்வோம்…

