இதழ் 95

புலன் கடந்த புலக்காட்சியில் தொலையுணர்வு(Telepathy)

உலகின் பல்வேறுபட்ட துறைகளை ஆய்வுக்கு உட்படுத்தியும் தாக்கத்தை ஏற்படுத்தியும் மனித சமுதாயத்திற்கு மிகவும் பயன்படும் ஒரு விஞ்ஞானமாக உளவியல் காணப்படுகின்றது. உளவியல் என்பது பொதுவாக மனித நடத்தையினை ஆய்வு செய்யும் ஒரு விஞ்ஞானமாக கருதப்படுகின்றது. இது நடத்தையை ஆராய்ந்து அறிவதுடன் உள்ளம் அல்லது மனதின் செயற்பாடு பற்றி விளக்குகின்றது. இந்த உளவியல் துறையானது பல்வேறுபட்ட கிளைகளை கொண்டதாக விளங்குகின்றது. சமுதாய உளவியல், குழந்தை உளவியல், கல்வி உளவியல், ராணுவ உளவியல், உயிரியல் உளவியல், விருத்தி உளவியல், ஆற்றுப்படுத்தல் உளவியல் ,கடப்பு உளவியல் என பல்வேறு வகைபாடுகளை கொண்டு காணப்படுகின்றது இவற்றுள் ‘கடப்பு நிலை உளவியல்” உளவியலில் முக்கியமானதாக காணப்படுகின்றது. கடப்பு நிலை உளவியலில் புலன்களை பயன்படுத்தாமல் புலக்காட்சி பெற்றுக்கொள்ளும் வகையில் அமைந்த புலன் கடந்த புலக் காட்சி எனும் ஒரு பிரிவு காணப்படுகின்றது.


பொதுவாக உளவியல் மனித மனம் பற்றிய அறிவுத்துறை என்று குறிப்பிடப்படுகின்றது ஆயினும் இந்த கடப்பு நிலை உளவியல் (Para Psychology) அப்பாற்பட்ட மனம் பற்றிய அறிவியலாக விளங்குகின்றது. இதனை ‘அப்பாற்பட்ட உளவியல்” என்றும் ‘அதீத உளவியல்” என்றும் அழைக்கின்றனர். மனம் மூலம் சாத்தியப்படும் செயல்களை மனிதனுக்கு புரியாத மர்ம வித்தைகளை, உள்ளடக்கிய மர்ம விடயமாக,அறிவிக்க அப்பாற்பட்டதாக, புரியாததாக இது உள்ளது.புலன் அங்கங்கள் மற்றும் தொழில் புலன் முதலியன உதவியின்றி செயல் புரியும் மற்றும் காரியங்களை நடாத்தும் மன இயக்கம் ஆகும். இதனையே கடப்பு உளவியல் என்று அழைக்கின்றனர்.


புறச் சூழலில் இருந்து தகவல்களை புலன் உறுப்பு மூலம் பெறுகின்றோம். ஒவ்வொரு புலன்களாலும் புலன் உணர்ச்சி உண்டாகிறது. புலன்களால் பெறப்பட்ட தகவல்களை மின் கணத்தாக்காக மாற்றப்பட்டு மூளையில் பெற்றுக்கொள்ளப்பட்டு அந்த தகவல் என்னவென்று அர்த்தம் கூறக்கூடிய செயல்பாடு புலக்காட்சி ஆகும். புலன் உணர்ச்சி எல்லோருக்கும் பொதுவானது ஆனால் அனுபவத்தின் அடிப்படையில் புலக்காட்சி ஆளுக்கு ஆள் வேறுபடும். ஏனெனில் ஒரு பொருளைப் பற்றி, நிகழ்ச்சி பற்றி பலரும் பல கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் பெற்றுக் கொள்ளலாம். புலன்கள் மூலம் ஒரு பொருளை அறியும் போது அந்த செய்தி நரம்புகள் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்லப்படும். ஐம்புலன்களில் இருந்து மூளைக்கு பதிவாகும் உணர்வை புலன் உணர்ச்சி என்கிறோம். அச்செய்தி மூளையை அடைந்ததும் மூளை அதற்கு பொருள் கண்டுபிடிக்கிறது. இதனையே புலக்காட்சி என்கிறோம். எனவே ஐம்புலன்களால் ஒரு பொருளை உணர்தலே புலக் காட்சி எனப்படுகிறது.
இந்த புலக்காச்சியிலிருந்து மாறுபட்ட ஒன்றாக புலன் கடந்த புலக் காட்சி அமைகின்றது. இது அசாதாரண மற்றும் அதீத சக்தி நிலையாக கொள்ளப்படுகின்றது. ‘உளச்சத்தி ஆராய்ச்சி” என்று அழைக்கப்படும் கடப்பு உளவியல் அசாதாரண விஞ்ஞான ஆற்றலையும், அசாதாரண செயல்களையும், இயல்பாக செய்ய முடியாத செயல்களையும் ஆராயும் ஓர் துறையாகும்.இந்த உளவியலாளர்கள் அசாதாரண செயற்பாடுகளை இரண்டு பிரிவாக பார்க்கின்றனர்.

  1. Extra Sensory Perception (ESP)
  2. Psychokinesis (உளந்தால் இயங்கியல்)
    இந்த அசாதாரண நிலைகளில் ஒன்றான புலன் கடந்த புலக்காட்சி முக்கியமாக காணப்படுகிறது. புலன் கடந்த புலக்காட்சி என்பது புலன் உணர்விற்கு அப்பாற்பட்ட ஒன்று ஆகும். இது ஐம்புலன்களால் உணரப்படாத அப்பாற்பட்டது ஆகும். இதனை ESP என்றும் அழைப்பர். இதன் விரிவாக்கம் Extra sensory perception என குறிப்பிடப்படுகின்றது. சில இடங்களில் Extra sensory power என்றும் குறிப்பிடப்படுவது இங்கே அவதானிக்கத்தக்க விடயமாகும். (அறிவின் வாயில்கள்) என்று அழைக்கப்படும் ஐம்புலன்களின் தொடர்பின்றி இது நிகழ்கின்றது. இதனால் இது ‘ஆறாவது உணர்வு’ என்றும் அழைக்கப்படுகின்றது. நாம் வழக்கமாக ஐம்புலன்களின் ஊடாகவே தரவுகளை பெற்று புலக்காட்சி பெறுகிறோம். அந்த வகையில் புலன்களை பயன்படுத்தாமல் சுற்றியுள்ள உலகு பற்றிய தகவல்களை பெறும் திறனாக புலன் கடந்த புலக்காட்சி உள்ளது. புலன் கடந்த புலக் காட்சி பற்றி கற்பதை அதீத உளவியல் என்றும் அழைக்கிறோம்.
    ஜோசப் பான்ஸ் ரைன் (Joseph Panks Rhine) என்பவர் Extra sensory perception என்ற சொல்லை முதன் முதலில் பிரபல்யப்படுத்தியதுடன் பல பரிசோதனைகளையும் அது தொடர்பாக நடத்தினார; அத்தோடு இவரது ஆய்வின் பிரதிபலனாக நேற Frontiers of the mind என்ற நூலை 1937 இல் வெளியிட்டதுடன் அந்நூலிலே Para Psychology என்ற வார்த்தையும் பயன்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
    ஐம்புலன்களை பயன்படுத்தாமல் தங்களை சுற்றியுள்ள உலகு பற்றிய தகவல்களை பெறும் திறனாகவும் அறியப்பட்ட புலன் தரவுகளுக்கு அப்பாற்பட்ட விடயங்களை அனுபவிக்க முடியும் என்பதாகும். மனம் உடலை தாண்டி புலன்களின் எல்லையை அவை தாண்டி இயங்குமானால் Para Psychology பல நடவடிக்கைகள் விளைகின்றன. பௌதீக உலகை ஐந்து விதமாக அறிய முடியும். ஒலியாக, ஒளியாக, மணமாக, சுவையாக மற்றும் தொடுகையாக உலகை அறிய முடியும். ஆனால் புலன் கடந்த புலக்காட்சி அதுக்கு அப்பாற்பட்ட தன்மையாக காணப்படுகின்றது. ESP >id Second sight என்றும் அழைக்கின்றனர். புலன் கடந்த புலக்காட்சி பற்றி பல்வேறு சர்ச்சைகள், ஆய்வுகள், கருத்துக்கணிப்புகள் என்பன ஆராய்ச்சியாளர்களிடம் இன்று வரை இடம்பெற்று வருகின்றனர். ஏனெனில் 100% இதனை உண்மை என்றோ அல்லது பொய் என்றோ உறுதிப்படுத்தபடாமை ஆகும்.
    புலன் கடந்த புலன் காட்சியை சிலர் எல்லோருக்கும் காணப்படும் ஒரு பொதுவான ஒன்றாக குறிப்பிடுகின்றனர்.சிலர் இதனை ஒரு சிலருக்கு மட்டும் உரித்தான தனி பண்பாக விளக்க முற்படுகின்றமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்க ஒரு விடயமாகும். இவ்வாறான பல்வேறு கருத்துக்கள் காணப்பட்ட போதிலும் பொதுவாக எல்லோருக்கும் உணர்வுகள் ஏற்பட்டிருப்பதை அறியக்கூடியதாக உள்ளது நாம் ஒருவரை பற்றி நினைக்கும் போது அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி சில சமயம் வருவது சில சமயம் நேரிலும் வரும் சந்தர்ப்பம் உள்ளது. நாம் ஒருவரை தூரத்தில் பார்க்கும்போது கண்முன்னே காட்சியளிப்பது, ஒரு இடத்திற்கு செல்லும் போது முன்பே அங்கு வந்தது போன்ற அனுபவம், காட்சி ஏற்படுதல் போன்ற பலவற்றைக் கூறலாம். இவற்றைப் புலன் கடந்த புலக்காட்சிகளாக கூற முடியும்.
    புலன் கடந்த புலக்காட்சி பல்வேறு வகையாக விளங்குகின்றன அவற்றுள் பிரதானமாக
     தொலை உணர்வு(Telepathy)
     முன்னறிதல் (Precognition))
     பின்னோக்கி அறிதல் (Retro Cognition)
     மனக்கண் காட்சி (Clairvoyance)
     ஆவிகளுடன் பேசல் (Mediumship)
     பொருள் பற்றி அறிதல் (Psychometry)
     தெளிவுத்திறன் (Clairavdience)
    போன்றவை முக்கியமானவையாக விளங்குகின்றன .
    இவை தவிர Apporation (மறையச் செய்தல்), &gt Aura reading (மனிதனை சுற்றியுள்ள ஒலிஅலைகளை காணல்), &gt Automatic writing (பிற சக்தியின் உதவியுடன் எழுதுதல்), &gt Extra Smelling (ஒரே நேரத்தில் பல இடங்களில் இருத்தல்), &gt Extra Smelling (அதீதம் மணத்தினை அறியும் திறன்), &gt Extra sence of Testing (அதீத சுவையுணர்வு), &gt Extra sence of touching (அதீத தொடுகை உணர்வு) முதலிய பல்வேறுபட்ட புலன் கடந்த புலன்காட்சிகள் கடப்பாட்டு உளவியலில் காணப்படுகின்றன. அவற்றுள் பிரதானமான முக்கியத்துவம் மிக்க ஒரு புலன் கடந்த புலன் காட்சி வகையாக ‘தொலைவுணர்வு” என்பது காணப்படுகின்றது.
    ஒரு மனதில் இருந்து இன்னொரு மனதுடன் தொடர்பு கொள்வதை குறிக்கும். எமது மனதில் உள்ள எண்ணங்கள் சிந்தனைகள் எவ்வித தொடர்பான அமைப்புமின்றி மற்றவர்களுக்கும் மற்றவரின் எண்ணங்கள் சிந்தனைகள் தொடர்பான அமைப்பு இன்றி நாமும் புலக்காட்சி செய்யும் திறமையாகும்.இது தனியே இருவருக்கிடையே மட்டுமல்லாமல் பேச்சு, உடல் மொழி,எழுத்து பிற தனிப்பட்ட வழிகளை பயன்படுத்தாமல் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மனங்களை நேரடி தொடர்பு கொள்ளும் திறனாகவும் விளக்கப்படுகிறது. கு.று.ர் ஆலசநள என்பவர் ஒரு மனதில் இருந்து மற்றதிற்கு புலன்கள் உதவி இன்றி அனுப்புதல் எனவும் எண்ண பரிமாற்றம் எனக் குறிப்பிட்டது மற்றுமன்றி 1882 இல் ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட நபருடன் தங்கள் மனதை பயன்படுத்தி தொடர்பாட முடியும் என்கிறார்.
    கிரேக்க சொல்லிலிருந்து தோன்றிய இச்சொல் Tele-தூரம் என்றும் Pathieo- உணர்வு என்று பொருள்படுகிறது. டெலிபதி என்பது தூர உணர்வு என்றும் தொலை உணர்வு என்றும் குறிப்பிடப்படுகின்றது. இங்கு அறிவு கடத்தப்படும் அதாவது ஒருவர் தம் மனதில் இருக்கும் கருத்தை தான் நினைப்பதை அடுத்தவர் மனதிற்கு அனுப்புகிறார்.
    அதை அவர் அப்படியே புரிந்து கொண்டால் அதை டெலிபதி எனலாம். இதில் இரண்டு மனம் சம்பந்தப்பட்டிருக்கும். அனுப்புபவர், பெறுபவர் முதலான இருவரின் மனமும் சம்பந்தப்பட்டதாக இருக்கும். மனம் மூலம் செய்தி அனுப்புவதால் ஷமானசதந்தி| எனவும் குறிப்பிடுகின்றன. இதில் இடம் தொடர்பாக அருகிலோ அல்லது தூரமோ என்ற கருத்து இல்லை. நேரம் எவ்வளவு என்பதும் தேவையில்லை ஒருவர் கருத்தை அனுப்பியதுமே அது யாருக்கு அனுப்பப்பட்டதோ அவர் உடனே புரிந்து கொண்டுவிடுகிறார். இது ஒரு மானசீக வேலையாக கருதப்படுகின்றது. ஆiனெ ழn வாந அநவவநச என்பது தெளிவாகின்றது. லாப்லொங்ரம்ப்பா எழுதிய ஷமூன்றாம் கண்| என்ற நூலில் ஓரிடத்தில் சென்றால் புதுப்புது எண்ணங்கள் உண்டாக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இது ஓர் டெலிபதி சார்ந்த சம்பவமாகவும் குறிப்பிடுகின்றார்.
    பழங்காலத்தில் முனிவர்கள் யோகிகள் போன்றோர் தங்களுடைய குருவிடம் இருந்து இந்த சக்தி மூலமாக அறிவும் ஞானமும் பெற்றிருந்தமை நாம் புராணக் கதைகள் சமய நூல்கள் முதலானவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம். உளவியலாளரான Mind on the metter ஆனு நெருங்கியவர்களுள் டெலிபதி சக்தி இருக்கும் என நம்பினார். இதனால் இவர் தனக்கும் தனது மனைவிக்கும் தனது இரு மகன்களுக்கும் இடையே உள்ள டெலிபதி அனுபவங்களை திகதியுடன் குறித்து வைத்தார். இவர் எட்டு ஆண்டுகளில் கிட்டதட்ட 1500க்கு மேற்பட்ட தெளிவான டெலிபதி உணர்வுகள் ஏற்பட்டதாக குறிப்பிடுகின்றார்.
    Mental communication என அழைக்கப்படும் இது Brain waves இனை வைத்து புரிதல் மூலம் இடம்பெறுகின்றது. இது எல்லா நேரமும் நடப்பதில்லை ஊடகம், தகவல் தொடர்பு சாதனங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட இவ்வுலகத்தில் அதிசயிக்கும் தொடர்பாடல் வடிவமாக டெலிபதி மனித மூளை மற்றும் ஆன்மாவுடனான தொடர்பாடல் என்று வரையறுக்கப்படுகின்றது. ஆழ்மன உதவியுடன் மனித மற்றும் பிற உயிரினங்களுடன் தொடர்பு கொள்ளும் முறையாக இது காணப்படுகின்றது.
    டெலிபதி நிகழ்வுகள் சாதாரணமான வாழ்வில் நிறைய நடக்கின்றன. இதில் மன எண்ணம் மற்றும் கருத்துகள் மிக நெருக்கமானவர்களிடம் பரிமாற்ற பயன்படுகிறது. தாய், தந்தை, பிள்ளை, சகோதரர், நெருங்கிய நண்பர்கள், உறவு நிலையில் இப்போது இது நிறையவே பயன்படுத்தப்பட்டுள்ளது. வீட்டிற்குள் நாம் எங்கோ சென்று விட்டு நுழையும் போது ‘அம்மா நான் இப்பதான் உன்னை பற்றி பேசிட்டு இருக்கிறேன் நினைச்சுட்டு இருந்தேன் வாராய்” எனக் கூறுவது நாம் ஒரு நெருங்கிய நண்பனையோ அல்லது நண்பியையோ நினைக்கும் போது அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருதல், குறுஞ்செய்தி வருதல் மற்றும் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது அதே அவரும் அதே நேரத்தில் பார்த்தல், பாட்டு பாடல், முதலானவற்றின்போது நெருங்கிய நண்பர் ஒரே நேரத்தில் சொல்லல் மற்றும் விரிவுரைகளில் கேள்விகள் வினவப்படும் போது நண்பர்கள் கூற நினைக்கும் போது பதில் கூறல் முதலானவற்றை குறித்து காட்ட முடியும். இரட்டை சகோதரர்கள் மத்தியில் அதிக அளவு செயற்பாடுகளில் இருக்கும் நுண்ணறிவுகள் முதலானவற்றையும் குறிப்பிட முடியும். ஒரு சிலர் இக்கருத்து கொண்டே வெளிநாடுகளில் உள்ள தனி நபர் உறவுகள் பற்றியும் அவர் என்ன செய்கிறார்கள் என்பது பற்றியும் சரியாக கூறுவர். இவ்வாறு பல்வேறுபட்டு நிகழ்வுகள் சம்பவங்களில் டெலிபதியின் தாக்கம் இருப்பதை காணலாம்.
    உள்மன உதவியுடன் டெலிபதி நிகழும். இந்த டெலிபதி தன்னை அறியாமலும் நடக்கும் நுணுக்கம் அறிந்து செய்தி அனுப்புபவரும் உண்டு.வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் ஒருவர் பற்றி எண்ணுவோம் இது தனிப்பட்டதாக காணப்படுகின்றது. குழுவாகியும் டெலிபதி செய்யலாம் என்று ளுழஉநைவல கழச pளலஉhழடழபiஉயட சநளநயசஉh கூறுகின்றது. தானாக நடக்கும் என்பதை விட நுணுக்கம் அறிந்து நடப்பதால் நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன.மாயத் தோற்றம்,வசப்படுதல் நோய்வழங்கல், வலி முதலான தீயனவற்றையும் ஏற்படுத்துவதாக அமையாத வரையில் டெலிபதி சிறந்த ஒன்றாக கருதப்படும்.
    இதன் அடிப்படையில் டெலிபதி தொடர்பான பல்வேறு ஆய்வுகள் மனிதரற்ற விலங்குகளிலும் மேற்கொள்ளப்பட்டன. எலியுடன் தொடர்பு கொள்வதற்கு டெலிபதி முறை பயன்படுத்தப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. பிரித்தானிய உளவியலாளரான Dr.Willbert moore தொலைவு சக்தி ஒரு விசேட சக்தி என்றும் அது சிந்தித்தலின் அடிப்படையில் செயல்படவில்லை அது உணர்வுபூர்வமாக செயல்படுகிறது” எனக் கூறுகின்றார். டெலிபதி தனக்குத்தானே அல்லது தான் பிறருக்கு செய்யக் கூடியதாக காணப்படும். இது நாம் சாதாரணமான வழக்க செயல்களுக்கு மாறுபட்ட செயல்களை எப்படி பொறுப்பேற்கிறது என்பதையும் விளக்கப்படுத்துகின்றது. தொலைதூரம் செய்தி அனுப்பும் மற்றும் பெறும் முறை என்பதால் ஆலநசள என்பவர் வுநடநியவால எனக் கூற காரணமாக அமைந்தது.
    ஆங்கில ஹாலிவுட் திரைப்படங்களில் கூட அதிகமாக டெலிபதி சம்பவங்கள் பாத்திரங்களுடாக விளக்கப்படி இருப்பதை நாம் காணலாம். ஓ-ஆநn என்று அழைக்கப்படும் ஆங்கில ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் பேராசிரியர் மற்றும் பிறிதொரு பாத்திரம் டெலிபதி சக்தி கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் பல பாத்திரங்கள் சக்தி உள்ளது போல காட்டி இருப்பினும் டெலிபதி இந்த இரண்டு பாத்திரங்களுக்கும் பிரதானமாக காணப்படுகின்றது. படத்தில் டெலிபதி உணர்வு மூலம் துணை நடிகர் எதிரிகளின் கப்பல் மாலுமியின் மனதை கட்டுப்படுத்தி தகவல் அனுப்பி வரவிருக்கும் தீய செயலை தடுப்பது போன்று காட்டப்பட்டிருக்கும். அதனை விட சில நல்ல, கெட்ட காரியங்களுக்காக உபநடிகன் டெலிபதியை பயன்படுத்தி இருப்பதும் இங்கே சுட்டிக்காட்டுத்தக்கதாகும்.
    டெலிபதியினை முற்றாக நம்பாவிட்டாலும் கூட விஞ்ஞானத்தில் மிக முக்கிய ஒன்றாக எண்ணி பல ஆய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. நேரசழடiமெ என்ற உழஅpயலெ மூளை நினைப்பதை உhip மூலம் சேமித்து கணினியில் பொருத்தி அதன் மூலம் கனவுகளையோ கடந்த காலங்களையோ பார்க்க முடிகின்றது என குறிப்பிட்டுள்ளதுடன் எதிர்கால நவீன உலகில் வேலைகளை இலகுவாக்கவும் கட்டுப்படுத்த முடியும் என கூறுகின்றது. உதாரணமாக வீட்டுக்குள்ளே போகும்போது மின் குமிழை போட வேண்டும், அணைக்க வேண்டும் என நினைப்பதையும் உடனே உhip மூலம் தகவல் கடத்தப்பட்டு நிகழ்ச்சிகள் இடம் பெறும். இவற்றுக்கான ஆராய்ச்சி இன்று வரை இடம்பெற்ற வண்ணமே உள்ளது.இது டெலிபதியின் எதிர்கால நிலையை காட்டுவதாக உள்ளது.கனவுகள் முதலியன ஞாபகங்களை சேமித்து பார்க்க பயன்படும் எனக் கூறப்பட்ட இந்த எதிர்கால டெலிபதி தொழில்நுட்பம் கணினி உடனும் நவீன சாதனங்களுடன் இணைந்த படியினால் அதனை hயஉம செய்வதன் மூலம் கல்வி மற்றும் அரசியல் மற்றும் மனித வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் இங்கே நாம் மறக்கக்கூடாது.
    ஆரம்பத்தில் டெலிபதியே இல்லை என விஞ்ஞானம் குறிப்பிட்ட போதிலும் தற்கால ஆய்வுகளில் ESP என்ற விஞ்ஞான ஆய்வுக்கு உட்பட்டதாக இது தொடர்பான பல ஆய்வுகளை நடத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. ஹாவாட் பல்கலைக்கழகத்திலும் இது தொடர்பான மூளை சார் ஆய்வுகள் ஆய்வாளர்களால் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது ஆகும். இது ‘மாயம் இல்லை மந்திரம் இல்லை” என டெலிபதி பற்றி ஆய்வு குறிப்புகளை வெளியிட்டவராக குளியோ ரூபினி காணப்படுகின்றார்.
    இந்த மனத்தந்தி முறை சாதாரணமாகவும் அதாவது எனது நண்பர் ஒருவர் என்னைப் பற்றி அதிகமாக நினைக்கும் போதெல்லாம் நான் வெளியில் இருந்து அவரை வந்து பார்ப்பதாக அவர் குறிப்பிடுகிறார். (நூறு ஆயுளடா உனக்கு) என்று எமது பெற்றோர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ‘இப்பதான் நினைக்கிறேன் வந்துட்டா” எனகூறுவதும் ஒன்றாக காணப்படுகின்றது. சமீபத்தில் இந்தியாவில் இருக்கும் ஒரு நபருக்கும் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் ஒருவருக்கும் இடையில் புதிய தொழில்நுட்பம் மூலம் செய்தி அனுப்பி சோதனை செய்து பார்க்கப்பட்டது மூலம் ஒரு மனிதனின் மூளையிலிருந்து இன்னொரு மனிதனின் மூளைக்கு டெலிபதி அனுப்புவது இதுதான் முதல் தடவையாக கொள்ளப்படுகின்றது. எனவே புலன்கடந்த புலக்காட்சி வகைகளில் டெலிபதி முக்கியத்துவம் மிக்க ஒன்றாக கருதப்படுகிறது.

Related posts

பக்தி பூர்வமாக நடைபெற்ற நல்லை குரு முதல்வர் குருபூசை தினம்

Editor

புத்தரின் சித்தாந்தம் மதத்தையா மாற்றத்தையா போதித்தது?

Editor

வருங்காலத் தலைமுறைக்கு ஒரு வறண்ட பூமியையா பரிசளிக்க போகிறோம்?

Editor

Leave a Comment