இலங்கைக்கு வருகை தந்துள்ள நியூஸிலாந்து மகளிர் “ஏ” அணியை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் எதிர்த்தாடவுள்ள இலங்கை மகளிர் “ஏ” அணியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார் புனித பற்றிமா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி சதீஸ்குமார் சஜிந்தினி பெயரிடப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவ னத்தினால் நடத்தப்பட்ட திறன் தேடல் திட்டத்தின்போது சதீஸ்குமார் சஜிந்தினியின் ஆற்றல் இனங் காணப்பட்டதாக முன் னாள் முதல் தர கிரிக்கெட் வீரரும் மகளிர் அணி பயிற்றுநருமான
தார். ஹேமன்த தேவப்ரிய தெரிவித்
வலதுகை வேகப்பந்துவீச்சா ளரான சஜிந்தினி, சற்று வேகமாக பந்துவீசக்கூடியவர் எனவும் போட்டி அனுபவங்களின் மூலம் இன்னும் முன்னேற்றம் அடைவார் என நம்புவதாகவும் தேவப்ரிய கூறினார்.
இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட குழாத்தின் தலைவி யாக சத்யா சந்தீபனி நியமிக்கப் பட்டுள்ளதுடன் தேசிய மற்றும் இளையோர் மகளிர் அணிகளில் விளையாடிய வீராங்கனைகள் பலரும் வாய்ப்பை பெற்றுள்ள னர்.
