வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டிகள் யாழ்ப்பாணம் அருணோதயக் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இப்போட்டிகளில் மாகாணத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பல திறமையான வீராங்கனைகள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 50 கிலோகிராமுக்கு மேற்பட்ட எடைப்பிரிவின் கீழ் நடைபெற்ற கராத்தே குமுத்தே (Kumite) நிகழ்வில் யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஆன்திவிஷனா பங்குபற்றியிருந்தார். போட்டி முழுவதும் மிகச் சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்திய அவர், இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று முதலாமிடத்தை தனதாக்கிக் கொண்டார்.
வடமாகாண அளவில் நடைபெற்ற இக்கடினமான கராத்தே போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்த மகாஜனக் கல்லூரி மாணவி ஆன்திவிஷனாவுக்கு பாடசாலை சமூகத்தினரும், விளையாட்டு ரசிகர்களும் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
next post
