இதழ் 97

யாழில் இருந்து இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவான வீராங்கனை

தெற்காசிய நாடுகளிற்கிடையிலான பதினெட்டு வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணிக்காக யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரியை சேர்ந்த மாணவி லூட்சி றெஜினஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறான தெற்காசியமட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி வடமாகாண பாடசாலை மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டமை இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில் இலங்கையில் இடம்பெற்ற போட்டியில் இந்தியாவுடன் மோதிய இலங்கை அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவியின் பயிற்சியாளராக தனுஷ் ராஜசோபனா அவர்கள் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலககிண்ண கால்பந்து – 2026 வடஅமெரிக்காவில் உலகத் திருவிழா

Editor

Gen-Z தவிர்க்க முடியாத எதிர்காலமாகும்! நிராகரிப்புக்களை தவிர்த்து வழிப்படுத்துவதே அவசியம்!

Editor

இதழ் 97

Editor

Leave a Comment