தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக, வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான குழு விளையாட்டுப் போட்டிகளில், 22 இடங்களைப் பெற்று, 124.6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று வடமாகாண சம்பியனாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மீண்டும் சாதனை படைத்துள்ளது.
மேலும், இவ்வாண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 22 அணிகள் தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெற்று, வடமாகாணத்தில் அதிக அணிகளை தேசிய மட்டத்திற்குத் தெரிவுசெய்த பாடசாலையாகவும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி திகழ்கிறது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்கையில், உயர் மீத்திறன்மிக்க மாணவர்களின் கூடாரம் என்ற பார்வையில், க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பெறுபேறுகளில் நீண்ட சாதனைப் பட்டியலைக் கொண்டதாகும். சமகாலத்தில் கல்விக்கு சமாந்தரமாக இணைபாடவிதான செயற்பாடுகளிலும் மற்றும் விளையாட்டு போட்டிகளிலும் யாழ். இந்து மாணவர்களின் சாதனை பதிவுகள் இடம்பெறுவது பாராட்டத்தக்கதாகும்.
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி செயற்பாட்டாளர்கள் அனைவோருக்கும் மனநிறைவான வாழ்த்துகளை பகிர்கிறோம்.

