வேதாளத்தை தன் முதுகில் சுமந்து கொண்டு அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்த விக்ரமாதித்தனிடம், அந்த வேதாளம் தான் கூறும் கதையின் இறுதியில் அக்கதைக்கான சரியான பதிலை சொல்லுமாறு கூறி, கதை சொல்ல ஆரம்பித்தது. ஒரு சமயம் “கிஷநகர்” என்ற நாட்டை “ராஜேந்திரா” என்ற மன்னன் ஆண்டு வந்தான் வீரத்திலும், கொடை பண்புகளிலும் சிறந்தவனான அம்மன்னனின் ஆட்சியில் மக்கள் அனைவரும் இன்பமாக வாழ்ந்தனர். அம்மன்னனுக்கும், அவனது மனைவிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு “சோனா” என்று பெயரிட்டு வளர்த்தனர். தனக்கு ஆண் வாரிசு இல்லாததால் தன் மகள் சோனாவிற்கு ஆண்கள் பயிலும் போர்கலையை நன்கு பயிற்றுவித்து, அவளை சிறந்த வீரமங்கையாக்கினான் மன்னன். சோனாவும் பல போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் தன்னுடன் போட்டியிட்ட பல ஆண் வீரர்களையே தோற்கடித்து புகழ் பெற்ற இளவரசியாக விளங்கினாள். சோனாவிற்கு திருமண வயது நெருங்கியதும் அவளுக்கு திருமணம் செய்விக்க ஏற்ற இளவரசனை தேடிக்கொண்டிருந்தார் ராஜேந்திரா. இதையறிந்த சோனா, “தான் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இளவரசன் அறிவாற்றலில் சிறந்தவனாக இருந்தால் மட்டுமே, தான் அந்த இளவரசனை திருமணம் செய்து கொள்வேன். நாட்டை நல்லாட்சி புரிய வீரம், அறிவு இரண்டும் அவசியம்” என்று நிபந்தனை விதித்தாள். இதைக் கேட்ட ராஜேந்திரா, தன் மந்திரிகளுடன் ஆலோசித்து சோனா கூறியபடி அறிஞர்கள் சூழ போட்டிகளை ஏற்பாடு செய்து, அதில் அனைத்து நாட்டு இளவரசர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள எல்லா நாட்டு இளவரசர்களும் வந்திருந்தனர். அழைக்கப்பட்ட அறிஞர்கள் பல நுட்பமான வினாக்களை வினவி இளவரசனை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது இறுதியாக மீதமாக இருந்த இருவருக்கும் ஒரு புதிர் போடப்பட்டது.
1 | |||
2 | |||
3 | |||
4 |
1, 2, 3, மற்றும் 4 இலக்கங்களின் நான்கு தொகுதிகளை பதினாறு பெட்டிகளில் வைக்க வேண்டும், இதனால் ஒரே எண் எந்த கிடைமட்ட அல்லது செங்குத்து வரிசையிலும் தோன்ற கூடாது. இது மூலைவிட்டங்களுக்கும் பொருந்தும். கட்டத்தில் இறுதி பன்னிரண்டு எண்களை வைத்து சிக்கலை தீர்க்க வேண்டும். முதலில் இச் சிக்கலைத் தீர்ப்பவரே இளவரசனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கதை கூறி முடித்தது வேதாளம்.
துமி அன்பர்களே!
வழமை போல் நீங்களும் விக்ரமாதித்தனுக்கு உதவிடுங்கள்.