இதழ் 19

மருத்துவம் போற்றுதும்

கர்ப்பகாலத்தில் வாய் ஆரோக்கியம்

கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பற்களை, தாயாகப் போகிறவர்கள் கருவறையில் இருக்கும் சிசுவின் நலம் கருதி , வாய் மற்றும் பற்சுகாதாரத்தினை காப்பது மிகவும் அவசியம்.

Image result for pragnant and teeth

கர்ப்பகாலத்தில் சிறந்த வாய் ஆரோக்கியத்தை பேணுவது ஏன் முக்கியமானது?

-கர்ப்ப காலத்தில் பல் நோய்களினால் உருவாகும் சிக்கல்களை குறைக்க
சிறுவரிடையே பற்சூத்தை அபாயத்தை குறைக்க (தீய பக்றீரியாக்கள் தாயிடம் இருந்து பிறந்த சிசுவிற்குதொற்றும் அபாயத்தை குறைப்பதற்கு)

-பற்சூத்தையுள்ள தாய்மாருக்கு பிறப்பு நிறை குறைந்த பிள்ளைகள் பிறப்பது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

-கர்ப்பிணிகளுக்கு ஈறு நோய் வரலாம். அதனால் பற்களை சுற்றி இருக்கும் ஈறு வலுவிழந்து காணப்படுகிறது. அதனால் ஈறுகளில் வீக்கம், வாய் துர்நாற்றம், பற்களில் கூச்சம் ஏற்படலாம்.

-பற்சூத்தை உள்ள கர்ப்பவதிக்கு பற்சிதைவு அபாயமும்  முன்கூட்டிய பிரசவங்களும் (Premature Delivery) இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.

கர்ப்பிணிகள் வாய் நோய்களுக்கு அதிக வாய்ப்புள்ளவர்களாக இருப்பது ஏன்?

-உடலில் ஓமோன்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக முரசு நோயினால் பாதிக்கபட வாய்ப்புண்டு. (குருதி வெளியேறுகின்ற வீங்கிய முரசு)

-கர்ப்பகாலத்தில் அடிக்கடி சத்தி எடுப்பதால் இரைப்பையிலுள்ள அமிலம் சத்தியுடன் வெளியேறி பற்களை அடிக்கடி தாக்குவதாலும் கர்ப்ப காலத்தில் உணவு விருப்புக்கள் மாறுவதன் காரணமாக இனிப்பு, புளிப்பு உணவுகளை அதிகம் எடுப்பதாலும் பல் மிளிரி அரிப்புக்குள்ளாகும்.(வாயினுள் அமிலச் சூழல் ஏற்படுத்துவதன் மூலம்)

-அடிக்கடி உணவு உண்பதாலும் ஓங்காளம் அல்லது சத்தியால் பல்துலக்குவதில் ஏற்படும் சிரமத்தாலும் பற் சுகாதாரம் பாதிக்கப்பட்டு பற்களுக்கிடையே உணவு தேக்கம் அடைவதாலும் பல் நோய்கள் துரிதமாக உருவாகும்.

Image result for pragnant and teeth

பற்கள் பாதிக்கப்படும் அபாயத்தை எவ்வாறு குறைத்துக்கொள்வது?

-நிறையுணவை உண்ணுங்கள். அமில இனிப்பு உணவுகளை உண்பதைக் கட்டுப்படுத்துங்கள்.

-முடியுமான வேளைகளில் உணவை உண்ட பின் சிறிதளவாவது நீரை அருந்துவதுடன் வாந்தியின் பின் வாயைக் கழுவுங்கள். எந்த உணவு உட்கொண்டாலும் உடனுக்குடன் வாயை கொப்பளிக்க வேண்டும். வாய் கொப்பளிக்க முடியாத சமயத்தில், குடிக்கும் நீரையே கொப்பளித்தாற் போல் செய்து உட்கொள்ள வேண்டும்.

-தினமும் இரு தடவைகளாவது (காலை, இரவு நித்திரைக்கு முன்) புளோரைட் உள்ள பற்பசையால் பற்தூரிகை கொண்டு முறையாக பல் துலக்குங்கள்.

-பல் மருத்துவரிடம் கட்டாயம் பரிசோதனை செய்து அவர் விதந்துரைத்த சிகிச்சை முறைகளையும் ஆலோசனைகளையும் கடைப்பிடியுங்கள்.

-பற்சூத்தையிருப்பதால் அப்பல்லைப் பிடுங்க வேண்டும் என பல்வைத்தியர் சிபாரிசு செய்தால் அவற்றை பிடுங்கிக் கொள்ள வேண்டும். பலரும் நம்புவது போல கர்ப்பகாலத்தில் சூத்தைப்பற்களைப் பிடுங்குவதால் எந்த ஆபத்தும் ஏற்படாது.  சூத்தைப் பல்லை பிடுங்காது வைத்திருப்பதே ஆபத்தானது.

-பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொண்டால் தேவையான சத்துகள் உடலில் சேர்வதுடன் வாய் மற்றும் பல் சுகாதாரம் மேம்படும்.

பல்லில் சிறு தொல்லையானாலும் உடனுக்குடன் பல் மருத்துவரை அணுகுவதால் வலியற்ற பராமரிப்பிற்கு வழி வகுக்கும்.
ஆகையால் கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமான வாய் மற்றும் பல் சுகாதாரத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும்.

‘பல்லு போனால் சொல்லு போச்சு’

Related posts

ரசிக்கும் சீமானே

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 16

Thumi2021

அட்டைப்படம் சொல்லும் கதை

Thumi2021

Leave a Comment