இரண்டு வருடம் பார்சிலோனாவில் முகாமையாளராக இருந்த tito ஒரு ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை மட்டும் வென்றார். ஆனால் பார்சிலோனா அணியின் கட்டமைப்பை நன்றாக உறுதிப்படுத்தினர். மெஸ்ஸியுடன் மிக நல்ல உறவை பேணிய அவர் 2 வருட முடிவில் புற்று நோய் காரணமாக உயிர் இழக்கும் தருவாயில் மெஸ்ஸி இடம் பார்சிலோனாவை விட்டு செல்லக் கூடாது என உறுதி மொழியை வாங்கினார். இன்று வரை எவ்வளவு பிரச்சனைகள் வந்தும் கொடுத்த வாக்கிற்காக அணியை விட்டு செல்லாமல் இருக்குறார் மெஸ்ஸி.
அவர் பின் பல முகாமையாளர்கள் வந்தனர். அவற்றில் ஒருவரான luis enrique கீழ் மெஸ்ஸி மீண்டும் பிரகாசிக்கதொடங்குகிறார். புதிய நட்சத்திரங்களாக உருவெடுத்துக் கொண்டிருந்த neymar ,luis suaraz போன்ற சிறந்த வீரர்களுடன் இணைந்து மெஸ்ஸி ஆடினார். இவர்களுடன் சக வீரர்கள் என்பதையும் தாண்டிய நல்ல நட்பு இன்று வரை தொடர்கிறது.

ஏற்கனவே xavi, ineasta போன்ற சிறந்த வீரர்களுடன் காணப்பட்ட அணி புதிய வீர்களின் இணைப்பினால் மேலும் வலுவாகி treadle இனை வென்றது.16 சீசன் இல் பார்சிலோனாவுக்கு விளையாடிய மெஸ்ஸி இதுவரை 641 கோல்களையும் 282 assist பெற்ற மெஸ்ஸி 34 கோப்பைகளையும் வென்று உள்ளார். அத்துடன் அவர் முன் இருந்த பல்வேறுபட்ட கழக சாதனைகளையும் முறியடித்து உள்ளார். தற்போது இருக்கும் சூழ்நிலையில் மெஸ்ஸிக்கும் பார்சிலோனா நிர்வாகத்திற்கும் நல்ல உறவு காணப்படவில்லை. அத்துடன் அணியின் செயற்படும் பிடிக்காமல் அணியை விட்டு வெளியேறப்போகுறேன் என்று அறிவிப்பை 2020 ஆண்டில் வெளியிட்டார். அவரது contract படி அவர் கடந்த பருவ கால முடிவில் இலவசமாக எந்த அணியிலும் இணையலாம் என்றாலும் தற்போது காணப்படட அசாதாரண சூழ்நிலை காரணமாக இது நடைபெறவில்லை. அவர் நினைத்து இருந்தால் நீதிமன்றம் சென்று இதை சாத்தியப்படுத்தி இருக்கலாம். ஆனால் தன்னை வளர்த்த அணியை அவமானப்படுத்த கூடாது என்று இன்று வரை அணியில் ஆடிக்கொண்டு இருக்குறார். ‘சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ள காரணத்தினால் நான் பார்சிலோனாவிலேயே இருக்க முடிவு செய்துள்ளேன். நான் சந்தோஷமாக இல்லாததால் அணியை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால் சிறு வயதிலிருந்தே நான் விரும்பிய அணியை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல விரும்பாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். அடுத்த சீசன் வரை பார்சிலோனாவிலேயே விளையாடுவேன்’ என மெஸ்ஸி சொல்லியுள்ளார்

மெஸ்ஸியின் சர்வதேச அணி பயணம் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்…