VPN ( Virtual Private Network) அதாவது தமிழில் மெய்நிகர் தனியார் இணையம் என்றழைக்கப்படும்.இந்த பெயரை இலங்கை நாட்டில் உள்ள எந்த குடிமகனும் அவ்வளவு இலகுவில் மறந்து விடமுடியாது.இதற்கான பெருமை எம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கே சேரும் என்பதில் எவ்வித ஜயப்பாடும் இல்லை . அதாவது .திருடன் வீட்டுக்குள்ள நுழையும்போது எப்படி கள்ள களவா தன்னுடைய அடையாளத்தை மறைத்துக்கொண்டு நுழைகின்றானோ அதைபாபோல இது இணையத்தை மறைமுகமாக அல்லது சொந்த அடையாளத்தை மறைத்து பயன்படுத்துவதற்காக இயங்கிவரும் தனியார் சேவை. திருடுவது எவ்வாறு சட்ட விரோதமானதோ அதனைப்போன்று VPN பாவித்தலும் சட்ட விரோதமானது தான்.
அப்ப ஏன் VPN பாவிக்கனும் என்டா அதற்கான பதிலும் வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும்.ஏனெனில் ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலின் போது சமூகவலைத்தளங்கள் முடங்கியதனால் எம்மில் எத்தனையோ பேர் VPN வழியாக அமெரிக்கா தொடங்கி அத்திப்பட்டி வரை தஞ்சமடைந்தனர்.அந்தளவிற்கு இன்றைய சமூகம் சமூகவலைத்தளங்களிற்கு அடிமையாகி உள்ளது .
இதைத் தவிர்த்து எல்லா வலைத்தளங்களும் எல்லா நாட்டிலும் இயங்குவதற்கு நிச்சயம் அனுமதி கிடைக்காது எனவே ஒரு நாட்டினால் தடை செய்யப்பட்ட வலைத்தளங்களை பயன்படுத்தத்தவதற்காகவும் VPN இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக திகழ்கின்றது.
தமிழ்பாறைகள் அதான் நம்ம Tamilrockers தொடங்கி பல வலைத்தளங்கள் வரை பாதுகாப்பு கருதி இவ்வாறு பல நாடுகளில் தடை செய்யப்பட்டுத்தான் காணப்படுகின்றன. குறிப்பாக நீகுழாய் அதான் நம்ம YouTube இல் கூட குறித்த நாட்டிற்கு என்று பல கானொளிகள் மட்டுப்படுத்தப்பட்டவாறுத்தான் வெளியிடப்படுகின்றன.
இவ்வளவு ஏன் இன்று தமிழ் சமூகத்திலா Trending உள்ள Cook With Comali நிகழ்ச்சியைக்கூட இலங்கையிலிருந்து நாம் நேரடியாக Hotstarஇல் பார்த்து ரசிக்க முடியாது.இதே நேரம் நாம் ஒரு தரவை அன்டார்டிகாவில் இருந்தும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் தேடும்போது நமக்கு கிடைக்கின்ற பேறுகள் கூட ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டுத்தான் காணப்படும்.
ஏன்டா VPN பாவிச்சு FB பாத்தது குற்றமாடா எற்று நீங்கள் யோசிக்கலாம் ஆனால் VPN வெறுமனே சமூகவலைத்தளங்களுடன் முடிந்து விடுகின்ற விஷயமில்லை அதில் தான் வில்லங்கமே இருக்கிறது.தோட்டா தயாரிப்பதில் தொடங்கி அணுகுண்டு தயாரிப்பு வரை எத்தனயோ DarkWeb Access , Illegal Website Access, Banned Movie Website Access , Porn Movie Website Access மற்றும் உடல் உறுப்புக்களை பரிமாற்றம் செய்யும் சிவப்பு சந்தை என சமூகத்திற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதில் கைவரிசையைக் காட்டுவதற்கு பல விற்பன்னர்களுக்கு இந்த VPNஐ தான் பிரம்மாஸ்திரமாக திகழ்கின்றது.
அது சரி ஏன் மறுபக்கத்தில் திடீரென்று தொழிநுட்பத்தை பற்றி அலசுகின்றோம் என்று வாசகர்கள் யோசிக்கலாம் ஆனால் காரண காரியமின்றி எதுவும் நடப்பதில்லை காஷ்மோரா. ஆம்!
2018 ல் உலகில் அதிகளவு VPN தரவிறக்கிய மற்றும் பயன்படுத்திய நாடு என்ற பெருமை நமக்கே சாரும். ஆனால் இதில் பெருமைப்படும் அதேவேளை சற்று பயப்பட வேண்டிய தேவையும் உள்ளது என்பது வெல்லிடைமலை.