நண்பி – அந்த வசந்தி எங்க?
ஜோதிகா – தெரியல. தேடனும். இவ்வளவு தான் வாழ்க்கைனு வளைஞ்சு வளைஞ்சு நான் உடைஞ்சே போய்ட்டன் சூசன்.
நண்பி – இது வசந்தியா பேசுறது? இந்த College y உன் பெயர சொல்லாத students ஏ அப்ப இல்ல. உன் caliber ல பாதி கூட இல்லாத நான் உன்னை பார்த்து உன்னை மாதிரியே படிக்கனும் பழகனும்னு உன்னையே Inspiration ஆ எடுத்துக்கிட்டு இப்ப ஒரு Multi National Cooperation ல chief Marketing Officer ஆ இருக்கன்.
என்ன ஆச்சு உனக்கு?
ஜோதிகா – என்னால
(நண்பி தடுத்து நிறுத்தி)
நண்பி – ம்.. குடும்பம் குழந்தைனு வாழ்ந்துட்டனு அந்த Usual ஆன clisious மட்டும் எனக்கு சொல்லாத. சாப்பாடு கூட எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்திட்டு பாதி பசில தூங்குற அம்மாவ எல்லாம் முதியோர் இல்லத்தில கொண்டு போய் விடுற Selfish ஆன சமூகத்தில வாழ்ந்திட்டு இருக்குறம்.
ஒரு பொன்னு எது செய்யலாம்னு 5 இருக்கு. எது செய்யக்கூடாதுனு 50 இருக்கு. எல்லாருக்கும் பிடிச்ச அந்த 5ஐ நாம் செய்யலாம். ஆனா நமக்கு பிடிச்ச அந்த 50ஐ நாம செய்யக்கூடாது. அவ்வளவு தான். Simple! ஒரு பொன்னோட Life.
நாம எல்லாத்துக்கும் பதிலா இருக்குறதுனால அவங்க கேள்வியா இருக்காங்க. நாம கேள்வியா இருந்தம்னா யாருக்கிட்டயும் பதில் இல்லை. நீ யாருக்கும் தெரியாத வசந்தியா இருந்தா கூட பரவாயில்லை. ஆனா எல்லாரும் கேலி பன்ற வசந்தியா எப்படி ஆனாய்? வாழனும் என்கிறத விட சுயமரியாதையோட வாழனும் என்கிறது முக்கியமில்லையா?
ஜோதிகா – ஆ.. (நண்பியை நோக்கி திரும்புகிறாள்.)
நண்பி – Daily Office க்கு போய் Attendance Register ல கையெழுத்து போடுற வசந்தியா மட்டும் வாழ்நாள் பூரா இருந்திடாதே. எல்லாருக்குமாக வாழ்றது ஒரு பொன்னுக்கு இயல்பான குணம் தான். ஆனால் உனக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கு. உனக்குனு ஒரு Identity வேணும். Only then world become change for you. நீ உன்னை தொலைச்சாய்னா உனக்கு முன்னாடி உன் கனவும் தொலைஞ்சு போகும். நீ அதில்லை. Your dream is your Signature. உன்னால முடியும். நிச்சயம் முடியும்.
(College முடிந்து செல்லும் பெண்கள் திசையை நோக்கி நண்பி கையை காட்டி)
நீயே பாரு. இந்த girls ஓட சுதந்திரமான உடையிலும், சுதந்திரமான சிரிப்பிலையும் கூட வசந்தி இருக்காள். அந்த வசந்திய நான் பார்க்கனும். இனிமே அவளை மட்டும் தான் பார்க்கனும்.
ஜோதிகா – ம்… (தலையசைக்கிறார்.)