இதழ் 21

திரைத்தமிழ் – காப்பான்

(பின்ணனி பாடல்)
அனிதா – Hello Viewers நூன் உங்க அனிதா.& Welcome to Ashock Modern விவசாயம்.
மழை இல்லை. தண்ணி இல்லைனு டெல்டா District பூரா வறண்டு கிடக்க. இந்த இடம் மட்டும் பச்சை பசேல்னு அவ்வளவு செழிப்பா இருக்கு. இந்த Magicக்கு காரணம், Mr.கதிரவன் என்கிற Organic விவசாயி.
குப்பையிலிருந்து மண்புழுவிடம் சோளான் Energy, வீட்டன் Energy, சொட்டு நீர் பாசனம், பஞ்ச கவ்யா, மீன் அமிலம், ஜீவாமிர்தம்னு scienceஜயும் பாரம்பரியத்தையும் கலந்துகட்டி பின்னிட்டிருக்கிறார் நம்ம கதிரவன்.
Good Morning கதிரவன். நீங்க பன்னிக்கிட்டிருக்கிற organic farming பற்றி சொல்லுங்க?

சூர்யா – இல்லைங்க இது National Farming. Organic Farmingஜ விட இன்னும் ஒசத்தி. இயற்கையாகவே விவசாயம் பன்றது. இந்த முறைல முதல் யார் விவசாயம் பன்னிணவங்கனு பார்த்தீங்கள்னா? முசலமு ப(f)க்காக்கோ.

அனிதா – ஆ… Votca தெரியும். அது என்ன பக்காக்கோ.

சூர்யா – ஆ.. ஆ.. முசலமு ப(f)க்காக்கோ ங்க. ஜப்பான் காரர். தத்துவ விவசாயி. இந்த முறைல இயற்கை வளத்தை சுரண்டாமல் மனிச வளத்தை தான் நம்பி இருக்கம். எங்க காட்டில இந்த பற்றிலைசரு, பெசிசைட்டரு மாதிரி எந்த Chemical வாசமும் பட விடுறதே இல்லை.

அனிதா – ஓ.. super கதிர்.
(சூர்யா சோளம் பொத்தி பிடுங்குகிறார்) ஆ… Baby Corn எனக்கு ரொம்ப பிடிக்கும்.

சூர்யா – ரொம்ப பச்சையாவே தின்னலாம். ஒரு வாய் கடிச்சு பாருங்க.

அனிதா – (சோளத்தை கடித்த கொண்டு) ம்;…. Pure Words Unbelievable இப்ப என் நாக்கில அறுசுவையும் நடனமாடுது.
அட இது என்ன sir. கட்டண கழிப்பிடமா?

சூர்யா – சரியா சொன்னீங்க.

அனிதா – இப்படியும் கல்லா கட்டுறீங்க போல. Side Businessஆ?

சூர்யா – அது கட்டண கக்குசு தான். ஆனா கட்டணத்த நாம தான் தாரோம். இங்க வந்து கக்கா போனா 10.00 ரூபா.

அனிதா – wow…. very very very Different Approach.

சூர்யா – இருங்க இருங்க. இதில சுயநலமும் இருக்கு.

அனிதா – சுயநலமா?

சூர்யா – இங்கிட்டு வாங்க சொல்றன்.

(கட்டண கழிப்பிடத்தில் மலம் கழிக்க வருபர்களுக்கு இடையிலான சூழல் உரையாடல்)

அனிதா – அச்சோ…. கதிரவன் நம்ம Interview First முடிப்பம்.

சூர்யா – ஆ.. வந்திட்டன் வந்திட்டன்.

அனிதா – ஆமா… அந்த ரெண்டு toilet உம் ஏன் மூடி இருக்கு. பாதி பேர அங்க அனுப்பி இருக்கலாம் எல்லோ?

சூர்யா – அது நிரம்பி ஆறு மாசம் ஆச்சுது எல்ல. அதுதான் பத்திரமா பூட்டு போட்டு சேமிச்சு வைச்சிருக்கிறோம்.

அனிதா – ம்… இத போhய் எதுக்கு சேமிச்சு வைச்சிருக்கிறீங்க.

சூர்யா – ஆ.. அப்படி கேளுங்க.
ஆறு மாசம் தளும்ப தளும்ப சேமிச்சு வைச்சதெல்லாம் ஊறி பக்ரீறியாவால மக்கி நல்ல உரமாகிச்சு.
இந்தாங்க. (அனிதா தள்ளி பின் செல்கிறார்.)
ஐயையோ. இதுல smile எதுவும் வராதுங்க. இது இப்ப நைட்ரோயன்றிச்சு Pure Black Gold. கறுப்பு தங்கம்.

அனிதா – What?
சூர்யா – இத அப்படியே நீங்க நிலத்தில உரமா போட்டீங்கனு வையுங்களன், அப்படியே சொய் எரிசின், விதை விருத்தி, வேர்ப்பரம்பல்னு பயிருடைய விளைச்சல் ஆமோகமா இருக்கும். அட நீங்க தான் அப்போத சோளம் தின்னும் போது Super Taste, Nice Aroma. உங்க நாக்கில கூட அறுசுவை அப்படியே நடனமாடிச்சுனு சொன்னீங்களே.
(அனிதா வாந்தி எடுக்கிறார்.)
ஏய் இதுல வாந்தி எடுத்திடாதே.

Camera Man – அக்கா break விட்டிடலாமா?

அனிதா – இவன் ஒருத்தன். Interview எல்லாம் வேணாம். வாட போகலாம்.

சூர்யா – ஏய் இங்க இரு நானா உன்ன வரச் சொன்னன்.

அனிதா – நீ ஏதோ Organic Farming பன்னுறாய்னு பார்த்தா. ஏதேதோ அசிங்கம் பிடிச்ச Farming எல்லாம் பன்னிட்டு ஊரை ஏமாத்திட்டு இருக்காய்.

சூர்யா – ஏய் நில்லு. ஏய் Camera on பன்னு.
விவசாயம் ஒரு தொழில் இல்லை. ஊரை காப்பாத்துற பொலிஸ் மாதிரி. நாட்டை காப்பாத்துற Military மாதிரி. மனிசனை காப்பத்துற விவசாயமும் ஒரு Service தான்.


இந்த மண்ணுக்கு அற்புதமான குணம் இருக்குங்க. தன் மேல விழுற எந்த அசிங்கத்தையும் உபயோகமானதா மாற்றி கொடுத்திடும். நாம இந்த மண்ணுக்கு பன்னிட்டு இருக்குற கொடுமை தான் அசிங்கம். காட்டை அழிச்சிட்டம் மழை இல்லாம போய்ட்டு. மணல் எல்லாத்தையும் அள்ளிட்டம் மழை பெஞ்சாலும் சேர்த்து வைக்க முடியாம போய்ச்சு. ஏற்கனவே அழிஞ்சிட்டு இருக்கு விவசாயம். இதுக்குல கண்ட கண்ட Chemical உரம், பூச்சி மருந்து எல்லாம் போட்டு மண்ணை மலடாக்கிட்டம். மிஞ்சி இருக்கிறது என்ன? நம்ம மலம் தான். அது தான் இந்த மண்ணை மீட்டெடுக்கிறதுக்காக ஏற்கனவே சீனா காரனும், ஜப்பான் காரனும் ஏற்கனவே இந்த விவசாயத்தில இறங்கிட்டாங்க. நம்ம விவசாய நிலத்துல ஆழ்துளை கிணறும், சுரங்கமும் தோண்டி பாழடிச்சால், வேற வழியே இல்லை. இந்த மாதிரி விவசாயத்த ஏற்றுக்கிட்டேத தான் ஆஹனும்.


இது தான் உங்க Future.

Kaappaan (2019)

Related posts

ஆசிரியர் பதிவு – கஞ்சனாக இருங்கள்!

Thumi2021

கம்பனில் அறம்

Thumi2021

ஈழச் சூழலியல் – 08

Thumi2021

Leave a Comment