இதழ் 21

வழுக்கியாறு – 15

சிறு தானியப்பயிர்களான குரக்கன் ; Eleusine coracana (finger millet), சாமை Setaria italica (foxtail millet) ஆகியவை பொதுவாக நெல் அறுவடையின் பின்னர் கோடைகாலப் பயிராக தாழ் நிலப்பகுதிகளில் செய்கை பண்ணப்படுகின்றது. அத்துடன் எள்ளு Sesamum indicum (gingelly), உழுந்து Vigna mungo (black gram), பயறு Vigna radiata (green gram) என்பனவும் கோடைகாலப் பயிர்களாக செய்கை பண்ணப்படுகின்றது. பொதுவாக சிறுதானியங்கள் மக்களின் உணவுத் தேவைக்கும் கால்நடைகளின் உணவுக்காகவும் பயன்படுகின்றது. மேலதிக உற்பத்தியானது உள்;ர்ச் சந்தைகளில் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகள் வருமானத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

மேட்டு நில விவசாயிகள் பொதுவாக வெங்காயம் Allium cepa (onion), வெண்டி Abelmoschus esculentus (okra), மிளகாய் Capsicum annuum (chili pepper), கத்தரி Solanum melongena (brinjal or eggplant), பூசனி Cucurbita maxima (pumpkin), போன்றவற்றை மாரி, கோடை காலங்களில் போகப்பயிர்களாக செய்கை பண்ணுகின்றனர் ஆனால் தாழ்நில விவசாயிகள் மாரிகாலங்களில் வெள்ளம் காரணமாக கோடைகாலங்களில் மட்டுமே மரக்கறிச் செய்கையில் பெருமளவில் ஈடுபடுகின்றனர். அனைத்து பயிர்செய் நிலங்களும் கோடைகாலங்களில் கோவா Brassica oleracea var. capitata (cabbage), பீற்றூட் Beta vulgaris (beet), தக்காளி Solanum lycopersicum (tomato), வெங்காயம் Allium cepa (onion), வெண்டி Abelmoschus esculentus (okra), மிளகாய் Capsicum annuum (chili pepper), கத்தரி Solanum melongena (brinjal or eggplant), பூசனி Cucurbita maxima (pumpkin), புடோல் Trichosanthes cucumerina (snack gourd), பாகல் Momordica charantia (bitter gourd), பயிற்றை Vigna unguiculata ssp. sesquipedalis (long been), மரவள்ளி Manihot esculenta (cassava),   கீரைவகை Spinacia oleracea (spinach), உருளைக்கிழங்கு Solanum tuberosum (potato), கரட் ; Daucus carotasubsp. sativus (carrot), மற்றும் Nicotiana tabacum (tobacco) போன்ற பயிர்களால் நிறைந்து காணப்படும்.

மரக்கறிப் பயிர்ச்செய்கையானது மூல வருவாய் மார்க்கமாக உள்ளது. ஏனெனில் வழுக்கியாற்று வடிநில விவசாயிகளின் நிலவுடமை பரப்பளவானது குறைவு என்பதனால் அவர்களின் நெற்செய்கை சுய தேவையின் பொருட்டே பெரும்பாலும் செய்கை பண்ணப்படுவதுடன் சுயதேவையையே பூர்த்தி செய்யக் கூடியதாக உள்ளது.

விவசாயிகள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்காக உள்;ர் சந்தைகளான மருதனார்மடம் மற்றும் சுண்ணாகம் பொதுச்சந்தைகளை நாடுவதுடன் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் முதலிய வெளியூர் சந்தைகளுடனும் தொடர்புகளை பேணுகின்றனர்.


மிதமிஞ்சிய மரக்கறி உற்பத்தியின் போதும் பூச்சிப்பீடை தாக்கத்திற்கு உள்ளான மரக்கறிகளும் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுகின்றது. விவசாயிகள் சணல் Crotalaria juncea (sunhemp) எனும் பயிரை விவசாய நிலங்களில் விதைத்து பசளைக்காக அதனை உழுது மண்ணுடன் கலந்து விடுகின்றனர் இது பயிர்நிலங்களுக்கு சேதனப்பசளையாக பயன்படுகின்றது.

சணல் Crotalaria juncea (sunhemp) உழுந்து Vigna mungo (black gram), பயறு Vigna radiata (green gram)என்பன அவரைக் குடும்பப் பயிர்களாகும் இவை நிலத்தில் நைதரசனை பதிக்கும் ஆற்றல் பெற்றுள்ளமையினால் இவை விவசாயிகளால் நிலங்களை வளமாக்கும் ஊடகங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தாழ்நிலங்களுக்கும் உயர்நிலங்களுக்கும் இடைப்பட்ட பகுதி வருடார்ந்த வெள்ளப்பெருக்கிற்கு அதிகம் உள்ளாவதுடன் அப்பகுதி பனை மற்றும் தென்னை மரங்களை அதிகளவில் கொண்டு காணப்படுகின்றது இம்மரங்கள் காற்றுத்தடையாகவும் மண்ணரிப்பை தடுக்கும் மூலங்களாகவும் அமைவதால் பயிர் செய்நிலங்கள் ஓரளவுக்கு இயற்கை அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்கப்படுகின்றது.

(ஆறு ஓடும்)

Related posts

இயற்கை மனிதனுக்காக மட்டுந்தானா?

Thumi2021

ஈர நிலங்களின் மீது ஈரம் வேண்டும் – 03

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 21

Thumi2021

Leave a Comment