இதழ் 21

வேர் சிகிச்சை [Root Canal Filling]

  1. வேர் சிகிச்சை என்றால் என்ன?

உங்கள் பல்லானது சொத்தை அடைந்துவிடின் அல்லது உடைந்து போய்விடின் அந்த பல்லினை சில சமயங்களில் நிரப்பி வைத்திருக்க முடியும். பற்சொத்தையானது அல்லது பல்லின் உடைவானது அப்பல்லின் பன்மச்சைக்குச் சென்றுவிட்டால் சாதாரணமாக நிரப்ப முடியாது.
இருப்பினும் அப்பற்களை வேர் முறை சிகிச்சை செய்வதன் மூலம் வலியின்றி அடைத்து வைத்திருக்க முடியும்.
வேர் சிகிச்சையில் பல்லின் உள்ளே உள்ள பன்மச்சையினை [pulp] அகற்றி சுத்தம் செய்து அடைக்கப்படும்.

பற்களின் பாதுகாக்கும் கவசங்களாக எனாமல் [Enamel] , டென்டின் [Dentine] உள்ளது. எனாமலைத் தாண்டி பற்சொத்தை ஆழமாக டென்டினை அடையும் போது பல் கூச்சம் ஆரம்பிக்கும். என்னும் ஆழமாக பன்மச்சைக்கு அருகினில் செல்லும் பொழுது தண்ணீர் குடிப்பது அல்லது உணவு உண்பது போன்ற தூண்டுதலின் போது பல்வலி ஏற்றப்படும். இவ்வலியானது தூண்டுதலை அகற்றிய பின்பு நின்று விடும். மேலும் இவ்வலியானது ஒரு சில நிமிடங்களே இருக்கும். எனினும் எப்பல்லில் இருந்து வலி வருகின்றது என்பது நோயாளியினால் கண்டுபிடிப்பது கடினம். இந்த நிலைமையில் பல்லினை சாதாரணமாக பற்சொத்தையினை சுத்தம் செய்து அடைத்து/நிரப்பி வைத்திருக்க முடியும். எனினும் டெண்டினையும் தாண்டி ஆழமாக சென்று பன்மச்சைக்கு கிருமி சென்று விட்டால் சாதாரணமாக நிரப்ப முடியாது. அப்பல்லினால் வரும் பல் வலியினை  சரி செய்ய பல்லினை சிறு துளை செய்து பல்லின் உட்பகுதியில் சுத்தம் செய்து நிரப்புதலே வேர் சிகிச்சை எனப்படும்.

  1. பல் வேர் சிகிச்சையால் என்ன பலன்?

வேர் சிகிச்சை செய்வதன் மூலம் பல்லினை முழுமையாக அகற்றாமல் பல் வலியினை சரி செய்யும் வாய்ப்பு உள்ளது.
வலி உண்டான பல்லினை அகற்றிய பின்பு அகற்றிய பல்லினால் உண்டாகும் இடைவெளியை நிரப்ப செயற்கை பல் பொருத்த வேண்டிய தேவைப்பாடு இல்லாமல் போகின்றது.

  1. வேர் சிகிச்சை சொத்தைப்பற்கள் அனைத்திற்கும் செய்ய வேண்டுமா?

இல்லை, பற்சொத்தையானது அல்லது உடைவானது பன்மச்சைக்குச் சென்றால் மாத்திரமே வேர்ச்சிகிச்சை செய்ய வேண்டும். இருப்பினும் வேறு சில காரணங்களிற்காகவும் வேர் சிகிச்சை செய்யப்படும்.

  1. வேர் சிகிச்சை செய்த பல்லில் மீண்டும் பற்சொத்தை ஏற்படுமா?

வேர்சிகிச்சையின் மூலம் பல் வலியினை நீக்கி பல்லினை அகற்ற வேண்டிய நிலைமையினை மட்டுமே தவிர்க்க முடியும். எனினும் அப்பற்களிற்க்கு பற்சொத்தை ஏற்றப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. வேர்சிகிச்சை செய்த பல்லில் நரம்புகள் இல்லாத காரணத்தினால் வலி இல்லாமல் பற்சொத்தை வரக்கூடும். இருப்பினும் சிறந்த வாய் ஆரோக்கியத்தினை பேணுவதன் மூலம் root filling செய்த பல்லினை நீண்ட காலம் வைத்திருக்க முடியும்.

  1. Root fillong செய்த பல்லினால் கடினமாக கடிக்க முடியுமா?

இல்லை, நரம்புகள் இல்லாத காரணத்தினால் நீங்கள் அழுத்தி கடிக்கும் பொழுது உங்களால் கொடுக்கப்படும் விசையை உங்களால் உணர முடியாது ஆதலால் நீங்கள் அழுத்தி கடிக்கும் பொழுது அதிக விசை தாக்கப்பட்டு பல் உடைய கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது.
இரண்டாவதாக பல்லின் இயற்கையான கட்டமைப்பு இல்லாத காரணத்தினாலும் ஈரலிப்பு தன்மை இல்லாத காரணத்தினாலும் உடைய கூடும்.

Related posts

வழுக்கியாறு – 15

Thumi2021

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

Thumi2021

பெண்களும் உளவியல் முரண்பாடுகளும்

Thumi2021

Leave a Comment