இதழ் 22

பார்வைகள் பலவிதம்

படிப்புத்தான் சோறு போடும்…
படியுங்கள் என்றார்கள் பள்ளியில்!
படிப்பா சோறு போடும்???
சமையுங்கள் என்றார்கள் வீட்டில்!
பிரச்சினை என்ன?
சோறா? படிப்பா? வறுமையா?
விரைவாக கற்க வேண்டும்!
படித்துக் கொண்டே சமைக்க…
விரைவாக கற்க வேண்டும்!

மொழியருவி

நேற்றைய மருமகள் தானே
நாளைய மாமியார்…
அப்படியிருந்தும் அடுப்பங்கரை
பெண்களுக்கானதாகவே இருப்பது ஏன்?

இனியவன்

ரீச்சர்…
வீட்டுப்பாடங்களை
வசதியானவர்களுக்கு
மட்டும் கொடுங்கள்.
அவர்கள் வீட்டில்
அவர்களுக்காக மட்டும்
எங்கள் அம்மா
சமைக்கிறார்.

கங்கா

சமைக்கக் கற்றுக் கொடுக்கிறது மூளை.
படிக்கக் கற்றுக் கொடுக்கிறது வயிறு.
சமையல் முடிய காத்துக் கொண்டிருக்கின்றன..
வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும்.


சந்திரனார்

Related posts

ஈழச் சூழலியல் – 09

Thumi2021

மார்பகப் புற்றுநோய்

Thumi2021

‘அயோத்தி’ – ஒரு மானுட நலனோம்பு மையம்

Thumi2021

Leave a Comment