இதழ் 22

அந்திமழை நிகழ்விது!!!

தூக்கி சுமக்கும் மலைக்குள்
சிறு கிளியென எட்டிப்பார்
ஏழுமலை தாண்டுதல்
நினைத்தாலே இனிக்கும்

எதிரே குறுக்கே பின்
யாராவது கடக்கலாம்
எவர் முகமும் எவர் அகமும்
உன்பொருட்டு
பௌதீக மாற்றம் எனக்கு

உன் மழை வலுத்த இரவுக்கு
ஆயிரம் மெழுகுவர்த்திகள்
அணையா சுடரென
என் ஆதிக்காடு
பட் பட்டென முளைக்கட்டும்

உன் குடைக்கும்
என் மழைக்குமிடையே
நனைந்து நனையாமலும்
சில கதவுகள் சில தாழ்பாள்கள்

ஆசை அணிந்து விடு
தாகம் தணிய விடு
நடைபயில துவங்கட்டும்
உன் முழுக்க என் அரூபம்

நீ சிலையானாய்
கண்ட நானோ பெருஞ்சிற்பி
யாளியின் துருத்திய கனவென்று
யாராவது சொல்லக்கூடும்
அந்திமழை நிகழ்விது….!

Related posts

எனதுகளின் இற(ழ)ப்புகள்

Thumi2021

வழுக்கியாறு – 16

Thumi2021

ஈரநிலங்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

Thumi2021

Leave a Comment