இதழ் 22

இறையாண்மை – 03

மக்களாட்சி அரசுகளின் தொடக்கம்

அமெரிக்க விடுதலைப் போரின் போது வெளியிடப்பட்ட சுதந்திர அறிக்கையில் (1776),
‘எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர். பிறரால் மாற்ற இயலாத உரிமைகளை இறைவன் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். இந்த உரிமைகளைப் பாதுகாக்கவே மக்களிடையே அரசாங்கங்கள் நிறுவப்பட்டன. அரசாங்கங்களின் நியாயமான அதிகாரங்கள் ‘ஆளப்படுவோரின் இணக்கம்” என்று அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இந்நோக்கங்களை அழிக்க எம்முறையான அரசாங்கமும் முற்படுமானால், அதனை மாற்றி அல்லது அழித்துப் புதிய அரசாங்கத்தை நிறுவ மக்களுக்கு உரிமையுண்டு”.
என்று கூறப்பட்டுள்ளது.

பிரெஞ்சுப் புரட்சியின் போது 1789 இல் கூடிய தேசிய அவை (யேவழையெட யுளளநஅடிடல), பிரான்சின் அரசியலமைப்பைத் தீட்டுமுன்
மனிதன், குடிமகன் இவர்களின் உரிமைகளின் அறிக்கையை 1789-இல் வரைந்தது. ‘மனிதர்கள் சுதந்திரத்துடன் பிறந்து சம உரிமையுடன் வாழ்கிறார்கள். மனிதனின் வரையறுக்க இயலாத நடைமுறை உரிமைகளைப் பாதுகாப்பது ஒவ்வோர் அரசியல் சட்டத்திற்குமுரிய நோக்கமாகும். இறையாண்மை நாட்டு மக்களிடமே இருக்கிறது. அரசியலமைப்பை மாற்றக் கூடிய வரையறுக்க இயலாத உரிமை நாட்டு மக்களிடம் இருக்கிறது.”

அமெரிக்க விடுதலைப் பிரகடனமும், பிரெஞ்சுப் புரட்சியாளர்களின் மனிதனின் – குடிமகனின் உரிமைப் பிரகடனமும் இனி அரசு முறையின் அடித்தளம் மக்களாட்சிதான் என முன்னறிவித்து விட்டன.

சில தேசங்களின் காலனியாதிக்கப் பேராசை முதல் உலகப் போருக்குக் (1914-1918) காரணமானது. ஆனால், ஐரோப்பாவில் எஞ்சியுள்ள தேசங்கள் தங்கள் விடுதலைக்காக முட்டி மோதிக் கொண்டமையும் முதல் உலகப் போருக்கு முக்கிய காரணமாகும்.

முதல் உலகப் போரின் இறுதியில் அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன், நசுக்கப்பட்ட தேசிய இனங்கள் தேசங்களாக உரிமை பெற்று அரசியல் சமூகங்களாக நிலைபெற ஆதரவளித்தார். அதன்படி எந்த ஒரு தேசமும் இனி இன்னொரு தேசத்தின் கீழ் இருக்கத் தேவையில்லை என்ற கருத்து ஏற்கப்பட்டது.
பல தேசங்களைத் தம் ஆட்சி அதிகாரத்துக்குள் அடக்கிக் கொண்டிருந்த பேரரசுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி, ரஷ்யா ஆகியவை பல பகுதிகளை இழந்தன.
மத்திய ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கு ஐரோப்பாவிலும் புதிய தேசிய இன அரசுகள் உருவாயின. பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, போலந்து, செக்கோஸ்லேவியா, யுகோஸ்லாவியா (ஆறு தேசங்களை உள்ளடக்கியது) ஆகியவை உருவாக்கப்பட்டன.

புதிய தேசங்களின் அரசியலமைப்புகள் மூன்று முக்கியப் பண்புகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டன. அவை,

  1. ஆளுரிமை (Personal Liberty)
  2. மக்கள் இறையாண்மை (Popular sovereignty)
  3. நாட்டுணர்ச்சி அல்லது தேசிய இன உணர்ச்சி (Nationalism).

முதல் உலகப் போருக்குப் பிறகு உருவான அரசு முறை ‘தேசிய மக்களாட்சி முறை” ஆகும். அதாவது ‘தேசிய இனங்களின் இறையாண்மையுள்ள ஆட்சியும் அவற்றில் ஜனநாயக முறைமையும்” என்பதே புதிய போக்கு ஆகும்.

இப்போக்கு தான் உலகம் முழுவதும் பரவியது. சிதைக்கப்பட்ட ஜனநாயகம் என்ற ஐரோப்பாவின் முறை தெற்காசிய நாடுகளிற்க்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், அவை உருமாற்றம் பெற்று அழிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

இந்தியாவில் தமிழர் இறையாண்மை

இந்தியாவில் எழுந்த ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டம் 1947 இல் முடிவடைந்தது. னுநஉழடழnளையவழைn என்னும் ‘அன்னிய காலனிய ஆதிக்க வெளியேற்றம்” சாதிக்கப்பட்டது.

ஆனால், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வலுவந்தமாக இணைக்கப்பட்ட பல தேசங்கள், இன்று ‘உள்நாட்டுக் காலனிகளாக” தொடர்ந்து சுரண்டப்படுகின்றன.

மேலை நாடுகளைப் போலன்றி, தமிழ்த் தேசிய இனம் ஒரு நீண்ட கால இருப்பையும் வரலாற்றையும் கொண்டது. தமிழகம் 1801 இல் தான் இந்தியாவுடன் இணைக்கபட்டு தனது இறையாண்மையை ஆங்கிலேயரிடம் இழந்தது. தேசிய இன இறையாண்மை தமிழினத்துக்கு மீண்டும் கிடைக்கவே இல்லை.

ஈழத் தமிழ்த் தேசிய இனமும் இறையாண்மையும்

ஈழத் தமிழ்த் தேசிய இனம், சிங்களப் பெருந்தேசிய இனம் ஆகியவை இலங்கையிலே தனித்தனியே ஆனால் ஓர் அரசின் கீழ் இருந்து வருகின்றன.

இலங்கையில் சீர்மிகு பண்பாட்டுடன் வாழ்ந்து வந்த தமிழர்கள் 17 ஆம் நூற்றாண்டில் தனி அரசு இழந்தனர். கி.பி. 1619 இல் தமிழ் ஈழ மன்னன் சங்கிலியினை போரில் தோற்கடித்து தமிழர் இறையாண்மை போர்த்துகீசர்களால் கைக்கொள்ளப்பட்டது.

1833 இல் தமிழர் தாயகம் சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டு ஆங்கிலேயரால் ஒரு நாடாக உருவாக்கப்பட்டது. 1948-இல் இலங்கை விடுதலை பெற்ற போது ஈழத்தமிழர் இறையாண்மை அவர்களுக்குத் திருப்பி அளிக்கப்படவில்லை.
1956 இல் தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை உருவாக்கி இலங்கையில் ஒரு கூட்டாட்சியை உருவாக்கிக் கோரிக்கை வைத்தார். தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து ‘தனிநாடு” கோரிக்கையை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டு காங்கேசன்துறையில் வெற்றி பெற்றார்.

1976 இல் தனி ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் இனப்பிரச்சினையின் காரணங்களில் இறையாண்மை சார்ந்த விடயம் மிகவும் முக்கியமானதாகும்.

இந்த பத்தி தினமணியில் வெளிவந்த இறையாண்மை என்றால் என்ன எனும் கட்டுரையினை தழுவி மாற்றங்களுடன் இலங்கைக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.

சாரல் தூறும்………………………….!!!!!

Related posts

கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் இந்தியாவுடன் போட்டியிடலாமா? (கிரேக் சப்பல் சொல்வதென்ன?) – 02

Thumi2021

ஈழச் சூழலியல் – 09

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 19

Thumi2021

Leave a Comment