இதழ்-23

காற்றுக்கு பேர் என்ன?

நகம் அற்று இருப்பது
நர்த்தகி நயனம்
நீள் பிறை காண
நினைவுக்குள் அலை பேசும்
காற்றுக்கு பேர் என்ன
கனவுக்குள் வேர் எதுவோ
சொல் அற்று சூழ் நிகழும்
காட்டோடு நிற்க ஓட பறக்க
யாருக்கும் பட்டாம் பூச்சி ஆசை தான்
பாழ் கிணற்றுக்குள் பேரோசை
சுழன்று அகண்டு இருள் தேடும்
நிலவுக்குள் தலை நீட்டும் என் நிறை
பெரும்பாறை பூத்து விட்ட
பெரு வெடிப்பு நகரும்
உராயும் நீர்க்குமிழிக்குள்
சொல்லணாத் துயரம்
முடிவற்ற பத்திக்குள் தான்
மூச்சடக்கி நடக்கிறேன்
கண்டவர் புன்னகை செய்யுங்கள்
காணாதோர்க்கு சமர்ப்பணம்….!

Related posts

ஆசிரியர் பதிவு – பிளாஸ்டிக் எனும் கொடூர அரக்கன்

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 19

Thumi2021

சித்திராங்கதா – 23

Thumi2021

Leave a Comment