(காட்சி ஆரம்பம்: பாதுகாவலரை அந்நிறுவன ஊழியர் ஒருவர் ஏசி தள்ளி விழுத்துகின்றார். இச்சம்பவத்தை இன்னொரு பக்கமாக நின்று தனது காதலியுடன் உரையாடிக்கொண்டிருந்த விஷால் பார்த்து ஊழியரை நோக்கி செல்கின்றார்.)
விஷால் : டேய்.. வாடா..
ஊழியர் : சேர்.. யார் சேர் நீங்க? ஆ… என் Status என்னனு தெரியுமா?
சொல்ல சொல்ல கேட்காம கையெடுங்க சேர். நான் யாருனு தெரியுமா?
விஷால் : வாடா (ஊழியர் கன்னத்தில் அறைகிறார்.)
ஊழியர் : என்ன சேர் அடிச்சிட்டீங்க.
விஷால் : அந்த பேப்பர எடடா.
ஊழியர் : சேர்….
விஷால் : எடுடானா… (மீளவும் ஊழியர் கன்னத்தில் அறைகிறார்.)
(ஊழியர் பேப்பரை எடுக்கிறார்)
ஊழியர் : சேர்.
விஷால் : உள்ள இருக்கிற எல்லா முக்கியமான Headings-உம் படிடா. (ஊழியர் பக்கத்தை புரட்டுகறார். விஷhல் தடித்த குரலில்) படிடா
ஊழியர் : ஓகஸ்ட்15 கொலை சம்பவத்தில் எந்தவொரு துப்பும் கிடைக்காததால் பொலிஸ் திணறல்.
விஷால் : அடுத்து.
ஊழியர் : இந்தியர்களால் சுவிஸ் பாங்கில் பதுக்கப்பட்ட 900கோடி ரூபா கறுப்பு பணத்தை மீட்போம் என பாரத பிரதமர் உறுதி.
விஷால் : நடந்திச்சா?
ஊழியர் : நடக்கல சேர்.
விஷால் : அடுத்து.
ஊழியர் : வங்கி கடனை அரசு இரத்து செய்யாததால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை. தொடரும் அவலம்.
விஷால் : நடக்குதெல்லோ?
ஊழியர் : சேர். தொடர்ந்து நடக்குது சேர்.
விஷால் : ம்…..
ஊழியர் : புதிய சாலைத்திட்டத்துக்காக பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு. சொந்த நிலங்களிலிருந்து மக்கள் விரட்டியடிப்பு.
விஷால் : நீ ஆம்பிளையா இருந்தா… உனக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தா… இப்ப அந்த வயசானவருக்கு காட்டினியே அதே கோபத்தையும் வீரத்தையும் இதில இருக்கிற எதாச்சொரு விசயத்தில காட்ட முடியுமாடா? துணிச்சல் இருக்கா? (மீளவும் ஊழியர் கன்னத்தில் அறைகிறார்.)
ஊழியர் : சேர்.
விஷால் : டேய். நீ அதை தட்டி கூட கேட்க வேண்டாம்டா. ஏதிர்த்து சத்தமா எல்லாருக்கும் கேட்கிற மாதிரி உன்னால ஒரு கேள்வி கேட்க முடியுமாடா? சொல்றா? முடியாது. ஏனுனா திருப்பி அடிப்பாங்க எல்லோ.
நாம எங்க வீரத்த காட்டுவம்?
செருப்பு தைக்கிறவன் ஒரு ஐஞ்சு ரூபா சேர்த்து கேட்பான். அங்க தான் நாம வீரத்த காட்டுவம். Septic-tank Clean பண்றவன் ஒரு 50 ரூபா கூட கேட்பான். அங்க தான் நமக்கு கோபம் வரும். இல்லை?
50 வயசு தாண்டிய பெரியவர் 24 மணிநேரமும் ATM-ல Security-யா இருக்காரு அலரோட கஸ்ரம் என்னனு யோசிக்க வேணாம். முடிஞ்ச வரைக்கும் அவர காயப்படுத்தாம ஒதுங்கி போகலாம்.
நாங்க எங்க ஏறி மிதிக்கனுமோ? அங்க இறங்கிடுறம். நாங்க எங்க இரக்கப்படனுமோ? அங்க தான் ஏறி மிதிப்போம்.
ATM-க்குள்ள Helmet போட்டு போறதே தவறுனு தெரியாத …..
ஊழியர் : சேர். ஆசர். மன்னிச்சிருங்க சேர்..