இதழ்-23

நவீன வேதாள புதிர்கள் 02 – மடங்குகளை மடக்கு

துமி அன்பர்களே! உங்கள் உதவியுடன் வேதாளத்திற்கு விக்ரமாதித்தன் சரியான பதிலை அளிக்க வேதாளம் கட்டவிழ்த்துச் சென்று மீண்டும் முருங்கைமரம் ஏறியது. ஞானசீல முனிவருக்கு அளித்த வாக்கை காப்பாற்றத் துடிக்கும் விக்ரமதித்தனோ மீண்டும் சுடுகாட்டில் இருக்கும் முருங்கை மரத்தடிக்கு விரைந்து சென்று தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தைப் பிடித்துக் கட்டி சுமந்துவருகிறான்.

வேதாளாம் விக்ரமாதித்தனிடம்
‘என்னை மீண்டும் மீண்டும் சுமந்து களைத்துப் போயிருப்பாய். இந்த மர நிழலில் சற்று ஓய்வெடுத்து விட்டு பயணத்தைத் தொடருவோம்.”
என்றது.

இருவரும் ஓய்வெடுக்க மர நிழலில் அமர்ந்தார்கள். தந்திரம் மிக்க வேதாளமோ தரையில் ஏதோ சதுரம் போல் கிறுக்கியபடி விக்ரமாதிதத்தனே, எழுந்திரு உமக்கொரு வேலை தருகிறேன் என்று ஆரம்பித்தது.

1-9 வரையான இலக்கங்களை இவ்வாறாக மூன்று நிரைகளில் நீர் ஒழுங்குபடுத்த வேண்டும் எவ்வாறெனில், முதலாவது நிரையில் உள்ள மூவிலக்கத் தொடரின் இருமடங்காக இரண்டாவது நிரையில் உள்ள மூவிலக்கத் தொடரும், மூன்று மடங்காக மூன்றாவது நிரையில் உள்ள மூவிலக்கத் தொடரும் அமைதல் வேண்டும். அத்துடன் ஒரு இலக்கம் ஒருமுறை மட்டுமே இடம்பெற வேண்டும்.

நீர் இதை தீர்க்கும் வரை நான் சற்று ஓய்வெடுக்கிறேன் எனக் கூறிய வேதாளம் ஓய்வெடுக்கத் தொடங்கியது. அன்பர்களே, மீண்டும் உங்களது உதவி விக்ரமாதித்தனுக்குத் தேவைப்படுகிறது. சரியான பதிலை துமி மன்னிதழிற்கு அனுப்பி விக்ரமாதித்தனுக்கு உதவுங்கள்.

புதிர் 01 – நான்கு மூன்றுகள் – விடைகள்

Related posts

வழுக்கியாறு – 17

Thumi2021

எனக்கு கொரோனாவா?

Thumi2021

ஐபிஎல் திருவிழா

Thumi2021

Leave a Comment