இதழ்-24

இரணங்களின் இறுக்கத்தில் விறகுக்கட்டை

கோரங்களுக்கு உவமையாய்
என் சந்ததியையே மாற்றிவிட்டேனே!
ஏன் என்னை இப்படியொரு நிலையில்
இயற்கை வலிந்து இட்டுவிட்டது!
அழக்கூட தழல் என்னை
அனுமதிக்கவில்லை!
பிணங்கள் மீது போர்த்திவிட்டு
முழுமையாக என்னைக் கொழுத்திவிட்டீர்களே!
மழையேனும் இரக்கம் காட்டி
என்னை அணைத்துவிடக்கூடதா?
துக்கம் விசாரிக்கக்கூட
நிலவும் சூரியனும் வராமல்,
என் முகம்பார்க்க எத்தனிக்காமல்,
புறம்காட்டியே செல்கின்றனவே!
பாவியாகாவே முடிந்துவிடுகிறேனே!
பலநாளாய் என்முன்னோர்!
இப்போது நான்!
நாளை என் பின்னோர்!
இயற்கை வளம் நான் என்று இட்டுக் கட்டிய
பொய்யையல்லவா நம்பிவிட்டேன்!
போதும் என்னை விட்டுவிடுங்கள்!
மனம் இறுக்கமாக இருக்கிறது!!

( டெல்லியில், கொரானாவால் இறந்த சடலங்களை எரிப்பதற்கு விறகுகள் போதவில்லை)

Related posts

சிங்ககிரித்தலைவன் – 23

Thumi2021

ஈழச்சூழலியல் – 11

Thumi2021

ஐபிஎல் திருவிழா

Thumi2021

1 comment

Leave a Comment