இதழ்-24

நவீன வேதாள புதிர்கள் 03 – காணி நிலம் தந்தோம்

துமி வாசகர்களே! உங்கள் உதவியுடன் மடங்கு சிக்கலைத் தீர்த்த விக்ரமாதித்தன் பதில் கேட்டு வேதாளம் மறுபடியும் கட்டவிழ்த்துக் கொண்டு அரசன் தோள் விட்டுக் கிழம்பி முருங்கை மரத்தில் தொற்றிக் கொண்டது.

சற்றும் சளைக்காது மீண்டும் மீண்டும் முருங்கை மரமேறி தன்னை கட்டிச் சுமந்து வரும் விக்ரமாதித்தனை வேதாளமோ விடுவதாக இல்லை சாக்கு போக்கு சொல்லி மீண்டும் விக்ரமாதித்தனிடம் கதை சொல்லத் தொடங்கியது.

“மகாராஐனே! அறிவு, ஞானம், விவேகம், பாண்டித்தியம் இவைகளை உடைய பெரியோர் தங்கள் பொழுதை சாஸ்திர விசாரணையிலும் கவிதை ஆராட்சியிலும் கழிப்பார்கள் முட்டாள்களும் மந்தபுத்தி உள்ளவர்களும் தங்கள் பொழுதை தூங்குவதிலும் கேளிக்கைகளிலும் கழிப்பார்கள். ஆகவே இந்த வழி  நடைக் காலத்தையும் பிரயோசனப்படக்கூடிய வழியில் கழித்தல் நல்லமல்லவா? ஒரு புதிர் போடுகிறேன் கேழுங்கள்” என்றது வேதாளம்.

ஐம்பத்தாறு தேச அரசர்களையும் வெற்றி கொண்டு அனைவருக்கும் அதிபதியாகி அரசாழும் நீர் தான தர்மத்தில் சிறந்தவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். நான் உமக்கு “L” வடிவமான 16 ஏக்கர் முப்போகமும் விளையக் கூடிய வளம் மிக்க காணித் துண்டொன்றை வழங்குகின்றேன் அதை நீர் 16 காணித்துண்டுகளாக பிரித்துஉமது இராஜ்ஜியத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களிற்கு வழங்குங்கள். ஆனால் அதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன.

ஒவ்வொரு காணித்துண்டும் ஒரே அளவாக இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு துண்டும் அசல் 16 ஏக்கர் நிலத்தின் அதே வடிவமாக இருக்க வேண்டும் என்று கூறி தனது கதையை நிறுத்தி அமைதி கொண்டது வேதாளம். விக்ரமாதித்தன் 16 ஏழைக் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் சிந்திக்கத் தொடங்கினான்.

துமி அன்பர்களே! நீங்களும் சிந்தியுங்கள் ஏழைக் குடும்பங்களுக்கு உதவ நினைக்கும் விக்ரமாதித்தனுக்கு துமி மின்னிழிற்கு ஊடாக நீங்களும் உதவிடுங்கள் உங்கள் பதிலை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

நவீன வேதாள புதிர்கள் 02 – மடங்குகளை மடக்கு – விடைகள்

Related posts

ஏகாதிபத்தியம் – 01

Thumi2021

வழுக்கியாறு – 18

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 23

Thumi2021

Leave a Comment