இதழ்-24

ஏகாதிபத்தியம் – 01

ஏகாதிபத்தியம் –  Imperialism

காலனி ஆதிக்கம் அல்லது ஏகாதிபத்தியம் என்பது ஒரு பேரரசு ஒன்றை உருவாக்கும் அல்லது அதனைப் பேணும் நோக்குடன் ஒரு வெளி நாட்டின்மீது தொடர்ச்சியான கட்டுப்பாட்டையோ மேலாதிக்கத்தையோ செலுத்தும் கொள்கையாகும்.

இலத்தின் வார்த்தையான இம்பீரியம் (Imperium) என்பதும் பேரரசைக் குறிக்கிறது. இதன் பொருள் ஆதிக்கம். பேரரசின் மன்னரைப் பேரரசர் அல்லது பேரரசி என்று அழைப்பார்கள்.

அரசியல் ரீதியாக பேரரசு என்பது பல மாகாணங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இதில் ஒன்று அல்லது பல்வேறுபட்ட இனக்குழும மக்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

உலகில் பல பேரரசுகள் தோன்றின. குறிப்பாக ரோமப் பேரரசு, ஆங்கிலேயப் பேரரசு மிகவும் பெயர் பெற்று விளங்கின.

இந்த நடவடிக்கை ஆட்சிப்பகுதிகளைக் வலுக்கட்டாயமாக கைப்பற்றுவதன் மூலமோ, குடியேற்றங்களை ஏற்படுத்துவது மூலமோ, மறைமுகமான வழிமுறைகள் மூலம் அரசியல் அல்லது பொருளாதாரத்தின்மீது செல்வாக்கு அல்லது கட்டுப்பாட்டை வைத்திருப்பதன் மூலமோ இது சாத்தியப்படுகின்றது.

இச்சொல், அடக்கப்பட்ட நாடு தன்னைப் பேரரசின் ஒரு பகுதியாகக் கருதுகிறதோ இல்லையோ என்பதைக் கருத்தில் கொள்ளாமல்இ ஒரு நாடு தொலைவிலுள்ள நாடுகளின்மீது கொண்டிருக்கும் மேலாதிக்கக் கொள்கைகளை விவரிக்கவே பயன்படுகின்றது.

‘ஏகாதிபத்தியம்’ ஐரோப்பிய நாடுகள், பிற கண்டங்களில் குடியேற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கிய காலத்தையே குறிக்கின்றது.

ஏகாதிபத்தியம் என்பதுஇ தொடக்கத்தில்இ 1500களின் பிற்பகுதியில், பிரிட்டீஷ், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா நோக்கிய விரிவாக்கம் தொடர்பான கொள்கைகளைக் குறிக்கவே பயன்பட்டது.

ஆங்கிலேயப் பொருளாதாரவாதி J.A.ஹாப்சன் (John A. Hobson) அவர்கள் 1902ல் ‘ஏகாதிபத்தியம்’ எனும் நூலை வெளியிட்டபின் இச்சொல் பிரபலமானது.

முதலாளித்துவம், புதிய சந்தை வாய்ப்புக்களையும், வளங்களையும் தேடுவதற்காகப் பேரரசு வாதத்தைத் தூண்டிவிட்டதாகவும் இது முதலாளித்துவத்தின் இறுதியானதும் உயர்மட்ட நிலையும் ஆகுமென லெனின் கூறினார்.

தேசிய அரசுகளின் எல்லைகளுக்கு வெளியிலான முதலாளித்துவத்தின் அவசியம் கருதிய விரிவாக்கம் பற்றிய கொள்கையை ஜெர்மனைச் சார்ந்த ரோசா லக்சம்பர்க்கும் (சுழளய டுரஒநஅடிரசப) தத்துவவியலாளரான ஹன்னா அரெண்ட்டும் (ர்யnயொ யுசநனெவ) ஏற்றுக்கொண்டனர்.

கி.பி.1492 ஆம் ஆண்டு முதல் கி.பி.1763 ஆம் ஆண்டு வரையில் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றிய கொள்கையானது ‘காலனி ஆதிக்கம்’ எனப்படுகிறது.

ஜப்பான், கொரியா, இந்தியா, இலங்கை, சீனா, அசிரியா, பண்டைய எகிப்து, பண்டைய கிரேக்கம், ரோமப் பேரரசு, பைசாந்தியப் பேரரசு, பாரசீகப் பேரரசு, ஒட்டோமான் பேரரசு, பிரிட்டிஷ் பேரரசு மற்றும் பல பேரரசுகளின் வரலாற்றில் ஏகாதிபத்தியம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.

வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பன்னிரெண்டுக்கும் அதிகமான முஸ்லிம் பேரரசுகளும்இ துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனித்துவ சகாப்தத்தை முன்னெடுத்துச் செல்லும் பன்னிரெண்டுக்கும் அதிகமான பேரரசுகள் இடம்பெற்றன.

உதாரணமாக எத்தியோப்பியன் பேரரசு, ஓயோ பேரரசு, அசாந்த் யூனியன், லுபா சாம்ராஜ்ஜியம், லுண்டா சாம்ராஜ்ஜியம், மற்றும் முடாப்பிய பேரரசு ஆகியனவாகும்.

பண்டைய கொலம்பிய யுகத்தில் அமெரிக்கர்கள் ஆஸ்டெக் பேரரசு மற்றும் இன்க் பேரரசு போன்ற பெரிய பேரரசுகளைக் கொண்டிருந்தனர்.

ஒரு நாட்டில் வெளிநாட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை கட்டாயமாக சுமத்தப்பட்ட அல்லது பொதுவாக ஒரு ஒன்றிப்பு அரசாங்கம் இல்லாத பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்காக ‘ஏகாதிபத்தியம்’ என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படும் என்றாலும் சில நேரங்களில் வலுவான அல்லது மறைமுக அரசியல் அல்லது பொருளாதார செல்வாக்கை விரிவாக்க பலவீனமான நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் செயல்முறையை குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

கி.பி.1763 ஆம் ஆண்டு முதல் கி.பி.1870 ஆம் ஆண்டு வரையில் ஐரோப்பிய நாடுகள் பல போர்களிலும்இ நாட்டின் ஒருங்கிணைப்புகளிலும் ஈடுபட்டன.

1870 இல் இத்தாலிஇ ஜெர்மனி ஒருங்கிணைப்பட்ட பிறகு அந்நாடுகள் ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்தன.

கி.பி.1870 ஆம் ஆண்டு முதல் கி.பி.1945 ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய நாடுகளால் பின்பற்றப்பட்ட ஏகாதிபத்தியக் கொள்கை புதிய ஏகாதிபத்தியம் எனப்பட்டது.

இந்த பத்தி தினமணியில் வெளிவந்த ஏகாதிபத்தியம் எனும் கட்டுரையினை தழுவி மாற்றங்களுடன் இலங்கைக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.

சாரல் தூறும்………………………….!!!!!

Related posts

அம்மா என்று யார் அழைப்பது?

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 23

Thumi2021

மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும் – 01

Thumi2021

Leave a Comment