நெஞ்சக் குழிக்குள் தேங்கிநிற்கும்
ஞாபகச் கதியைக் கடும் மழை
கழுவிச் செல்லும்
சகதி கரைந்து விலகிப் போனபின்
நெஞ்சுக் குழியெங்கும்
மழையின் ஈரம்
ஒட்டி நிற்கும் ஈரத்தைத் துரத்த
எட்டிப் பார்ப்பான்
சுடும் சூரியன்
மழையை எச்சரித்து,
சிறுகுடை பிடிக்கும் காளானாய்,
நெஞ்சுக் குழியெங்கும்
பூத்துக் கிடக்கும்.
மீண்டும் ஞாபகங்கள்.