கலாசார ஏகாதிபத்தியம் (Cultural Imperialism)
கலாசார ஏகாதிபத்தியம் என்பது ஒரு நாட்டின் பண்பாட்டு கலாசாரமானது அடுத்த நாட்டு கலாசாரத்தில் வலுக்கட்டாயமாக ஆதிக்கம் செலுத்துவதையே பண்பாட்டு ஏகாதிபத்தியம் என்றழைக்கப்படுகிறது.
மென்மையான அதிகார வடிவமாக கருதப்படும் இது ஒரு நாட்டின் நகர்புறங்களில் தார்மீக, கலாசார மற்றும் சமூகத்தின் உலக கண்ணோட்டத்தை மாற்றுகிறது. இத்தகைய செயல்கள் ஏதோவொரு விதத்தில், ஏகாதிபத்தியத்தின் கருத்தாக்கத்தை அர்த்தமற்றதாக கருதுவது போன்றதாகும்.

வெளிநாட்டு இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இளந்தலைமுறையிரிடையே பண்பாட்டு ரீதியிலான உள்நாட்டு கொள்கைகளுக்கு மாறான பழக்கவழக்கங்களில் மாறுதல்களை ஏற்படுத்துவதும் இதற்குச் சான்றாகக் கூறலாம்.
உதாரணமாக, பனிப்போர் காலத்தில் ஓபரா டல்லாஸ் சோப்பின் ஆடம்பரமான அமெரிக்க வாழ்க்கைப் பாணியின் சித்திரங்கள் ருமேனியர்களின் எதிர்பார்ப்புகளை மாற்றின.மிக சமீபத்திய உதாரணம் வட கொரிய மக்களிடைளே மிகவும் செல்வாக்கு ஏற்படுத்திய கடத்தப்பட்ட தென்கொரிய நாடகத் தொடரினைப் குறிப்பிடலாம்.

ஒரு காலத்தில் கிரேக்கப் பண்பாட்டினர் தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் உடற்பயிற்சிக் கூடங்களையும், அரங்குகளையும், பொதுக் குளியல் மண்டபங்களையும் கட்டி அந்நாட்டினரைத் தமது பண்பாட்டினுள் அமிழ்ந்து போகச் செய்தனர். பொதுக் கிரேக்க மொழியின் பரவலும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
ராணுவ ஏகாதிபத்தியம் (Military Imperialism)
நாடுகள் தங்களின் படைகளை அனுப்பி மற்ற நாடுகளில் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதை ராணுவ ஏகாதிபத்தியம் என்கிறோம். எடுத்துக் காட்டாக, அமெரிக்கா ஈராக்கின் மீது படையெடுத்து அங்கு தன் நாட்டிற்குச் சாதகமான ஒரு அரசை ஏற்படுத்தியது.

அரசியல் ஏகாதிபத்தியம் (Political Imperialism)
நாடுகளின் தலைவர்களைத் தன் ஆளுமையின் கீழ் கொண்டு வந்து, அவர்கள் மூலம் மறைமுகமாக ஆட்சியை ஏற்படுத்துவது அரசியல் ஏகாதிபத்தியம் எனபடும்.
பொருளாதார ஏகாதிபத்தியம் (Ecomnic Imperialism)
ஒரு நாடு மற்றொரு நாட்டின் பொருளாதார அதிகாரத்தை தன்வசப்படுத்தி, அந்நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்வதே பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர்.
ஏகாதிபத்தியம் ஏற்படக் காரணங்கள் எவை என்று நோக்கினால்
- தொழிற்புரட்சி (Industrial Revolution)
ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சி காரணமாக பொருள்களின் உற்பத்தி அதிகரித்தது. எனவே உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களும், உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு சந்தையும் தேவைப்பட்டன. உள்நாட்டு சந்தைகளில் தங்கள் பொருட்களை விற்கமுடியவில்லை. ஆசியா ஆபிரிக்க குடியேற்ற நாடுகள் நல்ல சந்தைகளாகவும், மூலப் பொருட்கள் அளிக்கும் இடங்களாகவும் செயல்பட்டன.
- தேசிய பாதுகாப்பு (National Security)
தனது நாட்டின் செல்வ வளம் அயல் நாட்டில் முதலீடு செய்யப்படும்போது, அதன், பாதுகாப்பிற்காக அந்நாடுகளைத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர விரும்பின.
- தேசியமயமாக்கல் (Nationalisation)
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதிதீவிர நாட்டுப்பற்றுக் கொள்கை ஐரோப்பாவில் ஏற்பட்டது. பல நாடுகள் தங்களின் இனப்பெருமை, பண்பாட்டுப் பெருமை, மொழிப்பற்று ஆகியவற்றைப் பெரிதும் வளர்த்துக் கொண்டன. தம் நாட்டின் கௌரவத்தை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு அதிக குடியேற்ற நாடுகளை அடைய விரும்பின. மேலும் ஏகதிபத்தியம் அக்கால நாகரிகமாக கருதப்பட்டது.

ஐரோப்பிய வெள்ளை இன மக்களை உயர்வாகவும், கறுப்பின ஆபிரிக்க மக்களுக்கு நாகரிகம் கற்றுத் தருவது தங்களின் பெரும் சுமை என்று கருதியதும் ஏகாதிபத்தியம் ஏற்பட வழிவகை செய்தது.
- சமநிலை ஆதிக்கம் (Balance of Power)
சமநிலை ஆதிக்கம் பெற ஐரோப்பிய நாடுகள், தங்களுக்குப் போட்டியாக உள்ள நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுக்கு இணையாக குடியேற்ற நாடுகளை ஏற்படுத்த முற்பட்டன.
- புதிய வழித்தடங்கள் கண்டுபிடிப்பு (Discovery of New Routes)
ஆபிரிக்க, ஆசியக்கண்டங்களை அடையக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வழித்தடங்கள் ஏகாதிபத்தியக் கொள்கையை ஊக்குவித்தன. புதிய கடல் வழித்தடங்கள் வணிகர்களுக்கும், இராணுவத்திற்கும் குடியேற்ற நாடுகளில் உள்ள பெரும் செல்வத்தைச் சுரண்ட பேருதவியாக இருந்தன.

- மக்கள் தொகைப் பெருக்கம் (Growth of Population)
மக்கள் தொகைப் பெருக்கம், அதன் விளைவாக ஏற்பட்ட வேலையின்மை ஐரோப்பியர்களை குடியேற்றங்களுக்காகவும் மற்றும் வேலை வாய்ப்பிற்காகவும் வேறு நாடுகளைத் தேடி செல்லத் தூண்டியது.
- சட்ட ஒழுங்கின்மை (State of Anarchy)
முதலாம் உலகப் போருக்கு முன் உலக நாடுகளுக்கிடையே அமைதியை வளர்க்கவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சட்டங்கள் இயற்றக் கூடிய சர்வதேச அமைப்பு இல்லை. இந்த சட்ட ஒழுங்கற்ற நிலை குடியேற்றங்களைக் கைப்பற்றுவதற்கு வழிவகுத்தது.
இந்த பத்தி தினமணியில் வெளிவந்த ஏகாதிபத்தியம் எனும் கட்டுரையினை தழுவி மாற்றங்களுடன் இலங்கைக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.
சாரல் தூறும்………………………….!!!!!