இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருப்பவர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மிக்கி ஆர்தர் (Mickey Arthur). இதற்கு முன் தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, மற்றும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இலங்கை கிரிக்கெட் தொடர்பாக, ஆர்தர் கிரிக்இன்போ (Cricinfo) க்கு வழங்கிய செவ்வி யில் இருந்து இந்த பதிவு.
2020 மேற்கிந்தியத் தீவுகள் தொடரின் போது தாங்கள் வீரர்களை இனங்கண்டு கொண்டதாகவும் பின்னர் கோவிட்19 இனால் எட்டு மாதங்களுக்கு வீரர்களை ஓய்வில்லாமல் வைத்திருந்ததாகவும் கூறிப்பிடுகிறார். பயிற்சியாளராக இருந்த போது பாகிஸ்தானுக்கும் தற்போது இலங்கை க்கும் இடையிலான வேறுபாடு தொடர்பாக கேட்கப்பட்ட போது, இரண்டும் ஒரே மாதிரியான நிலையில் இருப்பதாக கூறிய ஆர்தர் பாகிஸ்தான் க்கு புதிய பாதை, தலைமை, சில பெரும் முடிவுகள் தேவைப்பட்டன. இலங்கையில் தான் சில தகுதியான வீரர்களை இனங்கண்டு இருப்பதாகவும் அவர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த போதிய கால அவகாசம் வழங்கப்படும் என குறிப்பிட்டவர் கோவிட் இனால் ஒரு வருடம் வீணாக சென்றது என்றார்.
மிஸ்பா உல் ஹக் – யுனஸ் கான் ஓய்வுக்கு பின் இலகுவாக பாகிஸ்தான் மீண்டெழுந்தது, ஆனால் மறுபக்கம் குமார் சங்கக்காரா மஹேல ஜெயவர்த்தனே க்கு பின் இலங்கையின் நிலை குறித்து கேட்கப்பட்ட போது; பாகிஸ்தானில் 200 மில்லியன் மக்களும் இலங்கையில் 21 மில்லியன் மக்களும் என சனத்தொகையை குறிப்பிட்டார். புதிதாக உருவாக்கப்படும் கட்டமைப்பு அதை நிவர்த்தி செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் இதன்மூலம் உள்ளூர் போட்டிகளில் இருந்து வருவோர், சர்வதேச போட்டிகளில் திறமையாக விளையாட முடியும் என்று குறிப்பிட்டார்.
உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறந்த சராசரியை வைத்திருக்கும் இளம் வீரர் பதும் நிஸங்க தொடர்பாக கேட்க: மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான பயிற்சியின் போது தான் அவதானித்தாகவும் டெக்னிக்கல்லி (Technically) சிறந்த வீரராக இருப்பதாகவும் உடற்தகுதி மற்றும் களத்தடுப்பிலும் சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். அசேன் பண்டார வையும் குறிப்பிட்டு கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட தான் இரண்டரை மாதம் வீட்டுக்கு கூடி செல்லாமல் இலங்கை கிரிக்கெட் வீரர்களை அவதானித்தமை குறித்தும் இது தனக்கு இலங்கை கிரிக்கெட் தொடர்பாக பூரண தெளிவை வழங்கியதாகவும் பகிர்ந்தார்.
இலங்கைக்கு தென்னாப்பிரிக்காவில் தொடர் வெற்றியை பெற்று தந்து இலங்கை கிரிக்கெட்டை புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் அணித்தலைவர் திமுத் கருணாரட்ன தொடர்பில் கேட்கப்படும் போது: திமுத்துடன் இணைந்து பணியாற்றுவது அருமையாக இருக்கிறது, அவர் ஒரு அற்புதமான மனிதர் என்றார்.
தான் முன்னர் பயிற்சியாளராக இருந்த அணிகளின் தலைவர்களில், கிரேம் ஸ்மித் அவரைப் பற்றி மிகப்பெரிய aura கொண்டிருந்தார். அவர் வீரர்கள் உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தபோது, அவர் சொல்வதை வீரர்கள் கேட்டார்கள். அவர் தந்திரோபாயமாக சிறந்து விளங்கினார் மற்றும் வீரர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அவுஸ்திரேலியா வின் மைக்கேல் கிளார்க், மைதானத்தில் ஒரு சிறந்த தந்திரோபாயம் மிக்கவராக இருந்தார். ஆனால் சர்பராஸ் அகமது – அவர் வித்தியாசமானவர். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார், நான் அவருடன் பணிபுரிந்தபோது அவர் ஒரு இளம் கேப்டனாக இருந்தார்.திமுத் கருணாரட்னவை, இலங்கை வீரர்கள் பெரும் மதிக்கிறார்கள். அவர் ஒரு சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்றும் குறிப்பிட்டார்.
வனித்து ஹசரங்க குறித்து அவர் ஒரு Match Winner. அவருக்கு அந்த திறமை இருக்கிறது. எல்லா நல்ல தரமான வீரர்களுக்கும் இருக்கும் அந்த Streak கொண்டிருக்கிறார், அதாவது போட்டி கடினமாகும்போது, அவர் பந்து வீச விரும்புகிறார். ஆட்டம் கடினமாகி, அவர் பேட்டிங் செய்யும்போது, வெற்றி ஓட்டத்தை பெற அங்கு இருக்க விரும்புகிறார்.மூன்று வீத ஆட்டங்களில் ஹசரங்க வை காண முடியும் என்பது தெள்ளத் தெளிவாக ஆர்தர் குறிப்பிடுவதில் இருந்து தெரிகிறது.
முத்தையா முரளிதரன்-க்கு பின் இலங்கையின் சூழல் நாயகனாக திகழ்ந்தவர் ரங்கன ஹேரத், அவருக்கு பின் நிலையான ஒரு சூழற் பந்து வீச்சாளர் இல்லை என்று கேட்கப்பட, ஆர்தர் கூறியதாவது: லசித் எம்புல்தேனிய அந்த இடத்தை நிரப்புவார் என்றும் ஹசரங்க wrist spinner ஆகவும் இருப்பார். அவருக்கு பின் லக்சன் சண்டகன் wrist spin வகையிலும் left arm spin வகையில் பிரவீன் ஜெயவிக்ரம, டுவின்டு திலகரட்ன உள்ளனர் என்றும் பகிர்ந்திருக்கிறார். ரமேஸ் மென்டிஸ், அகில தனன்சய போன்றோரையும் குறிப்பிட்டார்.
மேலும் டோம் மூடி, இலங்கை கிரிக்கெட் இயக்குனராக நியமிக்கப்பட்டது தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தார்.