இதழ்-25

பெண்ணாகிய ஓவியம்

மன நல மருத்துவத்தில் Hallucination என்ற சொல் மிகவும் பிரபலம். Hallucination என்றால் உண்மையில் இல்லாத ஒன்றை இருப்பதாக மூளை உணரும் நிலை. மாயத்தோற்றங்கள் என்று தமிழ்ப்படுத்தலாம்.

இது ஐந்து புலனுணர்வுகள் மீதும் தாக்கம் செலுத்தக்கூடியது. Visual Hallucinations(பார்வை), Auditory Hallucinations(கேட்டல்), Olfactory Hallucinations(மணம்), gustatory Hallucinations(சுவை), Somatic Hallucinations(தொடுகை) என்று  ஐம்புலன்களும் மாய மானாக மாறலாம்.

“பொய்மானை தேடிச் சென்றது ராமனின் கண்ணம்மா

மெய் மானை தேடச் சொன்னது மாறனின் நெஞ்சம்மா”

மன நல பிரச்சினை உள்ளவர்கள், போதையின் பாதிப்பில் உள்ளவர்கள், சில மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் தவிர, அத்தனை Hallucinations உம் உணரப்படும் சாதாரண நிலை காதல். இன்னொரு வகையில் சொன்னால் காதல் என்பது ஒரு வகை மனப்பிறழ்வு அல்லது போதை. அதுவும் கன்னிக்காதல் – First love இன் போது அத்தனை Hallucinations உம் உருக்கொண்டு ஆடும்.

“நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே

நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே

என் தலை நனைத்த மழைத்துளி அமுதம் ஆனதே

நான் இழுத்து விட்ட மூச்சிலே இசை கசிந்ததே”

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே! இவன் இயல்பில் ஒரு ஓவியன். ஆனாலும் நடனம், பாட்டு, கவிதை என்ற அத்தனை கவின் கலைகளுக்கும் கலாரசிகன்.

“ரசிகா ரசிகா ரசிக ரசிக பெண் ரசிகா”

கலைகளை ரசிக்க தெரிந்தவர்களுக்கும் படைக்க தெரிந்தவர்களுக்கும் கற்பனை ஆறு பெருக்கெடுத்து மடை உடைத்துப் பாயும். அப்படியான கற்பனை அலைவரிசையில் படைத்த எழுத்துக்கோ ஓவியத்துக்கோ உயிர் கொடுப்பது தான் படைப்பின் வெற்றி. தனது படைப்பின் மேல் படைப்பவனுக்கு இருக்கும் காதல் – அவன் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் சாவி.

எழுத்து வாசகனுடன்  ஒட்டிக்கொள்ள வேண்டும். எழுத்தாளன் சிலாகித்த இடங்களுக்கெல்லாம் வாசகன் கூட வர வேண்டும். ஓவியம் பார்ப்பவனுடன் பேச வேண்டும்; அந்த மொழியிலே அவன் கிறங்கி மயங்க வேண்டும். நல்ல சிற்பம் பிடிக்கும் அபிநயத்தில் பார்ப்பவர் கண்கள் சொக்க வேண்டும். இந்த இணைவு சாத்தியமாகும் போது தான் படைப்பு ஜீவிதமாகிறது; படைப்பாளி சிரஞ்சீவி ஆகிறான்.

//பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்

தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்//

இவன் தன் காதலியிடம் தன் ஓவியத்தின் பெருமைகளை சொல்கிறான். பூவின் படத்திலிருந்து பூவாசம் – Olfactory Hallucination. தீயை வரைந்தால் விரல் சுடுகிறது – Somatic Hallucination.

அவனது படைப்புக்கள் மேல் அவனுக்கு இருக்கும் பெருமை – ஆணவம் – காதலின் வெளிப்பாட்டில் இன்னும் மேலே போய் சொன்னான்,

பெண்ணே! நான் தீயை வரைந்தால், தூரிகைகளே தீப்பற்றிக் கொள்ளும். தன்னிடம் விஷேடமான திறமை இருப்பதாக நம்புகிறான்.

இப்படியாக ரசனையிலும் கற்பனையிலும்  கலைகளின் சங்கமத்திலும் ஊறித் திளைத்திருப்பவன், தன்னை உரசி உடைத்து சென்ற அவள் தந்த தடுமாற்றங்கள் பற்றி அவளிடமே சொல்கிறான். காதல் போதை தலைக்கேறி அத்தனை Hallucination உம் கூட்டுச் சேர்ந்து கும்மியடிக்கும் கதையை.

“நாக்கு உன் பெயர் கூற என் நாள்கள் சக்கரை ஆக”

அவள் பெயர் சொல்ல அது தித்திக்கிறது.

– Gustatory Hallucinations.

“அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று

உயிரை தடவி திரும்பு போது

மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே”

அவள் பேசினால் புல்லாங்குழல் நாதம் கேட்கிறது. – Auditory Hallucinations.

“பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக”

அவள் சிரித்தால், இவனுக்கு இறக்கை முளைக்கிறது.- Tactile Hallucinations.

“காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ”

அவன் கண்கள் பார்க்கும் திசை எல்லாம் அவள் விம்பமே தெரிகிறது. –

 Visual Hallucinations.

இப்படி அத்தனை Hallucinations உம் இவனை மொத்தமாக கவ்விக்கொள்ள,

“தலைகீழ் தடுமாற்றம் தந்தாய்

என்னில் என் கால்களில்”

இந்த தடுமாற்றங்களுடன் கற்பனை கடிவாளம் தெறிக்க, காதல் மனம் பிரபஞ்ச வெளியெங்கும் பரந்து காலங்களை தாண்டி எதிர்காலத்தில் அவளுடன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்ற கனவில் லயித்து கிடக்கிறது.

“ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்

தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்

நொடியும் விலகாமல் கொஞ்சும்  கொஞ்ச தங்கும் நெஞ்சே”

இப்படி அவன்  காதல் மதுவை குடித்து போதையாகி புலம்பியபடி இருக்க, அவனை நோக்கி கேட்கிறாள்,

//உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்

உயிருள்ள நானோ என்னாகுவேன்//

அவன் மகிழ்ந்து.

//உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி//

எப்பவுமே நான் உங்களுக்கு ஓவியம் தானா? என்று அவள் கடிந்து கொள்ள, இவனோ

“மின்னலை பிடித்து தூரிகை சமைத்து

ரவிவர்மன் எழுதிய வதனமடி

நூறடி பளிங்கை ஆறடியாக்கி

சிற்பிகள் செதுக்கிய உருவமடி”

என்று மேலும் அவளை ஓவியப்பதுமையாக்கி  கொஞ்சுகிறான்.

இவன் உவமையில் கொஞ்சம் நாணி, அடுத்த கேள்வியை தொடுத்தாள்.

ஓவியத்துக்கும் காதலுக்கும் என்ன தொடர்பு?

//புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்

உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்

கோடு கூட ஓவியத்தின் பாகமே

ஊடல் கூட காதல் என்று ஆகுமே//

ஓவியத்தில் வரையும் ஒவ்வொரு கோடும் அதன் பாகம் என்பது போல காதலின் போது வரும் சின்ன சின்ன செல்லச்சண்டைகள், அழுகைகள், மன அழுத்தங்கள், உடைவுகள், இணைவுகள் அத்தனையும் சேர்ந்த ஊடலும் காதலின் பாகம் தான். ஊடலும் கூடலும் சேரும் போது தான் காதல் பிரகாசமாகிறது. வர்ணங்களும் கிறுக்கல்களும் இணையும் போது தான் ஓவியம் ஒளிர்கிறது.

அப்படியென்றால், என்னை வரைந்தால் வர்ணமா? கிறுக்கலா?

“பல்லவன் உளிகள் கூடி செதுக்கிய சிலை தானா

பிரம்மனும் சிலையை பார்த்து ஜீவனை கொடுத்தானா”

நீயே தங்கச்சிற்பம். உன் வளைவுகளும் வாழிப்புகளும் கிறுக்கல்கள் தேடும். மலைகளும் குழிகளும் வர்ணங்களை நாடும். ஒவ்வொரு வர்ணமும் ஒவ்வொரு மொழி பேசும். உன் கூந்தலுக்கு கார் வண்ணம்,

“விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது

பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி”

கூந்தலுக்கு மட்டுமா கறுப்பு என்று அவள் குறும்பாய் கேட்க, இல்லை இன்னும் மூன்று முக்கோணங்கள் வரைய என்று இவன் விஷமமாய் சொல்ல, அவள் பேச்சை மாற்றினாள்.

//ஒரு வானம் வரைய நீல வண்ணம்

நம் காதல் வரைய என்ன வண்ணம்//

நீலம் அண்டத்தின் நிறமல்லவா! அது சமத்துவத்தின் குறியீடு. வானம் வரைய மட்டும் நீலம் இல்லை;

“நீலத்தைப் பிரித்துவிட்டால்

வானத்தில் ஏதும் இல்லை”

நீங்கள் ஓவியரா? தத்துவாசிரியரா?

//உன் வெட்கத்தின் நிறம் தொட்டு

விரல் என்னும் கோல் கொண்டு

நம் காதல் வரைவோமே வா//

அவன் பதிலில் அவளை வெட்கம் அள்ளிக்கொள்ள, நம் காதலை எங்கே வரைவது என்ற மீண்டும் அவனை சீண்டினாள்.

கட்டிலில்! என்ற படியே அவன் கையை பிடிக்க, அவள் அடுத்த கேள்விக்கு தாவினாள்.

//ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது//

தனது ஓவியங்கள் ஜீவிதமாக வேண்டும் என்ற பெருங்காதல் கொண்டவன் பதில் சொன்னான்,

//உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது//

உற்றுப்பார்க்கும் ஆளின் கண்ணிலா! அப்படியென்றால் ஓவியத்தில் இல்லையா?

எனது ஓவியத்தினுள் நான் ஒளித்து வைத்திருக்கும் அத்தனை பொக்கிஷங்களையும் தேடிப்பார்த்து அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் நல்ல ரசிகனின் கண்ணில் தான் இருக்கிறது. ரசிகனின் கண் தான் சந்தோஷ ஆச்சரியத்தின் திறவுகோல். எவன் அதை காண்கிறானோ அவனுடன் மட்டும் தான் எனது ஓவியம் பேசும்.

அவனை வியந்து பார்த்த படியே கேட்டாள்,

//பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது//

ஓவியன் சொன்னான்,

//ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது//

பெண்ணுடம்பில் ஆண் தொடாத பாகம் என்று எதுவுமே இருக்காதே? அப்படியென்றால் பெண் உடம்பில் காதல் இல்லை என்பதா பொருள்?

பெண்ணுடம்பில் எந்த பாகத்தை ஆண் அதுவரை தொடவில்லையோ அதில் தான் அவளது அத்தனை பெண்மையின் வாசமும் சிலிர்ப்பும் காதலும் ஒட்டியிருக்கும். அதனையும் ஆடவன் கொண்டுவிட்டால், அவள் தன்னுடலில் ஒளித்து வைத்திருந்த அத்தனை காதலையும் அவனே எடுத்து விடுவான் அவள் காதல் அவனுக்குள் தஞ்சம் புகுந்துவிட்டது. அவள் அவனுடன் கலந்து விட்டாள். பதிலிலே கிறங்கியவள்,

//நீ வரையத்தெரிந்த ஒரு நவீன கவிஞன்

பெண் வசியம் தெரிந்த ஒரு நலிந்த கலைஞன்

மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே மடியோடு விழுந்தாயே வா//

என்று அணைத்துக்கொள்கிறாள். இவன் தான் வரைந்த ஓவியத்தின் மடியோடு தலை சாய்த்துக் கொள்கிறான்.

Maara movie release LIVE UPDATES: Madhavan wins hearts | Entertainment  News,The Indian Express

Delusion என்றால் பிரமை. உண்மையில் இல்லாத விஷயங்கள் தனக்கு நடப்பதாக ஒருவர் உறுதியாக நம்பும் நிலை. Delusion இன் ஆரம்பநிலைகள் Hallucinations ஆக ஆரம்பிக்கும். பல வகையான Delusions இருக்கிறது. Persecutory, Reference, Grandiose, Control, Love போன்றவை சில வகைகள்.

Erotomania என்பது ஒரு வகை Delusion நிலை. யாரோ ஒரு நபர் தன்னை தீவிரமாக காதலிப்பதாக நம்பும் நிலை. பொதுவாக அந்த நபர் சமுகத்தின் வெளிச்சம் பெற்ற நபராக இருப்பார்கள். இது இரண்டு வகையாக இருக்கலாம். Romantic love , Platonic love.

Platonic love இல் காமத்துக்கு இடமில்லை. அங்கே அன்பு மட்டும் தான். நட்பின் உச்ச வடிவமென்று சொல்லலாம். இந்த ஓவியனுக்கு இருப்பது, Romantic love Erotomaniac Delusion.

“மனிதர் உணர்ந்து கொள்ள

இது மனிதக் காதல் அல்ல

அதையும் தாண்டி புனிதமானது”

Yes. அவன் காதலி என்பது கனவு. அவன் காதல் என்பது ஒரு பிரமை.

“மேகமோ அவள் மாய பூ திரள்

தேன் அலை சுழல் தேவதை நிழல்”

“LOVE is a DELUSION but I DON’T like to live without that DELUSION”

Kanmani Anbodu Kadhalan Song Lyrics - Guna | Kamal Haasan, Roshini -

Related posts

தேடல்கள் உள்ளவரை தொடர்வோம்…

Thumi2021

சித்திராங்கதா – 25

Thumi2021

இது மழைக்காலம்

Thumi2021

Leave a Comment