இதழ்-27

3.47 வினாடிகள் தொடக்கம் முடிவிலி வரை

நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோமோ அப்படி நம்மை நாமே மாற்றிக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே உள்ளது.

என்னைப் பலரும் கையில் தூக்கி யிருக்கிறார்கள் அவர்களின் கையில் முதல் முதலில் நான் தவழும் போது நான் நானாகவே இருந்தேன்.என் நிறங்கள் அனைத்தும் இருக்க வேண்டிய இடத்தில் சரியாக முழுமைபெற்றவனாக இருந்தேன்.எனது வண்ணங்களை சுழற்றி சில மாறுதல்கள் என்னில் வந்த பின்னர் நான் நானாக இல்லை. எப்படியும் எனது வண்ணங்களை சரியாக்கும் முயற்சியில் பலரில் சிலரே வெற்றி பெறுகிறார்கள். அப்படி முயற்சி செய்யும் பலரும் முதலில் எனது 6 வண்ணங்களில் ஒன்றை இலகுவாக சரி செய்து விடுகிறார்கள்.

அதற்கு பின் அவர்கள் மிகுதி 5 வண்ணங்களை சரி செய்தாலே என்னை பழைய போன்று முழுமையடைய செய்ய முடியும். இங்கே தான் பலரும் சில தவறை

செய்கின்றார்கள். என்னை சரி செய்யும் முயற்சியும் முடியாமல் போகின்றது. காரணம் நான் உங்கள் வாழ்கையை போன்றவன்.அனைவரது வாழ்கையிலும் என் 6 வண்ணங்கள் போல் பல உறவுகள் மகிழ்ச்சிகள் சிக்கல்கள் உள்ளன. பலரும் என் வண்ணங்கள் போல் வாழ்க்கையை பார்ப்பதில்லை.பார்;த்தால் அனைத்திற்கும் தீர்வு சில வினாடிகளில் பிறந்து விடும். ஆம்! என்னை 3.47 வினாடிகளில் தீர்த்தவர்களும் உண்டு.

ஒரு நிறம் சரியாகிய பின்னர் பலருக்கும் அந்த நிறத்தில்; மாற்றம் கொண்டு வருவதற்கு மனம் வருவதில்லை காரணம் மீண்டும் நிறம்; கலைந்துவிடும்.ஆனால் மீணடும் மாற்றம் அந்த ஒரு நிறத்தில் கொண்டுவந்து மிகுதி 5 நிறங்களையும் சரிசெய்யும் முயற்சியில் இறங்கினால் என்னை சரி செய்ய முடியும். ஒன்றை சரி செய்தவர்களுக்கு என்னை முழுமையாக சரி செய்ய முடியாமல் போகும்.
காரணமும் இதுவே! ஆம்! வாழ்க்கையிலும் இது பேலவே வரும் பிரச்சினைகளில் பலரும் தம்மில் சில மாற்றங்களை செய்ய நினைப்பது இல்லை. அனைவரும் என் ஒரு நிறத்தை சரி செய்து காத்திருப்பது போல் எல்லா கஸ்ரங்களும் கடந்து போகும் என்று பொறுமையாக வாழ்ந்தால் அவை எல்லாம் பழகி மட்டும் தான் போகும். நாமாக சில மாற்றங்களை மாற்ற வேண்டிய இடத்தில் மாற்றாமல் தீர்வு கிடைப்பது சாத்தியம் இல்லை. ஒன்று மட்டுமே சரியாக இருக்கும். மிகுதி அனைத்தும் எப்பொழுது சரியாகும் எனும் வினாவுடனே இறுதி வரை இருந்து விடும். என் 5 நிறங்களை போல்.

ஆரம்பத்தில் சரியாகவே இருந்தேன் ‘சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதே இல்லை” ஆகவே பழைய நிலைக்கு என்னை மாற்ற முடியும். அதற்கு சிறு முயற்சி போதும் நான் சரியாக வருவதற்கு. இரு விரல்கள் மாற்றத்தை விரும்பும் மனம் இருந்தால் போதும். வாழ்க்கையிலும் அப்படியே! உங்கள் மனம் உங்களிடமே உள்ளது.மனதின் சக்தி அறிந்தவன் இவ் உலகத்தை வென்றிடலாம். ஆம் எண்ணம் போல் தான் வாழ்க்கை! மாற்றம் ஒன்றே மாறாதது. இதை தெரிந்தவர் பலர்.

ஆகவே மனம் நினைத்தால் அடுத்து உங்களிற்கு இரு விரல்கள் தேவை. இரு விரல்கள் போல் உங்களை சுற்றி கட்டாயம் இருவர் இருப்பார்கள் அவர்களை கண்டு பிடிப்பது வாழ்கையில் கட்டாயமான ஒன்று. தாயாக தந்தையாக மனைவியாக காதலியாக நண்பனாக ஒருவர் கட்டாயம் இருப்பார்.

இவ் வாழ்க்கை ஒரு முறையே! நான் இப்படியே சரியாகாமல் குப்பையாக குப்பைத்தொட்டி சென்றால் மறு பிறவியில் மீழ்சுழற்சி செய்யப் பட்ட வேறு பொருள் ஆகிவிடுவேன் ஆகவே குப்பைத்தொட்டி செல்லும் முன் முழுமை பெற்று விடவேண்டும். அது போலவே வாழ்க்கையும். வாழ்க்கை ஒரு முறையே மீண்டும் இவ்வாழ்க்கை இதே பெயருடன் இதே சொந்தங்களுடன் கிடைக்க போவதில்லை. இதுவே நிதர்சனம்.

மீண்டும் செல்கின்றேன் 3.47 வினாடிகளில் என்னை தீர்த்தவர்களும் உண்டு. வாழ்வில் தீர்க்காமல் விட்டவர்களும் உண்டு யாருமே இரு நூற்றாண்டுகள் வாழப்போவதில்லை. கிடைத்த வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்து என் வண்ணங்கள் போல் வாழ்கையிலும் வண்ணமயமாக வாழ்ந்திடுங்கள்.

துணிச்சலுடன் செயற்பட எப்போது முடிவு எடுக்கிறோமோ அப்போதே வாழ்க்கையில் வெற்றி நோக்கி செல்கின்றோம் என்பது உறுதி.

‘சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதே இல்லை”

Related posts

நியூசிலாந்தின் புதிய ரட்சகன்

Thumi2021

மருத்துவம் போற்றுதும்

Thumi2021

நீயும் ஏழை தான்!!!

Thumi2021

Leave a Comment