ஏகாதிபத்திய வழிமுறைகள்

- போர் மற்றும் கையகப்படுத்துதல் (Conquest and Annexation)
ஏகாதிபத்தியத்தை ஏற்படுத்த பல முறைகள் கையாளப்பட்டன. நவீன காலத்தில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளால் அனுப்பப்பட்ட படை வீரர்கள் பல நாடுகளின் தலைமையை வீழ்த்தி, அங்கு ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டினர்.
- சலுகைகள் அல்லது உரிமைகள் (Concession or Franchise)
சில நேரங்களில் தீவிர அமைப்புகள், பிற்படுத்தப்பட்ட நாடுகளின் பொருளாதார வளங்களை சுரண்டும் பிரத்தியேக உரிமையைப் பெற்றிருந்தன.
- குத்தகை உரிமை (Lease hold)
சில நாடுகள் தங்கள் குடியேற்றநாடுகளிடமிருந்து ஒரு நிலப்பகுதியை குத்தகைக்குப் பெற்று அங்குள்ள பொருளாதார வளங்களைச் சுரண்டி வந்தன. பின்னர் அந்த குத்தகை நிலங்கள் மீது அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தின.
- செல்வாக்கை நிலைநாட்டுதல் (Sphere of Influence)
செல்வாக்கை நிலைநாட்டுதல் என்ற பெயரில் சில நாடுகள் பொருளாதாரச் சுரண்டல் வேலையில் ஈடுபட்டனர். 1907 ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் ரஷ்யா, பாரசீக நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.

- பாதுகாப்பு ஏற்படுத்துதல் (Protectorate)
பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் ஆபிரிக்க நாடுகளின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுடன் பொம்மை ஆட்சி (Puppet Rule) உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு மாபெரும் நிலப்பரப்பை தங்கள் வசப்படுத்திக் கொண்டு, பின் சுரண்ட முற்பட்டனர்.
1912 இல் பிரான்ஸ் மொராக்கோ மீது இவ்வாறு தனது பாதுகாப்பை நிலை நிறுத்தியது.
- பொருளாதாரம் அல்லது வரிக்கட்டுப்பாடு (Economic and Tariff Control)
சில சமயங்களில் வலிமையான ஒரு நாடு வலிமை குறைந்த நாட்டின் மொத்த பொருளாதார அதிகாரங்களை தன் வயப்படுத்திக் கொள்ளுதல் பொருளாதார அல்லது வரிக்கட்டுப்பாடு முறையாகும்.
உதாரணமாக முதலாம் உலகப் போருக்கு முன் துருக்கியில் அனைத்து பொருளாதார அமைப்புகளும் ஒட்டோமான் பொதுக் கடன் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

- ஒப்படைப்பு முறை (Mandate System)
இது புதிய ஏகாதிபத்தியத்தின் இறுதி வழிமுறையாகும்.
இது 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் ஜான் ஸ்மட் என்பவரின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது.
முந்தைய கால குடியேற்ற நாடுகளில் பலவும், பிற்படுத்தப்பட்ட பகுதிகளும் சர்வதேச சங்கத்திடம் ஒப்ப்டைக்கப்பட்டன. இச்சங்கம் சில கட்டுப்பாடுகளுடன், இத்தகைய நாடுகளைப் பராமரிக்கும்படி பல நாடுகளிடம் கேட்டுக் கொண்டது. இத்தகைய நாடுகளை நிர்வாக ஒப்படைப்பு நாடுகள் என்றழைக்கிறோம்.
ஏகாதிபத்தியத்தின் சாதக விளைவுகள்
வலிமை மிக்க நாடுகள் வலிமையற்ற நாடுகளில் போக்குவரத்து மற்றும்தொடர்பு முன்னேற்றங்களை ஏற்படுத்தின.
குடியேற்ற நாடுகளில் கல்வி, மருத்துவம், புதிய விவசாய முறை, அமைதி, ஒற்றுமையை வளர்த்தன.
ஏகாதிபத்தியத்தின் பாதக விளைவுகள்
குடியேற்ற நாடுகள் தங்கள் சுதந்திரத்தை இழந்தன. மக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டதோடு அவர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
குடியேற்ற நாடுகளால் மூலப்பொருள்களை வழங்குவதற்கும் பொருள்களை விற்பதற்கு சந்தைகளாகவும் விளங்கின.
அந்நாடுகளின் உள்நாட்டு தொழில்கள் நசுக்கப்பட்டு, ஏழ்மையும், வேலையின்மையும் அதிகரித்தன. பாரம்பரிய விவசாய முறை மாற்றப்பட்டு, உற்பத்தி மூலப் பொருள்களை பயிரிட நிர்பந்திக்கப்பட்டன. இதனால் சில இனங்கள் மறைவுக்கு காரணமாயின.

இந்த பத்தி தினமணியில் வெளிவந்த ஏகாதிபத்தியம் எனும் கட்டுரையினை தழுவி மாற்றங்களுடன் இலங்கைக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.
சாரல் தூறும்………………………….!!!!!