இதழ்-27

நீயும் ஏழை தான்!!!

பசித்தவன் அருகில் இருக்க பார்க்க வைத்து உண்ணும்,
நீயும் ஏழை தான். (ஏழை )
பாதையிலே கிடந்தனவனை பார்க்காமல் போகும்,
நீயும் ஏழை தான்.(விபத்து )
மாடி வீட்டில் இருந்து கொண்டு மண்ணை பார்த்து போகும்,
நீயும் ஏழை தான்.(பணக்காரன் )
மார்பில் போட்டு வளத்தவளை ,மரியாதை கெடுக்கும்,
நீயும் ஏழை தான்.(தாய் )
பொன் வேண்டும் என்றும் பெண்ணை விற்கும்,
நீயும் ஏழை தான்.( மனிதன் )
போரில் வென்றவனை புறமுதுகில் குத்தும்,
நீயும் ஏழை தான் (வீரன்)
நலம் கேட்கும் நண்பனை நாவில் புறம் சொல்லும்,
நீயும் ஏழை தான்.(நண்பன் )
நல்லார் முகத்தை நாவுறு என்று சொல்லும்,
நீயும் ஏழை தான்.(நாவுறு )
பையில் உள்ளதை பாதையில் துலைத்தேன் என்று சொல்லும்,
நீயும் ஏழை தான்.( பணக்காரன்)
பார்க்காத ஒன்றை பார்த்தேன் என்று சொல்லும்,
நீயும் ஏழை தான். (சாட்சி)
பாதத்தில் வீழ்ந்தவனை பள்ளத்தில் தள்ளிய,
நீயும் ஏழை தான். (மன்னிப்பு)
இத்தனை சொல்லியும் திருந்தாத
நீயும் …………………?

வி.தனுஷ்ரன்
சுதுமலை

Related posts

நவீன வேதாள புதிர்கள் 06 –

Thumi2021

3.47 வினாடிகள் தொடக்கம் முடிவிலி வரை

Thumi2021

ஏகாதிபத்தியம் – Imperialism 03

Thumi2021

Leave a Comment