கொல்லப் பக்கம் போற பொண்ணு
மெல்ல கொஞ்சம் பாரு கண்ணு
ஓமாமன் நாந்தான்னு
ஒத்தயாட தரிச்சவளாய்
ஒய்யாரமா திரிஞ்ச பொண்ணு
பாவாடை தாவணியில்
பவளமல்லி சுமந்ததென்ன…..
மணப்பொண்ணா வெக்கப்பட்டு
மாமனத் தள்ளி போறதென்ன….?
குலதெய்வ கோயிலுக்கு
கும்பாபிஷேகோ தேவையில்ல
குமரிப் பொண்ணு நீ இருக்க-
இந்த மாமனுக்கங்க என்னவேல…..?
மல்லிக்கொடி தாண்டியங்கே
மல்லிகை பூ செல்வதென்ன
மணம் வீசி போறவளே
மாமன் மனசு சோகிக்கிடக்குதிங்க…
வாழ்க்கையில ஒரு பொண்ண
ஏறெடுத்தும் பாக்கலயே
பாதயெல்லாம் ஒன்னதாண்டி
பாவிமனம் நினைச்சிருக்கு
பாத்துகிட்டே போனாயென்ன
மாமனென்னு ஒரு தடவை..
கண்ணோட உறவாடும் மையும்
காதோட கத சொல்லும் கம்மலும்
காரிகை ஓஅழக
கதை கதையா சொல்லுதடி…
தெத்திப்பல்லு மறஞ்சிதெரிய
கத்திக்கீசும் ஓஞ்சிரிப்பும்
காலோடு கானம்பாடும் ஓங்கொலுசும்
தேரேறி பறையடிக்கும்
தேவத நீதான்னு….
கலர்கலரா கைவளையல்
கலகலன்னு சிரிக்கையில
கண்மணியே ஓன்நினைப்பு
மண்ணோடு போயிருமா..?
கொழுந்தெடுக்க போகயிலே
கோதயவள் கட்டழக
கொளுத்தும் வெயிலும் தாங்கலயே
போதுமடி வந்துவிடு…..
இந்தப் பணம் தேவையில்ல
மாமனிருக்கேன் ஒனக்காக
மகராணியா வச்சிருப்பேன்…
ஒத்த பொண்ணு தானேனு
மத்தவங்க நினைச்சிருந்தா
மெத்தையில படுத்திருப்ப…
பாவி அக்காள் நினைக்கலயே…
கரும்புருசி பாத்த எறும்பு
வரம்புமீறி வருமாபோல
கண்மணியே ஒம்மனச
கண்ணுக்குள்ள வச்சிருக்கேன்
காலம்பூரா தவமிருக்கேன்….
காலம் தாழ்த்தியது போதுமடி
கழுத்த கொஞ்சோ நீட்டிவிடு
கண்கலங்க விடமாட்டேன்
காலம் முழுசும் கைதியாவேன்
கட்டயில போறவர…..
கண்மணியே ஓங்காதல்
கட்டையிலும் கவி சொல்லும்
சங்கடம் தேவயில்ல
சலிக்காம காதலிப்பேன்
மாளிகை இல்லயின்னாலும்
சத்தியமா சொல்லுறேன்டி
சந்தோசமா வச்சிருப்பேன்…
சீக்கிரமா கட்டிப்புட்டா நீயென்ன
நமக்குன்னு நாலுபுள்ள
ஞாலத்தில பெத்தெடுப்போ…..!
மிதுஷா செல்வராஜா
மொழிபெயர்ப்புக்கற்கைகள் துறை
யாழ் பல்கலைக்கழகம்.