இங்கிலாந்தின் ஏகாதிபத்தியம்
பிரித்தானியா பேரரசின் ஏகாதிபத்திய ஆர்வம் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து காணலாம். 1599 இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டு அடுத்த ஆண்டில் ராணி எலிசபெத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவில் வணிகப் மையங்களை நிறுவுவதன் மூலம், இந்தியாவில் ஏற்கனெவே வர்த்தக தளங்களை நிறுவியிருந்த போர்த்துகீசியர்களுடனான உறவை பலப்படுத்திக் கொள்ள இங்கிலாந்தால் முடிந்தது. 1767 ஆம் ஆண்டில் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக உள்ளூர் பொருளாதாரம் சூறையாடப்பட்டதுடன் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியில் நிகழ்ந்த சுரண்டல்கள் காரணமாக கம்பெனி மிகப்பெரிய பின்னடைவை கண்டது.
வெர்ஜீனியா, மாசசூசெட்ஸ், பெர்முடா, ஹொண்டுராஸ், அன்டிகுவா, பார்படோஸ், ஜமைக்கா மற்றும் நோவா ஸ்கொச்சியா ஆகியவற்றில் காலனிகளைக் கொண்டிருந்ததால் 1670 ஆம் ஆண்டளவில் பிரிட்டனின் ஏகாதிபத்திய ஆர்வங்கள் அதிகரித்தன.
பிரான்ஸின் ஏகாதிபத்தியம்
1814 ஆம் ஆண்டு வாக்கில் பெரும்பாலான முதலாம் காலனித்துவ பேரரசானது முடிவுக்கு வந்திருத்தது. இரண்டாவது காலனியாதிக்க பேரரசு ஆல்ஜீரியவை 1830 ஆம் ஆண்டு வென்றதன் மூலம் தொடங்கியது. பின்னர் 1962 ஆம் ஆண்டு அந்நாட்டிற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டவுடன் பெரும்பாலான காலனியாதிக்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
பிரான்ஸின் வரலாறு பெரியதும் சிறியதுமான பல போர்கள் மற்றும் உலகப் போர்களின் போது காலனித்துவ நாடுகளிலிருந்து பிரான்ஸிற்கு குறிப்பிடத்தக்க உதவிகள் கிடைத்தன.
16 ஆம் நூற்றாண்டில், பிரான்ஸின் காலனித்துவத்தை அமெரிக்காவின் புதிய குடியேற்றம் மூலம் தொடங்கினர். 17 ஆம் நூற்றாண்டில் ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டது.
19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்ஸ் காலனியாதிக்க பேரரசானது பிரித்தானியப் பேரரசிசிற்கு அடுத்த படியாக இருந்தது. 12,347,000 கிமீ 2 (4,767,000 சதுர மைல்கள்) பரப்பளவில் விரிந்திருந்த பிரெஞ்சு காலனியாதிக்கம் உலக மக்கட்தொகையில் பத்தில் ஒரு பங்கினையும் இரண்டாம் உலகப்போரின் போது இது 110 மில்லியன் மக்கள் என்றளவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது.
ஜப்பானின் ஏகாதிபத்தியம்
1894 ஆம் ஆண்டில் முதல் சீனா-ஜப்பானியப் போரில் தைவான் உள்ளிட்ட நாடுகள் கைப்பற்றப்பட்டது. 1905 ஆம் ஆண்டில் ரஷ்ய-ஜப்பானியப் போரை வென்றதன் விளைவாக, ஜப்பான் ரஷ்யாவின் சாகலின் தீவில் பங்கு பெற்றது.
1910 ஆம் ஆண்டில் கொரியா இணைக்கப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஜப்பான், சீனாவின் ஷாங்டோங் மாகாணத்திலும், மரினா, கரோலின், மார்ஷல் தீவுகள் ஆகியவற்றிலும் ஜேர்மனியின் குத்தகைக்குட்பட்ட பிரதேசங்களைக் கைப்பற்றியதுடன், பல்வேறு தீவுகளையும் நாடுடன் இணைத்துக் கொண்டது.
அமெரிக்க அழுத்தங்கள் காரணமாக ஜப்பான் ஷாங்டோங் பகுதியை ஜப்பான் திரும்ப ஒப்படைத்தது. 1931 ஆம் ஆண்டு சீனாவின் மஞ்சூரியன் பகுதியை ஜப்பான் கைப்பற்றியது.1937 ஆம் ஆண்டு சீன- ஜப்பானியப் போரின் போது ஜப்பானின் இராணுவம் மத்திய சீனாவை ஆக்கிரமித்ததுடன், பசிபிக் போரின் முடிவில் ஜப்பான், ஹாங்காங், வியட்நாம், கம்போடியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இந்தோனேசியா, நியூ கினி மற்றும் பசிபிக் பெருங்கடலின் சில தீவுகளையும் கைப்பற்றியது. கிழக்காசிய ஒத்துழைப்பு கோளத்தை உருவாக்கும் லட்சியத்தை சப்பான் பொண்டிருந்தது. இருப்பினும் 1945 ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பானின் காலனியாதிக்கம் முடிவுக்கு வந்தது.
இந்த பத்தி தினமணியில் வெளிவந்த ஏகாதிபத்தியம் எனும் கட்டுரையினை தழுவி மாற்றங்களுடன் இலங்கைக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.
சாரல் தூறும்………………………….!!!!!