இதழ்-28

களிப்பூட்டும் கிரிக்கெட்

இரண்டு வருடங்களாக (2019-2021 காலப்பகுதியில்) நடைபெற்று வந்த முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship) இன் இறுதிப் போட்டியில் இந்திய-நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இங்கிலாந்தின் சௌதம்டன் (Southampton) மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் ஆனது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசியினால் புதிதாக 2019இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வழக்கமான மட்டுப்படுத்தப்பட்ட உலகக் கிண்ண போட்டிகள் போன்று குறிப்பிட்ட ஒரு வருடத்தில் மட்டும் நடைபெறாது, இரண்டு வருடங்களாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 அணிகளில் 9 அணிகள் மோதும் ஒரு தொடரானது. இந்த இரு வருடங்களில் அணிகள், தங்களுக்குள்ளே ஏதாவது 6 அணிகளுடன் ஒவ்வொரு அணியும் ஆறு டெஸ்ட் தொடர்களில் (இதில் தலா மூன்று தொடர்களை தம் சொந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆக) விளையாடும். ஒரு தொடரில் இரண்டு தொடக்கம் ஐந்து போட்டிகள் இருக்கலாம். ஒரு தொடருக்கு 120 புள்ளிகள் என மொத்தமாக 720 புள்ளிகள் – இதில் அதிக புள்ளிகளை பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். ஆனால் கொரோனா காரணமாக முழுமையாக எல்லா போட்டித் தொடருகளும் நடந்த முடியாமல் போனதால், பெற்ற மொத்த புள்ளிகளை தொடர்களின் எண்ணிக்கையால் வகுத்து விகிதத்தில் முதலிரு இடம் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என்று 2020 நவம்பரில் அறிவிக்கப்பட்டது.

இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து இரண்டு வருடங்கள் சுழற்சியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்ச்சியாக உலக கிண்ண போட்டிகள் போன்று நடைபெறவுள்ளது.

இந்த முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-இல் துடுப்பாட்ட வீரர்களில், அதிக ஓட்டங்களை எடுத்தது மார்னஸ் லபுஸ்சேன் (1675); பந்துகளை எதிர்கொண்டது ஜோய் ருட் (3037); சராசரி – லபுஸ்சேன் (72.82); அடித்தாடும் வீதம் (Strike Rate) – ரிசாப் பான்ட் (66.26; 1000+ பந்துகள்); சதங்கள் (100s) – லபுஸ்சேன் (5); அரைச்சதங்கள் (50+) – லபுஸ்சேன் (14); நான்குகள்(4s) – லபுஸ்சேன் (186); ஆறுகள் (6s) – பென் ஸ்ரோக்ஸ் (31); பூச்சியம் – பூம்ரா (6) ஆகியோர் பெற்றிருந்தனர்.

பந்து வீச்சாளர்களில், அதிகமான – விக்கெட்டுகளை வீழ்த்தியது ரவிச்சந்திரன் அஸ்வின் (71); சிறந்த சராசரி – அக்சர் பட்டேல் (10.59); 5 விக்கெட் பெறுதி – கேல் ஜமிசன் (5); சிறந்த எக்கோனமி (Eco) – ஜமிசன் (2.18); பந்து பரிமாற்றங்கள் வீசியது நதன் லயோன் (630.5); ஓட்டமற்ற பந்து பரிமாற்றங்கள் (Maidens) வீசியது பட் கம்மின்ஸ் (158); ஆறுகள் விட்டு கொடுத்தது மஹராஜ் (28) ஆகும்.

அதிக பிடிகளை ஜோய் ரூட் (34) எடுக்க அதிக வீரர்களை ஆட்டமிழக்க செய்த விக்கெட் கீப்பராக ரிம் பெய்ன் (65) உள்ளார்.

அணிகளில் அதிக வெற்றிகளை இந்தியா (12) பெற்றிட அதிக தோல்விகளை தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் (தலா 8 தோல்விகள்) பெற்றுள்ளன.

தமது அணிகள் அதிக ஓட்டங்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் முறையே வருமாறு: இங்கிலாந்து சார்பில் ஜோய் ரூட் (1660 runs) மற்றும் ஸ்ருவட் புரோட் (69 wkts), அவுஸ்திரேலியா – மார்னஸ் லபுஸ்சேன் (1675) மற்றும் பட் கம்மின்ஸ் (70), தென்னாப்பிரிக்கா – டீன் எல்கர் (935) மற்றும் அண்ட்ரு நோக்கியா (47), மேற்கிந்தியத் தீவுகள்- பிளெக்வூட் (709) மற்றும் கேமர் ரோச் (39), நியூஸிலாந்து – கேன் வில்லியம்சன் (918) மற்றும் ரிம் சௌவ்தி (56), இந்தியா – அஜின்கயா ரகானே (1159) மற்றும் அஸ்வின் (71), பாகிஸ்தான் – பார்பர் அசாம் (932) மற்றும் சகின் அப்ரிடி (36), இலங்கை – திமுத் கருணாரட்ன (999) மற்றும் லசித் எம்புல்தெனிய (30), பங்களாதேஷ் – மொமினல் ஹக் (534) மற்றும் தையுல் (23).

2024 – 2031 காலப்பகுதியில் நடைபெறவுள்ள ஐசிசியின் உலக நிகழ்வுகளின் அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு இரட்டை ஆண்டிலும் ஒரு உலக ரி20 கிண்ணமும், ஒவ்வொரு ஒற்றை ஆண்டிலும் உலக கிண்ணம் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி என்பன நடை பெறவுள்ளது. அணிகளின் எண்ணிக்கையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த உலகக் கிண்ணத்தின் போது 10 அணிகள் மாத்திரமே பங்கு பற்றின. ஆனால் இனி 14 அணிகள் பங்குபெறும். 54 போட்டிகள் கொண்ட தொடரில் தலா ஏழு அணிகளாக பிரிக்கப்பட்டு பின் தலா சிறந்த மூன்று அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு முன்னேறும். அதே போல் உலக ரி20 கிண்ணத்தில் இனி 20 அணிகள் பங்கேற்கின்றன. ஆனால் வருகிற 2021,2022 உலக ரி20 கிண்ணத்தில் 16 அணிகள் தான் பங்குபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக ரி20 கிண்ணத்தின் போது 55 போட்டிகளிற்கு 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பின் ‘சூப்பர் எட்டு’, அரையிறுதி, இறுதி என நடைபெறும்.
நடாத்தும் நாடுகள் செப்டம்பர் மாதம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ICC major events: 2024-2031

2024: Men’s T20 World Cup, Women’s T20 World Cup, Men’s Under-19 World Cup

2025: World Test Championship Final, Men’s Champions Trophy, Women’s ODI World Cup, Women’s Under-19 T20 World Cup

2026: Men’s T20 World Cup, Women’s T20 World Cup, Men’s Under-19 World Cup

2027: World Test Championship Final, Men’s ODI World Cup, Women’s T20 Champions Trophy, Women’s Under-19 T20 World Cup

2028: Men’s T20 World Cup, Women’s T20 World Cup, Men’s Under-19 World Cup

2029: World Test Championship Final, Men’s Champions Trophy, Women’s ODI World Cup, Women’s Under-19 T20 World Cup

2030: Men’s T20 World Cup, Women’s T20 World Cup, Men’s Under-19 World Cup

2031: World Test Championship Final, Men’s ODI World Cup, Women’s T20 Champions Trophy, Women’s Under-19 T20 World Cup

Related posts

மருத்துவம் போற்றுதும்

Thumi2021

அட கலக்குது பார் இவ ஸ்டைலு!…

Thumi2021

எங்கிருந்து வந்தான் இந்த இடையன்?

Thumi2021

Leave a Comment