இதழ்-28

இறக்குமதி செய்யுங்கள்

மேலைத் தேசங்களில் ஏற்படுத்த ப்படுகின்ற தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிகளை உடனடியாக உள்வாங்கிக் கொள்ளுவதில் அதீத ஆர்வம் காட்டும் நாம் சமூக நலன் சார் விடயங்களில் மேலை நாடுகள் அறிமுகப்படுத்தும் அணுகுமுறைகளை கண்டு கொள்வதே இல்லை என்பது தான் கவலைக்குரிய விடயம். உதாரணமாக ஐபோன்களின் அடுத்தகட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடுத்த நொடியே அறிந்து கொள்ளும் நாம் சூரியகாந்தி ரிப்பன்களின் சூக்குமத்தை அறிவதில்லை.

இந்த பூமியில் பிறக்கும் யாவரும் சர்வசாதாரணமானவர்களாக இருப்ப தில்லை. சிலர் பிறப்பிலேயே விசேட தேவை உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களை விசேட தேவையுடையவர்கள் என அறிந்து கொள்ளமுடியாத வகையில் ஏனையவர்களைப் போலவே சிலர் இருப்பார்கள்.

சூரியகாந்தி பெல்ட் அணிந்த ஒருவரை நீங்கள் பார்த்தால், அவர்கள் அல்லது அவருடன் இருப்பவருக்கு ஒரு மறைக்கப்பட்ட மன அல்லது உடல் தடை இருப்பதாக அர்த்தம். இதனை மருத்துவத்தில் ஆட்டிசம் (யுருவுஐளுஆ) என்பார்கள். தங்கள் இயலாமையை தாங்களாக விபரிக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் சமூகத்தில் சாதாரணமாக நடமாடும் போது அவர்கள் விசேட தேவை உடையவர்கள் என்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்வது அவசியமாகும். அவர்களுக்குத் தேவையான உதவியை உடனடியாக அவர்கள் பெற்றுக் கொள்வதற்கு இது பெரிதும் உதவும்.

உதாரணமாக திருடிய பொருளைத் திருடன் ஒருவன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் வற்புறுத்தி கொடுத்தாலும் அந்த குழந்தை அதை உணர்ந்து கொள்ளாது. ஆனால் சமூகம் அந்த குழந்தையை திருடனாக பார்க்கும் வாய்ப்பை இந்த சூரிய காந்தி ரிப்பன் வழங்குகிறது.

இந்த சூரியகாந்தி ரிப்பன் பற்றிய விழிப்புணர்வு இலங்கையில் இதுவரை இல்லை என்றே கூற வேண்டும். எனவே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இதுபோன்ற சமூகநலன் சார் புதிய அணுகுமுறைகளை நமது தேசத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை!

எண்ணம் போல் வாழ்க்கை!

Related posts

அட கலக்குது பார் இவ ஸ்டைலு!…

Thumi2021

வெள்ளைக் காதல் – 03

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 25

Thumi2021

Leave a Comment