நள்ளிரவு வேளையில் அடர்ந்த காட்டில் ஓநாய்களும், பேய்களும் எழுப்பும் சத்தங்களைக் கேட்டு சிறிதும் அஞ்சாமல், வேதாளத்தை சுமந்து நடந்து கொண்டிருந்த விக்ரமாதித்தனிடம் அந்த வேதாளம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது.
ஒரு முறை சந்திரசேனன் என்ற மன்னன் நாகபுரி என்ற நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு ரூபவதி என்ற மகளிருந்தாள். இளவரசியான ரூபவதி திருமண வயதை எட்டியதும் அவளுக்கேற்ற ஒரு இளவரசனை அவளுக்கு திருமணம் செய்து வைக்க தேடிக்கொண்டிருந்தார் அவளது தந்தை. இதையறிந்த ரூபவதி தன் தந்தை தேர்ந்தெடுக்கும் இளவரசனை தான் திருமணம் செய்து கொள்ள முடியாதென்றும், மாறாக எந்த இளவரசன் அவனது திறமையை தன்னிடம் நிரூபிக்கின்றானோ, அந்த இளவரசனையே தாம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக திட்ட வட்டமாக கூறிவிட்டாள். அவளின் முடிவை ஏற்ற அவளின் தந்தையும் மற்ற நாட்டு இளவரசர்களுக்கு தன் மகளின் சுயம்வரத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.
அந்த சுயம்வரத்தில் ‘உபேந்திரன், யோகேந்திரன், தனஞ்செயன்” என்ற மூன்று வேறு வேறு நாடுகளைச் சேர்ந்த இளவரசர்கள் கலந்து கொண்டார்கள். அதில் முதலில் உபேந்திரன் ரூபாவதியிடம் சென்று தனக்கு எந்த ஒரு விஷயத்திலும் அதன் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலத்தை அறியக்கூடிய திறன் இருப்பதாக கூறினான். இரண்டாவதாக வந்த யோகேந்திரன் தன்னிடம் தான் தயாரித்த அற்புதமான ரதம் ஒன்று இருப்பதாகவும், அது நிலம், நீர், ஆகாயம் என மூன்று வழிகளிலும் பயணம் செய்யக்கூடியது என்று கூறினான். மூன்றாவதாக வந்த தனஞ்செயன் தான் உருவாக்கிய ‘அற்புத வாள்” ஒன்று தன்னிடம் இருப்பதாகவும், அதை கொண்டு சண்டையிடும் போது எதிராளிக்கு மரணம் நிச்சயம் என கூறினான். இதையெல்லாம் கேட்ட ரூபவதி அந்த மூவரில் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவது யார்? என்பதை மறுநாள் கூறுவதாக கூறி அந்தப்புரம் சென்றாள்.
மறுநாள் எல்லோரும் அரசவையில் ரூபவதி வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் ரூபவதி அரண்மனையில் இல்லை என்ற செய்தி வந்தது. அப்போது இளவரசன் உபேந்திரன் தன் முக்கால ஞானத் திறனைக் கொண்டு ரூபவதி சில அரக்கர்களால் கடத்தப்பட்டு, யாருமே எளிதில் செல்ல முடியாத ஒரு மலையுச்சியில் சிறை வைக்கப்பட்டிருப்பதாக கூறி, அங்கு செல்வதற்கான வரைபடத்தையும் வரைந்து கொடுத்தான். இதைக் கேட்ட யோகேந்திரன் தன்னுடைய அதிசய ரதத்தின் மூலம் யாருமே செல்ல முடியாத அந்த மலைக்கோட்டைக்கு செல்ல முடியும் என்று கூறினான். மூவரும் அந்த மலைக்கோட்டைக்கு பறந்து சென்றனர். அப்போது அங்கிருந்த அரக்கர்கள் இந்த மூன்று இளவரசர்களையும் தாக்க முற்பட்டனர். அப்போது இளவரசன் தனஞ்ஜெயன், தன்னிடம் இருந்த அற்புத வாளைக்கொண்டு அந்த அரக்கர்களுடன் சண்டையிட்டு, அவர்களைக் கொன்று அங்கு சிறை வைக்கப்பட்ட ரூபவதியை மீட்டான்.
இப்போது அம்மூன்று இளவரசர்களும் ஆளாளுக்கு தங்களுடைய திறனால் தான் இளவரசி ரூபவதி மீட்கப்பட்டதாக கூறி, அவர்கள் மூவரும் தங்களுக்கு தான் ரூபவதியை திருமணம் செய்யும் உரிமையுள்ளது என ஒரே நேரத்தில் உரிமை கோரினர். இதற்கொரு முடிவு காண எண்ணிய ரூபவதி பின்வரும் புதிரை தொடுத்தாள். சரியான பதிலை முதலில் அளிப்பவரை மணந்து கொள்வதாக வாக்களித்தாள்.
மேலுள்ள சிக்கலைத் தீர்க்க நீங்கள் 1 முதல் 9 வரையிலான இலக்கங்களை புள்ளிகளுக்குப் பதிலாக மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது உண்மையான ஒரு கணித சிக்கல் உருவாக்கப்படும். பூச்சியங்கள் பயன்படுத்தலாகாது மற்றும் ஒவ்வொரு இலக்கமும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
விக்ரமாதித்தனே இப்பொழுது உம்முடைய நேரம் என்று முடித்தது வேதாளம்.
துமி அன்பர்களே இச்சிக்கலைத் தீர்க்க நீங்களும் மன்னனுக்கு உதவிடுங்கள்.