இதழ்-29

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 03

கதைச்சுருக்கம்

மதுரை மாவட்டம் சிறுகுளம் என்ற கிராமத்தில் வசிப்பவர் முத்துஸ்வாமிஐயர். இவரின் மனைவி கமலாம்பாள். இவர்களுக்கு கல்யாணி என்ற மகள் உண்டு. முத்துஸ்வாமி ஐயரின் தம்பி சுப்பிரமணிய ஐயர். இவரின் மனைவி பொன்னம்மாள். இவர்களுக்குச் சுந்தரம் என்ற மகனுண்டு. அவன் அம்மாவை விடப் பெரியம்மா மீதே அதிக பாசம் கொண்டிருந்தான். கூட்டுக்குடும்பமாக இருந்த இவர்க ளின் குடும்பம் பெரும்பாலும் வெளியுலகத் தொடர்புகள் இல்லா மல் இருந்தது. நிலவுடைமை அமைப்பு மாறிவரும் காலத்தில் இவர்களின் கூட்டுக்குடும்பம் உள்முரண் பாடுகளால் சிதைவு அடைகின்றது. முத்துஸ்வாமி ஐயர் தனது மகள் கல்யாணியைச் சென்னையில் இருக்கும் ஸ்ரீநிவாசனுக்கு மணம் பேசி முடிக்கின்றார்.

பொன்னம்மாள் கலகத்தை உருவாக்கும் வம்பர் சபைத் தலைவி. இவள் கல்யாணியைத் தன் தம்பி மகன் வைத்தியநாதனுக்குத் திரு மணம் செய்து வைக்க விரும்பிய நிலையில் திட்டம் கைநழுவிப் போனதில் ஆத்திரமடைந்து கண வனை நிச்சயதார்த்தத்திற்குப் போக விடாமல் தடுக்கிறார். திருமணம் ஊரே புகழும்படியாக நடக்கிறது.

சில நாட்களுக்குப் பிறகு கமலாம்பாள் ஒர் ஆண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். நடராஜன் என்று பெயர் வைக்கின்றனர். இதற்கிடையில் பிரபலத்திருடனான பேயாண்டித் தேவன் சுப்பிரமணிய ஐயரின் வீட்டில் நுழைந்து நகைகளையும், ஜல்லிக்கட்டுக் காளையையும் கள வாடிச் செல்கின்றான். சுப்பிரமணிய ஐயரின் மனைவி வசிய மருந்திற்குக் கட்டுப்பட்டுப் பேயாண்டித்தேவனுக்குச் சார்பாகச் சாட்சி சொல்கிறாள். இதனால் முத்துஸ்வாமி ஐயர் அவனைக் காவல்துறையிடம் பிடித்துக்கொடு த்தும் பலன் இல்லாமல், பேயாண்டித்தேவன் விடுதலை செய்யப்படுகின்றான். விடுதலையாகி வந்தவன் முத்துஸ்வாமி ஐயரின் இர ண்டு வயதுக் குழந்தையைக் கடத்திக் கொண்டு போய் ராமசே ஐயருக்கு விற்றுவிடுகின்றான். இதனால் முத்துஸ்வாமி ஐயரின் குடும்பம் நிம்மதி இழக்கிறது.

மகளுடன் சென்னையில் வசிப்பதற்கு முத்துஸ்வாமி ஐயரும், கமலாம்பாளும் குடிபெயர்கின்றனர். சுப்பிரமணிய ஐயரின் உடல்நலம் பாதிக்கப்படுகின்றது. இதனால் ஊர் திரும்பிய அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டபடி சுப்பிரமணிய ஐயர் இறந்துவிடுகின்றார். இதற்கிடையில் பம்பாய் வியாபாரத்தில் முதலிட்டு முத்துஸ்வாமி ஐயர் ஏமாற்ற மடைந்தார். இதனால் உலக வாழ்க்கையை வெறுத்தார். நிம்மதி யைத் தேடி அலைகின்றார். பொன்னம்மாள் தன் வம்பர் சபையுடன் சேர்ந்து கமலாம்பாள் மீது பழியைக் கூறி முத்துஸ்வாமி ஐயரைப் பிரிக்கிறாள். முத்துஸ்வாமி ஐயர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்யும் போது இறையனுபவத்தைப் பெறுகின்றார்.

சச்சிதானந்த ஸ்வாமிகள் இவருக்குக் குருவாக வந்து சேருகின்றார். இவர்கள் இருவரும் காசிக்குச் செல்லுகின்றனர். சுப்பிரமணிய ஐயரின் இறப்பு பொன்னம்மாளைச் சித்தம் கலங்க வைக்கிறது. தான் செய்த துரோகத்தை வைத்தியநாத ஐயரிடம் கூறி, முத்துஸ்வாமி ஐயரிடம் மன்னிப்புக் கேட்கக் காசிக்குச் செல்லுகின்றனர். இறுதில் மனம் திருந்திய பேயாண்டித் தேவனும், நடராஜனுடன் காசிக்கு வந்தடைகிறான்.

அனைவரும் ஒன்று சேருகின்றனர். பல்வேறு துன்பங்களுக்கிடையில் முத்துஸ்வாமி ஐயர் சிற்றின்பத்திலிருந்து பிரமானந்தத்தை அடைந்த வரலாறு தான் கமலாம்பாள் சரித்திரம். இவரின் ஞானமார்க்க சிந்தனையின் ஆத்மீகநாட்டம் நாவலின் பிற்பகுதியைக் கனவு போல மாற்றிவிட்டது.

கதையமைப்பில் சிறப்புத்தன்மை

கமலாம்பாள் சரித்திரம் கதை யமைப்பில் மிகுந்த தனித்தன்மை கொண்டது. இன்றுவரையும் கருவி னால் இதனோடு பேசக்கூடிய மற்றொரு நாவல் எழுதப்படவில்லை. மானுட வாழ்வில் நிலையற்ற, அமைதியற்ற ஆன்மா அலைந்து திரிந்து இறைவனை அடைந்து அடங்குகின்றது. பொறுமையும், அமைதியும் பிரமானந்தத்தினைத் தருகின்றன. இதை எளிய நடையில் முற்றிலும் சமகால வாழ்வின் சிக்கல்களாலும் மெலி தான நகைச்சுவை மற்றும் கதைப் பின்னலாலும் தந்துள்ளார்.

ஆய்வு தொடரும்…

Related posts

குட்டிச் சிவப்புப் பிரசங்கி இவள்!!!

Thumi2021

ஏகாதிபத்தியம் Imperialism – 05

Thumi2021

விபிள்டன் 2021

Thumi2021

Leave a Comment